TA/Prabhupada 0144 - இதுதான் மாயா என்றழைக்கப்படுகிறது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0144 - in all Languages Category:TA-Quotes - 1970 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 10:36, 22 April 2016



Invalid source, must be from amazon or causelessmery.com

Sri Isopanisad, Mantra 2-4 -- Los Angeles, May 6, 1970

ப்ரக்ருதே க்ரியமாணானி குணை: கர்மாணிஸர்வஷ அஹங்கார வீமூடாத்மா கர்த்தாஹமிதிமன்யதே: (BG 3.27). பக்தர்களிடம், கிருஷ்ணர் தானே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார், மேலும் சாதாரண உயிர்வாழிகளுக்கு, பொறுப்பு மாயாவால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாயாவும் கிருஷ்ணரின் பிரதிநிதியே. எவ்வாறு என்றால் நல்ல குடிமக்கள், அரசாங்கத்தினரால் நேரடியாக கவனிக்கப்படுகிறார்கள், மேலும் குற்றவாளிகள், அவர்கள் அரசாங்கத்தால், சிறைச்சாலை இலாக்காவின் மூலம் கவனிக்கப்படுகிறார்கள், குற்றவாளிகள் இலாக்காவின் மூலம். அவர்களும் கவனிக்கப்படுகிறார்கள். சிறைச்சாலையில் அரசாங்கம், குற்றவாளிகள் செளகரியமான நிலையில் இருக்க நன்கு கவனிக்கிறது - அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கிறது; அவர்களுக்கு உடல் நலமில்லை என்றால் மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். அனைத்து பராமரிப்பும் அங்கிருக்கிறது, ஆனால் தண்டனையுடன். அதேபோல், நாம் இந்த ஜட உலகில், நிச்சயமாக அங்கே பராமரிப்பு இருக்கும், ஆனால் தண்டனைக்குரிய முறையில். நீங்கள் இதைச் செய்தால், பிறகு அறை. நீங்கள் இதைச் செய்தால், பிறகு உதை. நீங்கள் இதை செய்தால், பிறகு இது. இது தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இதை மூவகைத் துயரங்கள் என்றழைக்கிறோம். மாயாவின் மந்திரவாசகத்தின் கீழ் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் அதாவது மாயாவை உதைப்பது, அறைவது, தோற்கடிப்பது மிகவும் நன்று. நீங்கள் பாருங்கள்? இதுதான் மாயா என்றழைக்கப்படுகிறது. நீங்கள் கிருஷ்ண உணர்வுக்கு வந்த உடனடியாக, கிருஷ்ணர் உங்களை பாராமரிக்கிறார். அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: (BG 18.66). கிருஷ்ணர், நீங்கள் சரணடைந்தவுடனேயே, கிருஷ்ணரின் உடனடி வார்த்தை, " நான் உங்களை பாதுகாக்கிறேன். நான் உங்களை அனைத்திலிருந்தும் பாதுகாக்கிறேன், அனைத்துப் பாவச் செயல்களில் இருந்தும்." பல பிறவிக்குப் பின் பிறவி என்று இந்த ஜட உலகில், நம் வாழ்க்கையில் பெரும்குவியலான பாவ எதிர் நடவடிக்கைகள் உள்ளன. மேலும் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைந்தவுடனேயே, உடனடியாக கிருஷ்ணர் உங்களை பாதுகாக்கிறார் மேலும் அவர் அனைத்து பாவச் செயல்களையும் எவ்வாறு சரி செய்வது என்பதையும் நிர்வகிக்கிறார். அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச: கிருஷ்ணர் கூறுகிறார், "தயங்காதீர்கள்." "ஓ, நான் பல பாவச் செயல்களை செய்திருக்கிறேன். கிருஷ்ணர் எவ்வாறு என்னை காப்பாற்றுவார்?" என்று நீங்கள் நினைத்தால். இல்லை. கிருஷ்ணர் அனைத்து சக்தியும் நிறைந்தவர். அவரால் உங்களை காப்பாற்ற முடியும். உங்களுடைய வேலை அவரிடம் சரணடைவது, மேலும் எந்த முன்பதிவும் இல்லாமல், உங்கள் வாழ்க்கையை அவருக்கு தொண்டாற்ற அர்ப்பணியுங்கள், அவ்விதமாக நீங்கள் காப்பாற்றபடுவீர்கள்.