TA/Prabhupada 0164 - கடவுளை அடையும் வழியை எளிமைப்படுத்துவதே வர்ணாஸ்ரம தர்மம்

Revision as of 09:07, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 French Pages with Videos Category:Prabhupada 0164 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Co...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Room Conversation Varnasrama System Must Be Introduced -- February 14, 1977, Mayapura

ஹரி-சௌரி : ஆனால் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தன்னுடைய நடைமுறை போதனையில் மக்களை பகவான் நாமத்தை உச்சரிக்கவே தூண்டினார்.

பிரபுபாதா: அது சாதாரண மனிதனுக்கு சாத்தியமில்லை. (அவரைப்போல் தூண்டுவதற்கு)

ஹரி-சௌரி: என்ன? நாம உச்சரிப்பை தூண்டுவது சாத்தியமில்லைய? சைதன்ய மகா பிரபு இதை மட்டும் தானே அறிமுகப்படுத்தினார்.

பிரபுபாதா: ஆனால் யார் பகவான் நாமத்தை உண்மையாக உச்சரிப்பார்?

சத்ஸ்வருபா: பகவான் நாமத்தை உச்சரிப்பது எளிய செயல். இதை செய்ய முடியவில்லைஎன்றால் அவர்களால் வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடிக்க முடியாது.

பிரபுபாதா: மக்கள் பகவான் நாமத்தை உச்சரிப்பர். ஆனால் சைதன்ய மகாபிரபுவைப்போல் உச்சரிக்க முடியாது அவர்களால் 16 சுற்று கூட உச்சரிக்க முடியாது. அவ்வாறிருக்க இந்த மூடர்களால் எவ்வாறு சைதன்ய மகாபிரபுவைப்போல் ஆகமுடியும்.

சத்ஸ்வருபா: இல்லை. ஆனால் அவர்கள் பகவானின் நாமத்தை உச்சரித்து பிரசாதம் மட்டும் சாப்பிட்டு வந்தார்களானால் ...

பிரபுபாதா: ஹரே கிருஷ்ணா ஜபம் எப்போதும் நடந்து கொண்டிருக்கும். அது நிறுத்தப்பட மாட்டாது. அதே நேரத்தில் கடவுளை அடையும் வழியை மேலும் எளிமையாக்க வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

ஹரி-சௌரி : ஆனால் நான் புரிந்து கொண்டதின்படி, இந்த கலியுகத்தில் வர்ணாஸ்ரம தர்மம் சாத்தியமில்லை. எனவே நாம ஜபம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரபுபாதா: நாம ஜபம் உங்கள் உள்ளத்தை சுத்தம் செய்வதால், அது நிறுத்தப்படமாட்டாது.

ஹரி-சௌரி : எனவே வர்ணாஸ்ரம தர்மத்திற்கு மாற்றாக, நாம ஜபம் அறிவுறுத்தப்படுவதாக புரிந்து கொண்டுள்ளேன்.

பிரபுபாதா: ஆம். அது மாற்று தான். ஆனால் யார் அதை மாற்றாக ஆக்கப்போகிறார்கள்.? மக்கள் இன்னும் முன்னேறவில்லை. நீங்கள் ஹரி தாஸ் தாகுரைப் போல் நாம ஜபம் செய்ய இயலாது.

சத்ஸ்வருபா: நாங்கள் அவர்களை வேலைக்கும் போக சொல்லுவோம். அத்துடன் நாம ஜபம் செய்ய போதிப்போம்.

பிரபுபாதா: ஆம். பக்தி வினோதா தாகூர் சொல்லியிருக்கிறார் "Thākaha āpanāra kāje" Āpanāra kāja ki. சைதன்ய மகாபிரபு "sthāne sthitaḥ."என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அதாவது ஒருவர் தொடர்ந்த பயிற்சியில் ஒழுக்கமாக ஈடுபடவேண்டும். அவ்வாறு இல்லாவிடில் சஹஜியாக்கள் செய்த ஜபமாகத்தான் இருக்கும். சஹாஜியாக்களும் கையில் ஜபமாலையை வைத்துக்கொண்டு நாம ஜபம் செய்தனர். ஆனால் அவர்கள் பல பெண்களை மணந்தனர். இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கும். மது விஸாவைப்போல்..அவன் சந்நியாசம் பெறுவதற்குரிய தகுதி இல்லாமல், சந்நியாசம் தரப்பட்டான். ஆனால் 5 பெண்களுடம் கள்ளத்தனமாக தொடர்பு கொண்டிருந்தான். எனவே வர்ணாஸ்ரம தர்மம் கண்டிப்பாக வேண்டும். வெறும் காட்சிக்காக செய்வது உதவாது. எனவே வர்ணாஸ்ரம தர்மம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

சத்ஸ்வருபா: கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மூலம் அது அறிமுகப்படுத்தப்படுகிறதா ?

பிரபுபாதா: ஆம். ஆம். "Brāhmaṇa, kṣatriyas". முறையான பயிற்சி கண்டிப்பாக தரப்படவேண்டும்.

ஹரி-சௌரி: ஆனால் நம் இயக்கத்தில் நாம் ஒரு வைஷ்ணவராவதற்கு பயிற்சி தர வேண்டும் அல்லவா?

பிரபுபாதா: ஆம்!

ஹரி-சௌரி: அப்படியானால் , அதை எவ்வாறு நாங்கள் நடைமுறைப் படுத்துவது?

பிரபுபாதா: வைஷ்ணவராவது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. வர்ணாஸ்ரம தர்மத்தை கடைபிடித்தால் தான் வைஷ்ணவராக முடியும். வைஷ்ணவராவது எளிய விஷயம் அல்ல.

ஹரி-சௌரி: ஆம். அது மலிவான விஷயம் அல்ல.

பிரபுபாதா: எனவே தான், இந்த வர்ணாஸ்ரம கொள்கைகள் வேண்டும். ஏனெனில் வைஷ்ணவராவது சுலபம் அல்ல. வைஷ்ணவராவது எளிய விஷயம் என்றால், பலர் தோல்வி அடைந்திருக்க மாட்டார்களே.. அது எளியது அல்ல. சந்நியாசம் என்பது மிகவும் தகுதி வாய்ந்த பிராமணர்களுக்கு மட்டும் தரப்படவேண்டியது. தகுதி இல்லாமல் ஒரு வைஷ்ணவரைப்போல் உடை அணிந்தால், தோல்வியை தழுவ வேண்டியது தான்.

ஹரி-சௌரி: எனவே, வர்ணாஸ்ரம தர்மம் என்பது Kaniṣṭha-adhikārī நிலையில் உள்ளவர்களுக்கு என எடுத்து கொள்ளலாமா?

பிரபுபாதா: Kaniṣṭha?

ஹரி-சௌரி: ஆரம்ப நிலை சாதகர்களுக்கு.

பிரபுபாதா: ஆம். Kaniṣṭha-adhikārī, (ஆரம்ப நிலை சாதகர்களுக்கு. )

ஹரி-சௌரி: அவர்களுக்கு வர்ணாஸ்ரம தர்மம் மிகவும் உதவியுள்ளதாக இருக்கும்.

பிரபுபாதா: Kaniṣṭha-adhikārī என்பவர் பிராமணராக இருக்க வேண்டும். அவரே Kaniṣṭha-adhikārī . ஆன்மீகத்தில் Kaniṣṭha-adhikārī என்பவர் தகுதிவாய்ந்த பிராமணர். அவரே kaniṣṭha. பௌதீக உலகில் பிராமணராக இருப்பவர் மிக உயர்ந்தவராக கருதப்படுவார்.