TA/Prabhupada 0184 - உங்கள் பற்றை பௌதிக ஒலியின் மீதிருந்து ஆன்மீக ஒலியின் மீது மாற்றுங்கள்

Revision as of 15:11, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0184 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 3.26.47 -- Bombay, January 22, 1975

எனவே ஒலி என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒலி என்பதே இந்த பௌதிக உலகில் நம் அடிமைத்தனத்தின் காரணம் ஆகும். பெரிய, பெரிய நகரங்களில் ஒரு சினிமா கலைஞரின் மூலம் அதிர்வு ஏற்படுத்தப்படும் ஒலியில் மக்கள் பற்று கொள்வதைப் போல. அது மட்டும் அல்ல, பல விஷயங்களை நாம் வானொலித் தகவல் மூலம் கேட்கிறோம். ஒலியின் மீது பற்று. அது பௌதிகவாத ஒலி என்பதால், நாம் பௌதிகத்தில் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறோம். ஏதோ ஒரு நடிகை, ஏதோ ஒரு சினிமா கலைஞர், பாடுகிறார், அவர் பாடுவதை கேட்பதற்கு மக்கள் மிகவும் பற்று கொண்டுள்ளனர். ஒரு பாடல் பாடுவதற்கு அந்தக் கலைஞருக்கு பதினைந்து ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படுகிறது என்பதற்காக. பலர் இங்கே பம்பாயில் உள்ளனர். ஆக, அந்த பௌதிக ஒலி அதிர்வுகளுக்கு எந்த அளவு ஈர்ப்பு இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். இதே போல், அந்தப் பற்றை, நாம் ஹரே கிருஷ்ண மஹா-மந்திரத்தைப் பற்றி கேட்பதில் செலுத்தினால், நமக்கு விமோசனம் கிடைத்துவிடும், அதே ஒலி தான். ஒன்று பௌதிகம் சார்ந்தது; மற்றொன்று ஆன்மீகம் சார்ந்தது. எனவே நீங்கள் இந்த ஆன்மீக ஒலியின் அதிர்வின் மீது பற்று கொள்ள பயிற்சி செய்ய வேண்டும். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றி பெற்றுவிடும்.

ceto-darpaṇa-mārjanaṁ bhava-mahā-dāvāgni-nirvāpaṇaṁ
śreyaḥ-kairava-candrikā-vitaraṇaṁ vidyā-vadhū-jīvanam
ānandāmbudhi-vardhanaṁ prati-padaṁ pūrṇāmṛtāsvādanaṁ
sarvātma-snapanaṁ paraṁ vijayate śrī-kṛṣṇa-saṅkīrtanam
(CC Antya 20.12)

எனவே இந்தக் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் இது தான் "உங்களுக்கு ஏற்கனவே ஒலியின் மீது பற்று இருக்கிறது. இப்போது இந்தப் பற்றை ஆன்மீக ஒலியின் பால் திருப்பிவிடுங்கள். பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிபெற்று விடும்.” இது தான், ஹரே கிருஷ்ண இயக்கம், மக்களுக்கு எப்படி பௌதிக ஒலியை ஆன்மீக ஒலியாக மாற்றுவது என்பதைக் கற்பிக்கிறது. எனவே நரோத்தமதாஸ் தாகூர் பாடுகிறார், "golokera prema-dhana, hari-nama-sankirtana, rati na janmilo more tay." இந்த ஒலி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது, golokera prema-dhana, இதை ஜபிப்பதன் மூலம், இந்த ஒலியைக் கேட்பதன் மூலம், செயலற்று கிடக்கும் இறைவனின் மீதான நம் உண்மையான காதலை வளர்த்துக் கொள்ள முடியும். இது தான் தேவை. Prema pum-artho mahan. பொருள் சார்ந்த இவ்வுலகில் நாம் dharmartha-kama-moksa (SB 4.8.41) -வை மிகவும் முதன்மையாக நினைக்கிறோம். Purusartha. பக்தி கொள்வது தர்மம், பக்தி கொள்வதன் மூலம், நமது பொருளாதார அபிவிருத்தியை வளர்த்துக் கொள்ளலாம். தனம் வேண்டும், அழகு வேண்டும் , புகழ் வேண்டும், ... இவ்வளவையும் நம் ஜடப் பற்றினால் வரும் ஆசையால் கேட்கிறோம். Dharmartha-kama, மேலும் நாம் அறுவறுப்படையும் போது, ஆசைகளை நிறைவேற்ற முடியாத போது, நமக்கு மோட்சம் வேண்டும், இறைவனோடு இணைய வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த பௌதிக சமாச்சாரம் நான்கு வகையானது.

ஆனால் ஆன்மீக சமாச்சாரமோ Prema pum-artho mahan. தெய்வீக அன்பிற்குப் பாத்திரமாவது, அது தான் கண கச்சிதம். எனவே, இந்த கடவுளின் அன்பிற்கு பாத்திரமாகும் இலக்கை அடைய.. இந்த காலகட்டத்தில் குறிப்பாக கலியுகத்தில், நாம் வேறு எந்த விஷயமும் செய்ய முடியாத காரணத்தால், அது மிக, மிகக் கடினம் . காலம், தடைகள் நிறைந்தது. எனவே kalau ... இது தான் முறை, harer nama harer nama harer namaiva kevalam: (CC Adi 17.21) "ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்யவும்," kevalam,: "மட்டுமே." Kalau nasty eva nasty eva nasty eva gatir anyatha. கலியுகத்தில், முக்கிய பணியே இந்த பொருட் செல்வதிற்கு அடிமையாவதிலிருந்து எப்படி விடுவித்துக் கொள்வது என்பது தான் ... Bhutva bhutva praliyate (BG 8.19). மக்களுக்கு உண்மையில் தம் துயரம் என்ன என்பது கூட புரிவதில்லை. முழுமுதற் கடவுளான கிருஷ்ணரே தனிப்பட்ட முறையில் கூறுகிறார், "இவை தான் உங்கள் துயரங்கள்." என்ன? Janma-mrtyu-jara-vyadhi: (BG 13.9) "பிறப்பும் இறப்பும் திரும்பத் திரும்ப நிகழ்வது. இது தான் வாழ்வில் உம் துயர்” இந்தத் துயர், அந்தத் துயர் என்று என்ன யோசிக்கிறீர்கள்? அவை எல்லாம் தற்காலிகமே. அவை அனைத்தும் பௌதிக விதிகளின் கீழே வந்துவிடும். நீங்கள் அதிலிருந்து மீள முடியாது. Prakrteh kriyamanani gunaih karmani sarvasah (BG 3.27). நீங்கள் இயற்கையின் பௌதிக முறைகளை அசுத்தப் படுத்தியதால், ப்ரக்ருதி உங்களை ஏதாவது செய்ய கட்டாயப்படுத்தும். எனவே நீங்கள் இந்த ப்ரக்ருதியின், பௌதிக இயல்பின், வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும். இந்த பௌதிக இயல்பின் கீழ் இருக்கும் வரை, நீங்கள் பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோயை ஏற்றே ஆக வேண்டும். இது தான் உங்கள் உண்மையான துயரம்.