TA/Prabhupada 0154 - உங்கள் அறிவு என்னும் ஆயுதத்தை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருங்கள்

Revision as of 15:18, 6 December 2016 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0154 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Room Conversation -- May 7, 1976, Honolulu

தமால் கிருஷ்ண: தங்களுடைய கட்டுரை பரமபதம் அடைதலில் (Back To Godhead ) மக்ஸ்சைப் பற்றி, தாங்கள் வெற்றுரை என்று அழைத்தீர்கள், மக்ஸ்சிஸம் வெற்றுரை என்றழைத்தீர்கள்.

பிரபுபாதர்: ஆம், அவருடைய தத்துவம் என்ன? சொற்ப்போர்?

தமால் கிருஷ்ண: வாதம் சார்ந்த உலோகாயதம் கொள்கை.

பிரபுபாதர்: ஆகையால், நாம் ஒரு வாதம் சார்ந்த ஆன்மீக கொள்கைப் பற்றி எழுதியிருக்கிறோம்.

ஹரி செளரி: ஹரிகெஸஸ்.

பிரபுபாதர்: ஹரிகெஸ.

தமால் கிருஷ்ண: ஆம், அவர் அதை எங்களுக்கு படித்துக் காட்டினார். அவர் சமயச் சொற்பொழிவாற்றுகிறார், சில சமயங்களில் கிழக்கு ஐரோப்பாவில் என்று நினைக்கிறேன். நாங்கள் ஓர் அறிக்கை பெற்றோம். அவர் தங்களுக்கு எழுதினாரா?

பிரபுபாதர்: ஆம், நான் அதை கேள்விப்பட்டேன், ஆனால் அவர் ஒழுங்காக இருக்கின்றாரா இல்லையா?

தமால் கிருஷ்ண: அவர் அறிக்கையிலிருந்து அவர் எப்பொழுதாவது கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வார் என்று தோன்றுகிறது. அவர் பெரும்பாலும் இங்கிலாந்து, ஜெர்மனியும் ஸ்கேன்டிநேவிய நாடுகளில் கவனத்தைச் செலுத்துகிறார். அவருடன் ஒரு குழுவினர் உள்ளனர், மேலும் அவர்கள் உரையாடலில் ஈடுபட்டும், புத்தகங்கள் வினியோகமும் செய்கிறார்கள். மேலும் சிலசமயங்களில் அவர் எந்த நாட்டிற்குச் சென்றார்? பக்தர்கள்: செக்கொஸ்லொவாக்கியா, ஹங்கேரி, புடாபஸ்ட்.

தமால் கிருஷ்ண: அவர் சில பொது உடைமைக் கொள்கை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்.

பக்தர்கள்: அவர்களுடைய வாகனத்தில் போலியான அடித்தளம் செய்து மேலும் புத்தகங்களை அடியில் மறைத்து எல்லையில் உள்ளவர்கள் பார்க்க முடியாதபடி செய்கிறார்கள். வாகனத்தின் அடியில் இருப்பது அனைத்தும் தங்களுடைய புத்தகங்கள். நாட்டிற்குள் சென்றதும் பிறகு அவர்கள் புத்தகங்களை இந்த மாணவர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

தமால் கிருஷ்ண: புரட்சி.

பிரபுபாதர்: இது மிகவும் சிறந்தது.

பக்தர்கள்: சில சமயங்களில் அவர் கூறியிருக்கின்றார் அவர் பேசிக்கொண்டிருக்கும் போது, மொழிபெயர்ப்பாளர் அவர் சொல்லிக் கொண்டிருப்தை கூறமாட்டார் ஏனென்றால்,

தமால் கிருஷ்ண: சமயங்களில் அவர் மறந்துவிடுவார்- வழக்கமாக அவர் கவனமாக பேசுவார் - பாதுகாப்பான வார்த்தைகள். ஆனால் அவர் கூறினார் ஒன்று அல்லது இரண்டு முறைகள் அவர் நேரடியாக கிருஷ்ணர் உணர்வைப் பற்றி பேசத் தொடங்கினார், மேலும் மொழிபெயர்ப்பாளர் அவரை கவனித்து உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்க்கமாட்டர். சில சமயங்களில் அவர் தன்னை மறந்து கிருஷ்ணரை பற்றி அவர்தான் முழுமுதற் கடவுள் என்று பேச ஆரம்பித்துவிடுவார் மேலும் மொழிபெயர்ப்பாளர் திடீரென அவரை நோக்குவர். வழக்கமாக அவர் அனைத்தையும் உறைத்துவிடுவார்.

பிரபுபாதர்: அவர் ஓர் நன்மையான வேலை செய்திருக்கிறார்.

தமால் கிருஷ்ண: அவர் ஓர் தகுதி வாய்ந்த மனிதர், மிகுந்த திறமைசாலி.

