TA/Prabhupada 0179 - கிருஷ்ணரின் பொருட்டு நாம் வேலை செய்தல் வேண்டும்

Revision as of 16:58, 4 July 2016 by SenthilKumar (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0179 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.16.6 -- Los Angeles, January 3, 1974

இந்த மாயாவாதி தத்துவவாதிகள், அனுமானங்களின் உதவியைக் கொண்டு, அறிவாற்றலில் உயர் நிலையை அடைந்துவிடலாம் என நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் மீண்டும் வீழ்ந்துவிடுவர். ஏன்? அனாத்ரத-யுஸ்மத்-அங்க்ரயஹ: "ஏனென்றால், உங்கள் (பகவானின்) தாமரைப் பாதத்தின் நிழல் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்கள் வீழ்ந்துவிடுவர்." அது பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால், மனிதன் எந்தச் செயல்பாடுமின்றி, எந்த ஆசையுமின்றி இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. ஒரு மனிதனோ, விலங்கோ, ஏன் ஒரு பூச்சியாக இருந்தால் கூட, அது ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும். எனக்கு நடைமுறை அனுபவம் இருக்கிறது. என் மகன் குழந்தையாக இருந்த போது...,நான் அப்போது இளைஞனாக இருந்தேன், மிகவும் குறும்புத்தனமாக இருப்பான். எனவே சில சமயம் அவனை அடுக்குச்சட்டத்தின் மேல் ஏற்றிவிடுவோம். அவனால் கீழே இறங்க முடியாது. ஆகவே அதை அவன் மிகவும் அசௌகரியமாக உணர்வான். ஏனென்றால், அடுக்குச்சட்டத்தின் மேல் அவனது செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுவிடும். ஆகவே உங்களால் செயல்பாடுகளை நிறுத்த முடியாது. அது சாத்தியமில்லை. அதைவிட மேம்பட்ட செயலைக் கொடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் கீழ்த்தரமான செயல்களை நிறுத்திவிடுவீர்கள். பரம் த்ரஷ்ட்வா நிவர்த்ததே (BG 2.59).

ஆகவே இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கம் மூலம் உங்களுக்கு மேம்பட்ட செயல்பாடுகள் கிடைக்கிறது. ஆகையால், நீங்கள் தரக்குறைவான நடவடிக்கைகளை எல்லாம் விட்டு விடலாம். இல்லையெனில், ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது என்பது இயலாத காரியம். நாம் வேலை செய்ய வேண்டும். கிருஷ்ணரின் பொருட்டு நாம் வேலை செய்ய வேண்டும். நாம் கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்லலாம், அல்லது கிருஷ்ணர் புத்தகங்களை விற்கச் செல்லலாம், அல்லது கிருஷ்ண பக்தர்களைச் சந்திக்கலாம். இது நல்லது. ஆனால், நீங்கள் வேலை செய்வதை நிறுத்த முடியாது. அது சாத்தியமில்லை. பின்னர் சும்மாயிருக்கும் உங்கள் மூளை சாத்தானின் பட்டறை ஆகிவிடும். ஆம். பின்னர் நீங்கள் வீழ்ந்துவிடுவீர்கள், “அந்தப் பெண்ணை எப்படிச் சென்று அடைவது? அந்த ஆணிடம் எப்படிச் செல்வது?” நீங்கள் கிருஷ்ணருக்கு வேலை செய்வதை நிறுத்திவிட்டால், பின் புலன் திருப்திக்காகவே வேலை செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவுதான். அதே போல், எந்த ஒரு உணர்வை புலனை கொண்டாலும், அதை உங்களால் கட்டுப்படுத்தமுடியாது. நீங்கள் அதை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். அது தான் கிருஷ்ண பக்தி.