TA/Prabhupada 0212 - அறிவியல் பூர்வமாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது

Revision as of 16:38, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0212 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Garden Conversation -- June 10, 1976, Los Angeles

பிறப்பு , இறப்பு , முதுமை மற்றும் நோய் என்ற சுழற்சி ஒரு தொந்தரவு என்பதை நாம் நவீன கல்வியின் மூலம் புரிந்துகொள்ள முடியாது. அதை அவர்களால் புரிந்துகொள்ளமுடிவதில்லை. பிறகு ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள்? இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதை நிறுத்த வேறு ஒரு வழி இருக்கிறதென்றால் அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?. ம்ம்.. இந்த கல்வியின் பயன் தான் என்ன? சரி எது தவறு எது என்று அவர்களால் வரையறுக்க முடிவதில்லை. யாருமே மரணத்தை விரும்பமாட்டார்கள். ஆனால் மரணம் என்பது இருக்கின்றது. யாருமே முதுமையை விரும்பமாட்டார்கள். ஆனால் முதுமை என்பது உள்ளது. இந்த பெரிய பிரச்னைகளை விட்டுவிட்டு அறிவியல் முன்னேற்றம் பற்றிய அறிவை எண்ணி பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது ?. என்னமாதிரியான கல்விமுறை இது ?. சரி எது தவறு எது என்ற வித்தியாசங்களை தெரிந்துகொள்ளாமல் , கல்வியின் பலன் தான் என்ன?. கல்வி என்றால், சரியானது எது, தவறானது எது என்பதை தெரிந்துகொள்வதே ஆகும். ஆனால் அவர்களால் முடியாது, அவர்களுக்கு மரணம் நல்லதல்ல என்பது தெரிந்தும்.. ஏன் மரணத்தை தடுப்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை ?. அறிவியல் முன்னேற்றம் இங்கு எங்கே? அவர்கள் அறிவியல் முன்னேற்றத்தை பற்றி மிகுந்த பெருமை கொண்டுள்ளனர் . அறிவியல் முன்னேற்றம் எங்கே? உங்களால் மரணத்தை தடுக்கமுடியாது. முதுமை ஆவதை தடுக்கமுடியாது. மருத்துவத்தில் உங்களால் மேம்பட்ட மருந்துகளை தர முடியும். ஆனால் நோயை நிறுத்த முடிந்ததா?. இந்த மருந்தை எடுத்துக்கொண்டால், நோய் என்பதே இருக்காது என்று ஏதாவது உள்ளதா? இந்த அறிவியல் எங்கே ?

நளினிகாந்தா: அவர்கள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

பிரபுபாதா: அது இன்னுமொரு முட்டாள்தனம்.. அது பொய்.

கோவர்தனபாலா: நாம் கிருஷ்ண உணர்வு எப்படி படிப்படியான நிகழ்வு என்று கூறுகிறோமோ.. அவர்களும் அறிவியல் முன்னேற்றத்தை படிப்படியான நிகழ்வு என்று கூறுகின்றனர்.

பிரபுபாதா : படிப்படியாக மரணத்தை வெல்லமுடியும் என்று நினைக்கிறார்களா ? நாங்கள் அனைவரும் நமது உன்னத இருப்பிடமான கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கே செல்லுவோம் என்று எங்களால் உறுதியாக சொல்ல முடியும். ஆனால் அவர்களிடம் அந்த நம்பிக்கை எங்கே? மரணத்தை , முதுமையை, நோய்நொடிகளை, நிச்சயம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்கே?

Dr . Wolfe : புதிதாக வந்த தகவலின் படி அவர்கள் இதை முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் . மரணத்திற்கு பின் வாழ்க்கை இருக்கிறது என்பதை உண்மை என்று கூறுகிறார்கள்.

பிரபுபாதா: ஆம் உண்மை தான்.

Dr . Wolfe : அறிவியல் மூலமாக இதை நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

பிரபுபாதா : அவர்கள் செய்யட்டும்.. அறிவியல் ரீதியாக மரணத்திற்குப்பின் வாழ்க்கை உள்ளது. நாம் மீண்டும் மீண்டும் சொல்வதை போல், நாம் குழந்தையாக இருந்தபோது இருந்த உடல் இப்பொழுது இல்லை , அது மறைந்துவிட்டது. எனக்கு இப்பொழுது வேறொரு உடல் இருக்கின்றது. எனவே இறப்புக்கு பின் வாழ்க்கை உள்ளது . இது தான் இயல்பு. கிருஷ்ணர் கூறுகிறார் tathā dehāntara-prāptiḥ (BG 2.13). அதே போல் na hanyate hanyamāne śarīre (BG 2.20). இது கடவுளின் அதிகாரத்துவமான அறிக்கை. இயல்பாகவே நமக்கு ஒரு உடலுக்கு பின் மற்றொரு உடல் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றது. இதில் என்ன ஆட்சேபனை ? எனவே மரணத்திற்கு பின்னும் வாழ்க்கை உள்ளது. மரணம் என்றால் உடல் அழிதல் என்பதே ஆகும். அந்த வாழ்க்கை முறையை பழகிக்கொண்டால் , மரணமே இல்லை என்ற நிலையை பின்னர் முயன்று பார்க்கலாம். அது தான் புத்திகூர்மை. இது பகவத் கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் கிருஷ்ணரை புரிந்துகொண்டால்,.. அவரிடமே திரும்ப செல்ல நீங்கள் தகுதியானவர் என்றால், மரணம் என்பதே இல்லை.