TA/Prabhupada 0182 - உங்களை அந்தத் தூய நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0182 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 17:24, 4 July 2016



Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 2.3.15 -- Los Angeles, June 1, 1972

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் ஒரு இலாபம் என்னவென்றால், வெறுமனே கேட்பதிலேயே அவன் படிப்படியாகப் பாவமற்றவன் ஆகிவிடுகிறான். நாம் பாவிகளாக இருப்பதால் தான் பௌதிக வாழ்விலேயே நுழைந்திருக்கிறோம். நாம் மீண்டும் நம்முடைய நிரந்தர இருப்பிடமான கடவுளின் ராஜ்யத்திற்கு செல்வதற்கு பாவமற்றவராக ஆக வேண்டும். ஏனென்றால் இறைவனின் ராஜ்யம் தூய்மையானது...இறைவன் தூய்மையானவர். தூய்மையற்ற எந்த ஒரு ஜீவனும் அங்கு நுழைய முடியாது. ஆகையால், நாம் தூய்மையாக இருக்க வேண்டும். இதுவும் பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. Yesam anta-gatam papam(BG 7.28). “எவன் ஒருவன் தன் வாழ்வின் அனைத்து பாவப் பலன்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கிறானோ”, yesam tv anta-gatam papam jananam punya-karmanam(BG 7.28), “மேலும் எந்த ஒரு பாவச் செயலும் இல்லாமல், எப்பொழுதும் பக்தி தோய்ந்த செயல்பாடுகளை மேற்கொள்கிறானோ…” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கத்தில், ஒருவருக்கு தன் அனைத்து பாவக் காரியங்களையும் அழித்து விட, ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது: மேலும் தகாத உடலுறவு கொள்ளாது, குடிப்பழக்கம் இல்லாது, இறைச்சி உட்கொள்ளாது, சூதாட்டத்தில் ஈடுபடாது ஒழுக்கமாக இருக்கவும் வாய்ப்பு அமைகிறது. . இந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றினால், தீட்சைக்குப் பின் எல்லா பாவங்களும் சுத்தமாக்கப்படுகின்றன. பின்னர் நான் என்னை அந்த சுத்தமாக்கப்பட்ட நிலையிலேயே வைத்துக் கொண்டால், மறுபடி நான் ஒரு பாவியாகும் பேச்சுக்கு எங்கே இடம்? ஆனால் சுத்தமானவுடன். குளித்து விட்டு பின் மீண்டும் தூசியை எடுத்து உடம்பில் பூசிக் கொண்டால் - இந்தச் செயல்முறை உதவாது. நான் சுத்தம் செய்து கொள்வேன், பின் மீண்டும் புழுதியை வீசிக் கொள்வேன்” என்றால் அந்தக் குளியலுக்கு என்ன பயன்?

சுத்தம் செய்து கொள்ளுங்கள், சுத்தம் செய்த பின், அதே தூய்மையான நிலையிலேயே உங்களை வைத்துக் கொள்ளுங்கள். இது அவசியம். எனவே நீங்கள் தொடர்ந்து கிருஷ்ணரோடு தொடர்பு கொண்டு, அவரைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தால் தான், இது சாத்தியம் ஆகும். அவ்வளவு தான். நீங்கள் எப்போதும் மாசற்று இருக்க வேண்டும். அது தான் punya-sravana-kirtanah(SB 1.2.17). கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பது தான் புண்யம், நீங்கள் என்றுமே பக்தியில் நிலை கொண்டுவிடுவீர்கள். Punya-sravana-kirtanah. அல்லது நீங்கள் நாம ஜபம் செய்யலாம். .. ஆகையால் எப்பொழுதும் 'ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே' என்று ஜபம் செய்வதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நாம் மீண்டும் பாவச் செயல்களில் வீழ்ந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். அனைவரும் கவனமாக இருந்து, தம்மை ஜப முறையில் ஈடுபடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் சுத்தமாக்கப்படுவோம். ஆகையால் srnvatam sva-kathah krsnah punya-sravana-kirtanah (SB 1.2.17). நீங்கள் கிருஷ்ணரைப் பற்றித் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் , படிப்படியாக, மனதிலுள்ள அனைத்து அழுக்கான விஷயங்களும் நீங்கி, மனது சுத்தப்படுத்தப்படும்.

அழுக்கான விஷயங்கள் என்பவை,“நான் என்றால் என் பௌதிக உடல்; நான் ஒரு அமரிக்கன்; நான் இந்தியன்; நான் இந்து; நாம் முசல்மான்; நான் இது; நான் அது.” இது போன்ற எண்ணங்களே. இவை ஆன்மாவை மறைத்துள்ள பல மாயைகள். மாயையால் மறைக்கப்படாத ஆன்மா “நான் என்றென்றும் இறைவனின் சேவகன்” என்பதை முழுதும் அறிந்திருக்கும். அவ்வளவு தான். ஒருவனுக்கு வேறு எந்த அடையாளமும் இல்லை. இது தான் முக்தி என்று அழைக்கப்படுகிறது. ஒருவனுக்கு, “நான் என்றென்றைக்கும் கிருஷ்ணரின் சேவகன். அவருக்குச் சேவை புரிவதே என் பணி” என்ற இந்தப் புரிதல் வரும்போது, அது தான் முக்தி எனப்படுகிறது. முக்தி என்றால் உங்களுக்குக் கூடுதலாக இன்னும் இரண்டு கைகள், இன்னும் இரண்டு கால்கள் முளைத்துவிடும் என்று அர்த்தம் இல்லை. அது இல்லை. ஏற்கனவே இருக்கக்கூடிய வஸ்து சுத்தப்படுத்தப்படுகிறது.அவ்வளவு தான் . ஒரு மனிதன் காய்ச்சலில் அவதிப் படுவது போல. பல அறிகுறிகள் இருக்கும், ஆனால் காய்ச்சல் விட்டவுடன், எல்லா அறிகுறிகளும் மறைந்துவிடும். எனவே, இந்தப் பௌதிக உலகில் நமது காய்ச்சல் என்பது, புலன் உணர்வு சார்ந்த பேரின்பம் ஆகும். புலன் உணர்வு சார்ந்த பேரின்பம். இது தான் காய்ச்சல். ஆகவே, நாம் கிருஷ்ண பக்தியில் ஈடுபடும் போது, இந்த புலன் உணர்வு சார்ந்த பேரின்பம் என்னும் விவகாரம் மறைந்துவிடுகிறது. அது தான் வேறுபாடு. நீங்கள் கிருஷ்ண பக்தியில் முன்னேறி வருகிறீர்கள் என்பதற்கு இது தான் ஒரு சோதனை.