TA/Prabhupada 0215 - நீங்கள் படிக்க வேண்டும். பிறகு புரிந்து கொள்வீர்கள்

Revision as of 16:56, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0215 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Con...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Interview with Newsweek -- July 14, 1976, New York

நிருபர்: நீங்கள் உங்கள் பின்னணியைப் பற்றி கொஞ்சம் எனக்குச் சொல்ல முடியுமா, உங்கள் இளமையில், நீங்கள் எந்த வகையான விஷயங்களைச் செய்தீர்கள்..அவை என்னென்ன..

பிரபுபாதா: நான் ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டும்?

நிருபர்: மன்னிக்கவும்?

பிரபுபாதா: நான் ஏன் உங்களுக்குச் சொல்ல வேண்டும்?

நிருபர்: நீங்கள் விருப்பப்பட்டால்.

பிரபுபாதா: நான் ஏன் விருப்பப்பட வேண்டும்?

பேட்டி காண்பவர்:: அதாவது, நிருபர்கள் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நான் வேலையிலிருந்து வெளியேற வேண்டியது தான்.

ஹரி-ஷௌரி: பிரபுபாதா எங்கள் இயக்கத்தைப் பற்றி கேட்பீர்கள் என்று நம்புகிறார்...

ராமேஷ்வரா: மக்கள், உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர், ஸ்ரீல பிரபுபாதா. அவர்கள் உங்கள் மீது ஆர்வம் கொண்டால், பிறகு தானாக உங்கள் புத்தகங்கள் மீதும் ஆர்வம் கொள்வார்கள். நாங்கள் விற்பனை செய்யும் இந்த நூல்களின் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள அவர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

பிரபுபாதா: நாம் புத்தகங்களை பற்றி பேசுவோம். இவை ஆசிரியரின் கடந்த காலத்ததுடன் ஏதேனும் தொடர்பு கொண்டுள்ளனவா ? நிருபர்: எனக்குத் தெரிந்த வரை நீங்கள் பல புத்தகங்களின் மொழிபெயர்ப்பாளர்.

பிரபுபாதா: ஆம். அந்த புத்தகங்களும் மொழிபெயர்ப்புகளுமே, நான் எவ்வாறு இவைகளை செய்தேன் என்று சொல்லும்.

நிருபர்: நான் என்ன யோசிக்கின்றேன் என்றால்…

பிரபுபாதா: நீங்கள் இந்த புத்தகங்களைப் படியுங்கள், பிறகு உங்களுக்குப் புரியும். என்னிடம் கேட்பதற்கு பதில், அந்தப் புத்தகங்களைப் படியுங்கள். அதுதான் உண்மையான புரிதல்.

நிருபர்(பக்தரிடம்): இவர் எவ்வாறு இந்தப்பாதையில் ஈடுபாடு கொண்டார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ராமேஷ்வரா: இந்த நிருபர் உங்களுக்கும் உங்கள் குருவுக்கும் ஏற்பட்ட உறவைப் பற்றிக் கேட்கிறார். கிருஷ்ணர் பக்தி இயக்கம் தொடங்க, மற்றும் பல புத்தகங்களை எழுத உங்களுக்கு எங்கிருந்து ஊக்கம் கிடைத்தது?

பிரபுபாதா: இந்த விஷயங்களுக்கு உங்களாலேயே பதில் கொடுக்க முடியும். இவை பொதுமக்களுக்கு ஒன்றும் பெரிதும் முக்கியமான விஷயங்கள் அல்ல.

ராமேஷ்வரா: பொது மக்கள் என்றுமே இயக்கத்தின் பின்னால் இருந்து நடத்துபவர்களை பற்றி அறிந்து கொள்ள விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.

பெண் விருந்தினர்: ஆம், இது உதவியாக இருக்கும். மக்கள் ஆர்வமாக உள்ளனர். மக்கள் உங்களை போன்ற மனிதர்களின் வளர்ச்சியைப் பற்றி அறிய ஆர்வம் கொண்டுள்ளனர். அதை வைத்துக்கொண்டு, நீங்கள் எழுதுவதைப் படிக்க அவர்கள் முடிவு செய்கின்றனர்.

பிரபுபாதா: நீங்கள் எங்கள் புத்தகங்களின் மீது ஆர்வம் கொண்டிருந்தால், முதலில் எங்கள் புத்தகங்களை படியுங்கள். நீங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். நிருபர்: உங்களைப்பற்றி அறிவதற்கா?

பிரபுபாதா: ஆமாம்.

நிருபர்: நீங்கள் சொல்ல வருவது அதுவா?

பிரபுபாதா: ஆமாம். நிருபர்(பக்தரிடம்): அவர் சொல்ல வருவது அதுவா?

பிரபுபாதா: ஒரு மனிதன் அவன் பேசும் போது அறியப்படுகிறான். அவன் பேசும் போது. Tāvac ca śobhate mūrkho yāvat kiñcin na bhāṣate: "ஒரு முட்டாள் பேசாத வரையிலும் நன்றாகத்தான் தெரிவான்." அவன் பேசும் போது, அவன் யார் என்று உங்களுக்குப் புரிந்துவிடும். ஆக, என் பேச்சு புத்தகங்களில் இருக்கிறது, நீங்கள் புத்திசாலி என்றால் உங்களால் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் கேட்கத் தேவையே இல்லை. ஒரு பெரிய வழக்கறிஞரின் திறமையை ,அவர் நீதி மன்றத்தில் பேசும்போது தான் நாம் கணக்கிட வேண்டும். இல்லாவிட்டால் அனைவரும் திறமையானவர்கள் போலிருப்பார்கள். அவர் நீதி மன்றத்தில் பேசுவதிலிருந்து அவர் திறமையானவரா இல்லையா என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். எனவே நீங்கள் கேட்க வேண்டும். படிக்க வேண்டும். பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உண்மையான புரிதல் அங்கு தான் இருக்கிறது.