TA/Prabhupada 0216 - கிருஷ்ணர் முதல் தரமானவர். அவரது பக்தர்களும் முதல் தரமானவர்கள்

Revision as of 17:01, 7 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0216 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.7.47-48 -- Vrndavana, October 6, 1976

இது தான் வைஷ்ணவனின் மனப்பான்மை. வைஷ்ணவன் என்பவன் para-duḥkha-duḥkhī. அது தான் வைஷ்ணவனின் தகுதி. அவனுக்குத் தன் தனிப்பட்ட துயரத்தைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் அதே வைஷ்ணவன், அடுத்தவர் வேதனைப் படும்போது தான் துவண்டு போய், துயரப்படுகிறான். அவனே உண்மையான வைஷ்ணவன். பிரஹலாத மகாராஜா கூறினார்,

naivodvije para duratyaya-vaitaraṇyās
tvad-vīrya-gāyana-mahāmṛta-magna-cittaḥ
śoce tato vimukha-cetasa indriyārtha-
māyā-sukhāya bharam udvahato vimūḍhān
(SB 7.9.43)

என்று. பிரஹலாத மகாராஜா தன் தந்தையால் பல தொல்லைகளுக்கு ஆளானார். அதனால் அவர் தந்தை வதம் செய்யப்பட்டார். அவருக்கு பகவான் நரசிம்ஹ தேவர் ஏதேனும் வரமளிக்க முயன்றபோது, அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் sa vai vaṇik என்றார். என் இறைவா, நாங்கள் ரஜோ-குண, தமோ-குண குடும்பத்தில் பிறந்தவர்கள். ரஜோ-குணம், தமோ-குணம். அசுரர்கள், அவர்கள் இந்த இரண்டு கீழ்த்தர குணங்களால் பாதிக்கப்படுகின்றனர். ரஜோ-குணம் மற்றும் தமோ-குணம். மேலும் தேவர்கள் என்பவர்களோ சத்வ-குணத்தின் தாக்கம் கொண்டவர்கள். இந்த மூன்று குணங்களும், பண்புகளும், பௌதிக உலகில் உள்ளன. Sattva-guṇa...

Tri-guṇamayī. Daivī hy eṣā guṇamayī (BG 7.14). Guṇamayī, triguṇamayī. இந்த பௌதிக உலகம் சத்வ, ரஜோ, தமோ குணங்களால் ஆளப்படுகின்றன. ஆக, சத்வ குணத்தினால் தூண்டப்படுபவர்கள் முதல் தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது இந்த பௌதீக உலகில் முதல் தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆன்மீக உலகில் அல்ல. ஆன்மீக உலகம் மாறுபட்டது. அது குணங்களற்றது. பௌதிக தன்மைகள் அற்றது. முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அனைவரும் முதல் தரத்தினரே. கிருஷ்ணர் முதல் தரமானவர், அவரது பக்தர்களும் முதல் தரமானவர்கள். மரங்கள் முதல் வர்க்கம், பறவைகள் முதல் வர்க்கம், பசுக்கள் முதல் வர்க்கம், கன்றுகள் முதல் வர்க்கம். எனவே இது 'முழு முதல்' என்று அழைக்கப்படுகிறது. உறவினர், இரண்டாம் வர்க்கம், மூன்றாம் வர்க்கம், நான்காம் வர்க்கம் என்ற எந்தக் கருத்தும் இல்லை. எல்லாமே முதல் வர்க்கம் தான். Ānanda-cinmaya-rasa-pratibhāvitābhiḥ (Bs. 5.37). அனைத்தும் ஆனந்த-சின்மய-ரசத்தின் கலவை தான். எந்தப் பாகுபாடும் இல்லை. ஒருவர் தாஸ்ய ரசத்தில் இருந்தாலும் சரி, அல்லது சாக்கிய ரசத்தில் இருந்தாலும் சரி,.. இல்லை வாத்சல்ய ரசத்திலோ மாதுர்ய ரசத்திலோ இருந்தாலும் சரி,.. சமமாகவேக் கருதப்படுவார். அங்கு ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

ஆனால் பல வகைகள் உண்டு. அவரவர்களுக்கு பிடித்த ரசத்தில் பக்தி செலுத்தலாம். இது அனுமதிக்கப்படுகிறது. ஆக இந்த பௌதிக உலகில், அவர்கள் மூன்று குணங்களின் தாக்கத்தில் உள்ளனர். மேலும் பிரஹலாத மகாராஜா, ஹிரண்யகஷிபுவின் மகனாக இருந்தபடியால், தான் ரஜோ மற்றும் தமோ குணங்களின் தாக்கத்தில் இருப்பதாக கருதிக்கொண்டார். அவர் வைஷ்ணவர் என்பதால், மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர் ஆவார். ஆனால் ஒரு வைஷ்ணவர் தனது இந்த நிலையைப் பற்றி எப்போதும் பெருமை கொள்வதில்லை. தான் மிகவும் முன்னேறியவன் என்றோ அல்லது ஞானி என்றோ எண்ணுவதில்லை. அவர் தன்னை மிகவும் தாழ்ந்தவனாகவேக் கருதுகிறார்.

tṛṇād api sunīcena
taror api sahiṣṇunā
amāninā mānadena
kīrtanīyaḥ sadā hariḥ
(CC Adi 17.31)

இது தான் வைஷ்ணவன்.