பிரபுபாதர்: ஆகையால் இதன் வழியாக. . . நீங்கள் அனைவரும் திறமைசாலிகள், நீங்கள் திட்டம் தீட்டலாம். இதன் நோக்கம் யாதெனில் எவ்வாறு புத்தகங்களை விநியோகிப்பது. அதுதான் முதல் முக்கியத்துவம். நமக்கு இந்த உடலும் பல அங்க உறுப்புக்களும் உள்ளன என்று பகவத்கீதையில் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு என்றால் அர்ஜுனர் தேரில் அமர்ந்து இருப்பதுபோல். ஒரு தேர் ஓட்டி, பல குதிரைகள், கடிவாள் வார், அங்கே இருக்கின்றன. அங்கே திடல், அம்பும் வில்லும் இருக்கின்றன. அவை சித்தரித்து காட்டப்பட்டுள்ளன. ஆகையால் இவைகளை நம் கிருஷ்ணர் உணர்வின் பகைவர்களை கொல்லுவதற்கு பயன்படுத்தலாம் மேலும் இந்த செயிலுக்கு தேவையான உபகரணங்களை கைவிட்டுவிடலாம், தேர், நாம்..., எவ்வாறு என்றால் போரிட்டபின், வெற்றி மட்டும், பிறகு நீங்கள் அவர்களை கொன்றுவிடுங்கள். மேலும் அதேபோல் இந்த உடல் அங்கிருகிறது, மனம் அங்கிருகிறது, புலன்கலும் அங்கிருகிறது. ஆகையால் இந்த பௌதிக வாழ்க்கையை வெற்றி கொள்ள இதை பயன்படுத்துங்கள். அதன் பிறகு இந்த உடலைவிட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் வீடுபேறு அடையுங்கள்.

தமால் கிருஷ்ண: பக்தர்கள், நான் கூறுவதாவது, தாங்கள் எங்களுக்கு எப்பொழுதும் உற்சாகமூட்டி முன்னேற தள்ளுவது போல்...,

பிரபுபாதர்: அது உங்கள் திறமை என்னும் ஆயுதங்களை கூர்மைப்படுத்துதல். அதுவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக குருவிற்கு சேவை செய்வதன் மூலம், உங்கள் அறிவு என்னும் ஆயுதங்களை எப்பொழுதும் கூர்மையாக வைத்திருப்பீர்கள். பிறகு கிருஷ்ணரின் உதவியை நாடுங்கள். ஆன்மீக குருவின் வார்த்தைகள் ஆயுதங்களை கூர்மையாக்கும். மேலும் யஸ்ய ப்ரஸாதாத் பகவத் ப்ரஸாதோ..., மற்றும் ஆன்மீக குரு மகிழ்ச்சி அடைகிறார், பிறகு கிருஷ்ணர் உடனடியாக உதவி புரிக்கிறார். அவர் உங்களுக்கு வலிமை அளிக்கிறார். ஒருவேளை உங்களிடம் கூர்மையான வாள் இருக்கிறது, ஆனால் வலிமை இல்லையெனில், அந்த வாளை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? கிருஷ்ணர் உங்களுக்கு வலிமை அளிப்பார், எதிரியை எவ்வாறு போரிட்டு கொள்வதென்று. அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் சைதன்ய மஹாபிரபு (கூறியுள்ளார்) குரு-க்ருஷ்ண-க்ருபாய (ஸிஸி. மத்திய 19.151), உங்கள் ஆயுதங்களை ஆன்மீக குருவின் அறிவுரைப்படி கூர்மையாக்குங்கள், பிறகு கிருஷ்ணர் உங்களுக்கு திறமையை அளிப்பார், நீங்கள் வெற்றி கொள்ள முடியும். இந்த சித்தரிக்கப்பட்ட விபரங்களை நான் நினைக்கிறேன் நேற்றிரவு நான் கூறினேன். இதோ ஒரு செய்யுள், அச்சுத பால, அச்சுத பால. புஸ்த கிருஷ்ண இங்கிருக்கின்றாரா?

ஹரி செளரி: புஸ்த கிருஷ்ண?

பிரபுபாதர்: நாம் கிருஷ்ணரின் படைவீரர்கள், அர்ஜுனரின் சேவகர்கள். வெறுமனே நீங்கள் அதற்கேற்ப நடக்க வேண்டும், பிறகு நீங்கள் எதிரிகளை முறியடித்துவிடுவீர்கள். அவர்களின் எண்ணிக்கை நூறு மடங்காயினும், அவர்களுக்கு சக்தி இல்லை. எவ்வாறு என்றால் குருக்களும் பாண்டவர்களும் போல். அவர்களுக்கு சக்தியில்லை, யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ: (ப.கீ. 18.78). கிருஷ்ணரை உங்கள் பக்கம் சேர்த்துக் கொள்ளுங்கள், பிறகு அனைத்தும் வெற்றி அடையும். தத்ர ஸ்ரீர் விஜயோ.