TA/Prabhupada 0131 - தந்தையிடம் சரணடைவது ஓரளவுக்கு இயல்பானதுதான்

Revision as of 13:17, 18 February 2016 by Modestas (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0131 - in all Languages Category:TA-Quotes - 1966 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 7.11-16 -- New York, October 7, 1966

இந்த பைத்தியம், இந்த பிரமை, இந்த பௌதிக உலகின் மாயை, இதை வெல்வது மிகவும் கடினமாகும். இது மிகவும் கடினமாகும். ஆனால் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், மாமேவ யே பிரபத்யன்தே மாயாமேதாம் தரந்தி தே (BG 7.14). யாராவது தன்னிச்சையாக, அல்லது தன் வெறுப்பான வாழ்க்கையை புரிந்துக் கொண்டு, அவர் கிருஷ்ணரிடம் சரணடைந்தால், "என் அன்புள்ள கிருஷ்ண, நான் தங்களை பல ஜென்மங்களாக மறந்துவிட்டேன். இப்பொழுது தாங்கள் தான் என் தந்தை என்பதை நான் புரிந்துக் கொண்டேன், தாங்கள் தான் என் பாதுகாவலர். நான் தங்களிடம் சரணடைகிறேன்." எவ்வாறு என்றால் வழி தவறிப் போன பிள்ளை தந்தையிடம் செல்வது போல், "என் அன்புள்ள தந்தை, அது என்னுடைய அறியாமை, அதனால் நான் தங்களுடைய பாதுகாப்பிலிருந்து சென்றுவிட்டேன், ஆனால் நான் கஷ்டப்பட்டுவிட்டேன். இப்போது நான் தங்களிடம் வந்துவிட்டேன்," என் அன்புள்ள புத்திரா, நீ வந்து சேர். உனக்காக இத்தனை நாட்களும் நான் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். ஓ, நீ வந்துவிட்டதால் சந்தோஷமாக இருக்கிறது." தந்தை மிகுந்த இளகிய மனமுடையவர். ஆகையால் நாமும் அதே நிலையில் இருக்கிறோம். நாமே முழுமுதற் கடவுளிடம் சரணடைந்தவுடனே...., அது ஒன்றும் மிக கடினமல்ல. மகன் தந்தையிடம் சரணாகதியடைவது, இது மிகவும் கடினமான வேலையா? இது மிகவும் கடினமான வேலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு மகன் தன்னுடைய தந்தையிடம் சரணடைகிறான். இது ஓரளவுக்கு இயல்பானதுதான். அதில் அவமானம் ஏதுமில்லை. தந்தை எப்போதும் மேலானவர். ஆகையால் என் தந்தையின் பாதத்தை நான் தொட்டால், என் தந்தையின் முன் நான் தலை வணங்கினால், அது மகிமை. அது எனக்கு உன்னதமானது. அதில் இகழ்ச்சி இல்லை. அதில் கடினம் இல்லை. நாம் ஏன் கிருஷ்ணரிடம் சரணடையக் கூடாது?

ஆகையினால் இதுதான் செயல்முறை. மாமேவ யே பிரபத்யன்தே. "மனங்குழம்பிய இந்த அனைத்து ஜீவாத்மாக்களும், என்னிடம் அவர்கள் சரணடையும் போது," மாயாமேதாம் தரந்தி தே (BG 7.14). "அவருக்கு வாழ்க்கையின் எந்த அவலநிலையும் இனி இருக்காது." அவர் உடனடியாக தந்தையின் பாதுகாப்பின் கீழ் வருகிறார். பகவத்-கீதையின் இறுதியில் நீங்கள் காணலாம், அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (ப.கீ.18.66). குழந்தை தாயிடம் தாய் பால் குடிக்க வரும் போது, தாய் பாதுகாக்கிறார். அங்கு ஏதாவது ஆபத்து இருந்தால், தன் உயிரை முதலில் கொடுக்க தாய் தயாராக இருக்கிறார், பிறகு குழந்தையின் உயிர். அதேபோல், நாம் பகவானின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் போது, பிறகு அங்கே அச்சம் இல்லை.