TA/Prabhupada 0104 - பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை நிறுத்த வேண்டும்

Revision as of 09:25, 17 October 2015 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0104 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 9.1 -- Melbourne, April 19, 1976

புஸ்த கிருஷ்ண: ஒரு மிருகத்தின் ஆன்மீக ஆன்மா, எவ்வாறு ஒரு மனிதனாக உருவெடுக்கிறது?

பிரபுபாதர்: எவ்வாறு என்றால் ஒரு திருடன் சிறைச்சாலை இருந்தான். அவன் எவ்வாறு விடுதலை பெற்றான்? சிறைச்சாலையில் அவனுடைய கஷ்டகாலம் முடிந்ததும், பிறகு அவன் மீண்டும் சுதந்திர மனிதனாகிறான். மேலும் மீண்டும் அவன் குற்றவாளியானால், அவன் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவன். ஆகையால் மனித வாழ்க்கை புரிந்துக் கொள்வதற்கானது, என்னுடைய வாழ்க்கையின் பிரச்சனை என்ன என்பதை, நான் விளக்கிக் கொண்டிருப்பது போல், நான் இறக்க விரும்பவில்லை; நான் இறப்பிற்கு தள்ளப்படுகிறேன். நான் முதியவராக விரும்பவில்லை, நான் முதியவராக இணங்க வைக்கப்படுகிறேன். ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:-க்கதோஷானு தர்ஷனம் (BG 13.9). ஆகையால் அவர், எவ்வாறு என்றால், அதே எடுத்துக்காட்டு போல், ஒரு திருடன். அவர் விடுதலை பெற்ற பின்னர், அவர் சிந்தித்தால், ஆலோசித்தால், அதாவது, "நான் ஏன் இந்த வெறுக்கத்தக்க நிலையில் ஆறு மாதத்திற்கு சிறைவாழ்க்கையில் போடப்பட்டேன்? அது மிகவும் வேதனை அளிக்கிறது," பிறகு அவர் உண்மையிலேயே மனிதராகிறார். அதேபோல், மனித இனத்திற்கு முதிர்சியடைந்த சிந்தனையின் உயர்ந்த சக்தி உள்ளது. அதாவது அவர் நினைத்தால் "நான் ஏன் இந்த வெறுப்பான நிலைக்கு தள்ளப்பட்டேன்?" அவர் வெறுக்கத்தக்க நிலையில் உள்ளார் என்பதை, எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறார், ஆனால் அங்கு சந்தோஷமில்லை. ஆகையால் அந்த சந்தோஷத்தை எவ்வாறு பெறுவது? அந்த வாய்ப்பு மனித இனத்திடம் இருக்கிறது. ஆனால் பௌதிக இயற்கையின் கருணையால், நாம் மனித இனமானால், மேலும் நாம் அதை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால், இந்த ஆசீர்வாதத்தை, பூனைகள் நாய்கள் அல்லது மற்ற மிருகங்களைப் போல தவறாக பயன்படுத்தினால், பிறகு நாம் மீண்டும் மிருகங்களாக தோன்றி, அந்த தவணை முடிந்தவுடன், அது மிகவும் நீண்ட காலம் எடுக்கும், ஏனென்றால் அங்கே பரிணாமம் சார்ந்த செயல்முறை உள்ளது. ஆகையால் தவணை முடிந்தவுடன் நீங்கள் மீண்டும் மானிட பிறவி எடுப்பீர்கள். நுண்மையாக அதே எடுத்துக்கட்டு: ஒரு திருடன், சிறைச்சாலையில் அல்லது சிறைக்காலம் முடிந்ததும், அவன் மீண்டும் சுதந்திர மனிதனாவான். ஆனால் மீண்டும் குற்றம் புரிந்தால்; மறுபடியும் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும். ஆகையால் அங்கே பிறப்பும் இறப்பும் சுழற்சியாக இருக்கிறது. நாம் நம்முடைய மனித வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்தினால், பிறகு நாம் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை நிறுத்தலாம். மேலும் இந்த மனித வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்தவில்லை என்றால், மீண்டும் நாம் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சிக்கு சென்றுவிடுவோம்.