TA/Prabhupada 0230 - வேத கால அடிப்படையில் நான்கு வகையான சமுதாயம் இருந்தது

Revision as of 11:36, 13 January 2017 by Zoran (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0230 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on BG 2.1-5 -- Germany, June 16, 1974

பகவத் கீதை என்பது அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் குருஷேத்திரத்தில் நடந்த விவாதம். விவாதம் எதைப்பற்றியதென்றால்.... ,போர் அறிவிக்கப்பட்டாலும்.. அர்ஜுனர் , " எதிர் பக்கத்தில் நிற்பவர்கள் அனைவரும் என் உறவுகள்.. அவர்களை எப்படி நான் கொல்லமுடியும்?" என்று கேட்கிறார். கிருஷ்ணர் கூறுகிறார், அவரவர் கடமையை அவரவர் செய்து தான் ஆகவேண்டும். சுய லாப நஷ்டங்கள் பற்றிய சிந்தனை இல்லாமல். " வேத கால அடிப்படையில் நான்கு வகையான சமூகப் பிரிவுகள் இருந்தன. உலகத்தில் எல்லா இடங்களிலும் இந்த பகுப்புகள் இருக்கின்றன .. இது மிகவும் இயல்பான ஒன்று. இது கை, இது கால், இது வயிறு , இது தலை, என்று நம் உடலின் பாகங்களை பிரித்து அறிவதைப்போல .. சமூகத்தில் அறிவார்ந்த ஞானிகள் மூளையைப்போல் கருதப்பட வேண்டும். மற்றொரு வர்க்கத்தினர், இந்த சமூகத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். மற்றொரு வர்க்கத்தினர், தானியங்கள் விளைப்பதில் வல்லுனர்களாக இருத்தல் வேண்டும். மற்றும், பசுக்களை பாதுகாத்து , அதில் வணிகம் செய்யவேண்டும். மீதம் இருப்பது , சமுதாயத்தின் மூளையாக செயல்படமுடியாதவர்கள், அல்லது மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற இயலாதவர்கள், அல்லது தானியங்களை விளைவிக்க முடியாதவர்கள், அல்லது பசுக்களுக்கு பாதுகாப்பு தர முடியாதவர்கள் , இவர்களை சூத்திரர்கள் எனலாம். உடலை முழுமையாக்க நாம் எந்த பாகத்தையும் ஒதுக்க முடியாது... மூளை , கை, கால் , வயிறு , கால், வேலை செய்திடும் பாகங்கள் என அனைத்தும் அவசியம். அர்ஜுனர் மக்களையும் இந்த சமுதாயத்தையும் காக்கும் வர்கத்தை சேர்ந்தவர். எனவே, அர்ஜுனர் போர் செய்ய மறுத்ததால், கிருஷ்ணர் அர்ஜுனருக்கு அறிவுரை கூறுகிறார் "போர் புரியவேண்டியது உன் கடமை". பொதுவாக, கொலை என்பது தவறானது. ஆனால் எதிரிகள் நம்மை ஆக்கிரமிக்கும்போது, கொலை செய்வதில் பாவமில்லை . குருஷேத்திரத்தில் இருந்த மற்றொரு கூட்டம், அர்ஜுனனின் கூட்டத்தை ஆக்கிரமிக்க முயல்கின்றனர். இது தான் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட நிலைமை. உண்மையான நோக்கம் எதுவென்றால், அர்ஜுனருக்கு ஆன்மிக புரிதலை ஏற்படுத்துவதே. ஆன்மிக புரிதல் என்பதை தெரிந்துகொள்ள முதலில், ஆன்மா என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆன்மா பற்றிய புரிதல் இல்லாவிடில், ஆன்மிக புரிதல் என்பது அர்த்தமற்றது. மக்கள், உடலின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள் . இதற்குப்பெயர் தான் பௌதீகம். ஆனால், ஆன்மா என்ன என்பதை புரிந்து கொண்டு, அதன் படி நடந்தால், அதற்கு பெயர் தான் ஆன்மீகம். எனவே, அர்ஜுனர் , எதிரணியுடன் போரிட விரும்பாததற்கு காரணம், உடல் சம்பத்தப்பட்ட பந்தமே. அர்ஜுனருக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த விவாதம், நட்புரீதியான விவாதம். ஆனால் நட்பு ரீதியான விவாதம் இந்த பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று அர்ஜுனர் புரிந்துகொண்டபிறகு , கிருஷ்ணரின் சீடராகிறார். அர்ஜுனர் கிருஷ்ணரிடம் சரணடைந்துவிட்டார்.. śiṣyas te 'ham śādhi māṁ prapannam: (BG 2.7). "என் உயிரான கிருஷ்ணரே , நாம் நட்பு ரீதியாக பேசிக்கொண்டிருக்கிறோம் . ஆனால் இப்போது என்னை உன் சீடனாக ஏற்றுக்கொள். " "எனக்கு அறிவுரை கூறி காப்பாற்று. நான் என்ன செய்யவேண்டும்." எனவே , இந்த நிலை வந்தவுடன் , கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகிறார் : śrī-bhagavān uvāca. யார் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார் என்று இங்கே சொல்லப்பட்டுள்ளதை பாப்போம். பகவத் கீதை கிருஷ்ணரால் சொல்லப்பட்டது. இது கிருஷ்ணருக்கும் , அர்ஜுனருக்கும் நடந்த விவாதம். அதை வேத வியாசர் அவர்கள் பதிவுசெய்தார். பிறகு அது புத்தகமாக வெளியிடப்பட்டது. நாம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது பதிவு செய்யப்பட்டு , பின்னர் புத்தகமாக வெளியிடப்படுவது போல். எனவே இந்த புத்தகத்தில், bhagavān uvāca. என்று கூறப்பட்டுள்ளது. வியாச தேவர் தான் இதனை எழுதியவர்.. இருந்தும் "நான் கூறுகிறேன்" என்று அவர் எழுதவில்லை. அவர் bhagavān uvāca என்று கூறுகிறார் . அதாவது "முழுமுதற் கடவுள் கூறுகிறார்" என்றே சொல்கிறார்.