TA/Prabhupada 0143 - அங்கே கோடிக் கணக்கான மேலும் லட்சக்கொடி பேரண்டங்கள் உள்ளன

Revision as of 10:25, 22 April 2016 by Lucija (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0143 - in all Languages Category:TA-Quotes - 1970 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Sri Isopanisad, Mantra 13-15 -- Los Angeles, May 18, 1970

"ஓ பகவானே, வாழும் அனைவரையும் தாங்கிப்பிடிப்பவரே, தங்களுடைய நித்தியமான முகம் தங்களுடைய ஒளி வீசுகின்ற ப்ரமஜோதியால் மறைக்கப்பட்டுள்ளது. கருணை கூர்ந்து அந்த திரையை தாங்களே அகற்றி தாங்களுடைய, தூய்மையான பக்தர்களுக்கு காட்சி அளியுங்கள்."

இதோ இருக்கிறது வேத ஆதாரம். இது ஈஸோபநிஷத் வேதமாகும் , யஜுர் வேதத்தின் ஒரு பகுதி. ஆகையால் இங்கு கூறப்பட்டுள்ளது, ஹிரண்மயென பாத்ரேண சத்யஸ்ய அபிஹிதம் முஹம். எவ்வாறு என்றால் சூரியனைப் போல். அங்கே சூரிய கொள்கிரகத்தில், அங்கிருக்கிறார் ஆதிக்கம் செலுத்தும் ஸ்ரீமூர்த்தி, அவர் பெயர் விவஸ்வான். நமக்கு கிடைத்துள்ளது, இந்த விபரத்தை நாம் பகவத்-கீதையிலிருந்து தெரிந்துக் கொண்டோம். விவஸ்வான் மனவேப்ராஹ. ஆகையால் அனைத்து கோள்கிரகத்திலும் ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஸ்ரீமூர்த்தி இருக்கிறார். எவ்வாறு என்றால் உங்களுடைய இந்த கோள்கிரகத்திலும், ஸ்ரீ மூர்த்தி இல்லையெனில், ஜனாதிபதி போல் யாராவது இருப்பார்கள். முற்காலத்தில், இந்த கோள்கிரகத்தில் ஒரே ஒரு அர்சர் மட்டுமே மஹாராஜ பரீக்ஷித் காலம் வரை இருந்தார். ஒரே அரசன். அங்கே ஒரே கொடிமட்டும் இருந்தது கோள்கிரகம் முழுமையும் ஆட்சி செய்தார். அதேபோல், அனைத்து கோள்கிரகத்திலும் அங்கே ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஸ்ரீ மூர்த்தி இருக்கிறார். ஆகையால் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது, ஆதிக்கம் செலுத்தும் பரம ஸ்ரீ மூர்த்தி கிருஷ்ணர், ஆன்மீக உலகிலும், ஆன்மீக வானில் ஆக உயர்ந்த கோள்கிரகத்திலும். இது பௌதிக வானம். இந்த பௌதிக வானில் இதுவும் ஒரு பேரண்டம். அங்கே கோடிக் கணக்கான மேலும் லட்சக்கொடி பேரண்டங்கள் உள்ளன. மேலும் இந்த பேரண்டத்தினுள் அங்கே கோடிக்கணக்கான, மேலும் லட்சக்கோடி கோள்கிரங்கள் உள்ளன. யஸ்ய ப்ரபா ப்ரபவதொ ஜகத்-அண்ட கோடி (பர.ஸ.5.40). ஜகத்-அண்ட. ஜகத்-அண்ட என்றால் பேரண்டம். அண்ட: எவ்வாறு என்றால் ஒரு முட்டை போல், இந்த முழு பேரண்டம். கோடி. கோடி என்றால் பல நூறு ஆயிரங்கள். ஆகையால் ப்ரமஜோதியில் பல நூறு ஆயிரங்களான இந்த பேரண்டங்கள் உள்ளன. மேலும் இந்த பேரண்டத்தினுள்ளும் பல நூறு ஆயிரங்களில் கோள்கிரகங்கள் உள்ளன. அதேபோல், ஆன்மீக வானிலும், பல நூறு ஆயிரங்களில், கணக்கற்ற எண்ணிக்கையில் வைகுண்டங்களும், கோள்கிரகங்களும் உள்ளன. ஒவ்வொரு வைகுண்ட கோள்கிரகமும் முழுமுதற் கடவுளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. கிருஷ்ண கோள்கிரகத்தை தவிர, மற்ற அனைத்து வைகுண்ட கோள்கிரகங்கள், அவை ஸ்ரீ நாராயணரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாராயணருக்கும் வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன, அதில் சிலவற்றை நாம் அறிவோம். இப்போது நாம் தெரிவித்த ப்ரதுய்ம்ன, அனிருத்ஹ, ஸண்கர்ஸண.., நம்மிடம் கிடைத்தது இருபத்தி-நான்கு பெயர்கள் மட்டுமே, ஆனால் அங்கே இன்னும் பல உள்ளன. அத்வைதம் அச்சுதம் அணாதிம் அனந்த-ரூபம் (.பர.ஸ.5.33).

ஆகையால் இந்த கோள்கிரகங்கள் ப்ரமஜோதியின் சுடரொளியால் மறைக்கப்பட்டுள்ளன. ஆகையால் இங்கு வணங்கப்படுவது அதாவது ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம். அபிஹிதம் என்றால் மறைக்கப்படுதல். எவ்வாறு என்றால் உங்களால் சூரிய பூகோளத்தை காண முடியாத காரணம் இந்த ஒளி வீசுகின்ற சூரிய ஒளியால். அதேபோல், இந்த கிருஷ்ண கோள்கிரகம், இங்கு உங்களுக்கு அந்த சித்திரம் உள்ளது. கிருஷ்ண கோள்கிரகத்திலிருந்து சுடரொளி வெளியே தோன்றுகிறது. ஆகையால் ஒருவர் இந்த சுடரொளியை ஊடுருவிச் செல்ல வேண்டும். அது இங்கு வணங்கப்பகிறது. ஹிரண்மயேன பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம். இந்த உண்மையான பூரண உண்மை, கிருஷ்ணர், அவருடைய கோள்கிரகம் பிரமன் சுடரொளியால் மறைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பக்தர் வணங்குகிறார், "கருணையொடு அதை விளக்குங்கள். அதை சுற்றுங்கள், அப்போதுதான் நான் தங்களை உண்மையாக பார்க்க முடியும்." ஆகையால் ப்ரமஜோதி, மாயாவாத தத்துவ ஞானிகளுக்கு, ப்ரமஜோதிக்கு அப்பால் அங்கே எதாவது இருக்கும் என்று அறியமாட்டார்கள். இதோ இருக்கிறது வேத ஆதாரம், அதாவது ப்ரமஜோதி சும்மா பொன்னான சுடரொளி போன்றது. ஹிரண்மயேன பாத்ரேண. நித்தியமான பரமனின் உண்மையான திருமுகத்தை இது மறைக்கிறது. தத்வம் பூஷன்ன அபாவுருணு. ஆகையால், "தாங்களே தாங்கிப்பிடிப்பவர், தாங்களே பராமரிப்பவர். கருணையோடு இதை அகற்றிவிடுங்கள், தங்களுடைய உண்மையான திருமுகத்தை நாங்கள் அப்போதுதான் காண முடியும்,"