TA/Prabhupada 0117 - இலவச ஹோட்டல் மேலும் இலவசமாக தூங்குவதற்கான தங்குமிடம்

Revision as of 09:19, 12 January 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0117 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 7.9.24 -- Mayapur, March 2, 1976

இதுதான் அந்த எண்ணம், பணியாளராவது மேலும் ஒரு பெண் பணியாளராவது. இது மனித நாகரிகத்தின் சிறந்த கொள்கை. ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனின் பெண் பணியாளராக முயற்சி செய்ய வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆணும் கிருஷ்ணரின் நூறு மடங்கு பணியாளராக முயற்சி செய்ய வேண்டும். இதுதான் இந்திய நாகரிகம், "கணவனும் மனைவியும், தாம் நிகரான உரிமை பெற்றவர்." என்பதல்ல. அதாவது ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில், இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, "சமமான உரிமை." இது வேத நாகரிகம் அல்ல. வேத நாகரிகம் என்பது கணவன் கிருஷ்ணரின் உண்மையான பணியாளராக இருக்க வேண்டும், மேலும் மனைவி, கணவனின் உண்மையான பெண் பணியாளராக இருக்க வேண்டும்.

ஆகையால் இங்கு கூறப்பட்டுள்ளது, உபனய மாம் நிஜ-ப்ருத்ய-பார்ஸ்வம் (SB 7.9.24). இதுதான் சிறந்து தோழமை. எப்போது நாரத முனிவர் விவரித்துக் கொண்டிருந்த போது, ஒரு ஆண் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும், பெண்கள் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்..., நாம் தற்பொழுது கலந்துரையாடிக் கொண்டிருக்கிறோம் நம்முடைய நாடா சொல் வாங்கியில். நீங்கள் பிறகு இதை கேட்பீர்கள். அதாவது அப்படி ஒன்று எஜமானராக வருவதற்கில்லை. அது பயனற்றது. நீங்கள் எஜமானராக முடியாது. அஹங்கார வீமூடாத்மா கர்த்தாஹமிதிமன்யதே (BG 3.27). நீங்கள் எஜமானராக முடியாது. ஜீவரே ஸ்வரூப ஹயநித்ய கிருஷ்ண தாஸ (CC Madhya 20.108-109). ஆணோ அல்லது பெண்ணோ, ஒவ்வொருவரும் கிருஷ்ணரின் சேவகர்களே. நாம் அந்த தளத்தில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும், எவ்வாறு சிறந்த சேவகர்களாவது என்று, நேரடியான சேவகராக மட்டுமல்ல, ஆனால் சேவகர்களின், சேவகர்களாக. இதைத்தான் பரம்பரா சேவகர்கள் என்று அழைக்கிறோம். என் ஆன்மீக குரு அவருடைய ஆன்மீக குருவின் சேவகர், மேலும் நானும் என் ஆன்மீக குருவின் சேவகர். அதேபோல், நாம் நினைக்கிறோம் "சேவகரின் சேவகன்." எதாவது ஆவதற்கு கேள்வியில்லை.., இதுதான் ஜட நோய் (CC Madhya 13.80).

கிருஷ்ண புலிய ஜீவ போக வான்சா காரே பாஸதே மாயா தாரே ஜாபதீயாதாரே.

நாம் தற்பெருமை மிக்கவரான உடனடியாக - "இப்போது நான் எஜமானர் ஆவேன். நான் வெறுமனே கட்டளையிடுவேன். நான் யாரையும் பின்பற்ற மாட்டேன்" - அதுதான் மாயா.

ஆகையால் அந்த நோய் நடந்துக் கொண்டிருக்கிறது ப்ரமாவிடமிருந்து ஆரம்பித்து தரம் தாழ்ந்த எறும்புவரை. எஜமானாராகும் இந்த போலியான மதிப்புமிக்க நிலையை, பிரகலாத மஹாராஜ் புரிந்துக் கொண்டார். அவர் கூறுகிறார் அதாவது "இந்த போலியான காரியங்கள் பற்றி நான் கொஞ்சம் உணர்ந்திருக்கிறேன். அன்புடன் என்னை இதில் ஈடுபடுத்துங்கள்" நிஜ-ப்ரித்ய-பார்ஸ்வம். நிஜ-ப்ரித்ய-பார்ஸ்வம். என்றால் வேலை பழகுபவர். வேலை பழகுபவர், ஒரு வேலை பழகுபவர் ஒரு வல்லுனருடன் ஈடுபடுத்தப்படுவார். படிப்படியாக வேலை பழகுபவர் வேலைகளை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்வார். ஆகையினால் அவர் கூறுகிறார், நிஜ-ப்ரித்ய-பார்ஸ்வம். "நான் உடனடியாக திறமையான சேவகனாய் ஆனேன் என்று பொருள்படாது, ஆனால் என்னை விடுங்கள்...," எங்களுடைய இந்த ஸ்தாபனம் அந்த குறிக்கோளுடையது. யாராவது இங்கு வருவது, இலவச ஹோட்டல் மேலும் இலவசமாக தூங்குவதற்கான தங்குமிடத்திற்கு என்றால், பிறகு அவர் இந்த கூட்டமைப்பிற்கு வருவது பயனற்றது. அவர் உபசரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நிஜ-ப்ரித்ய-பார்ஸ்வம். உபசரிப்பவர்கள், அவர்கள்..., ஒருவர் அவரிடமிருந்து இருபத்திநான்கு மணி நேரமும் எவ்வாறு அவர் உபச.ரிக்கிறார் என்று கற்க வேண்டும், பிறகு நம் இந்த ஸ்தாபனத்தில் சேர்வது வெற்றிகரமாகும். மேலும் நாம் அதை அதாவது இப்படி எடுத்துக் கொண்டால் "இதோ இங்கு ஒரு ஸ்தாபனம் இருக்கிறது, இலவச ஹோட்டல் கிடைக்கும், இலவச வசிப்பிடம் மேலும் இலவச புலன்நுகர்வு," பிறகு முழு ஸ்தாபனமும் பழுதடைந்துவிடும், கவனமாக இருங்கள். அனைத்து ஜிபிசியும், மிக கவனமாக இருந்து இது போன்ற மனப்பாங்கு வளரவிடாமல் காக்க வேண்டும், ஒவ்வொருவரும் உபசரிப்பதில் ஆர்வமாக இருக்க வேண்டும், உபசரிக்க கற்க வேண்டும். நிஜ-ப்ரித்ய-பார்ஸ்வம். பிறகு வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். மிக்க நன்றி.