TA/Prabhupada 0233 - குருவினுடையவும் கிருஷ்ணரின் கருணையாலும் தான் நமக்கு கிருஷ்ணர் உணர்வு கிடைத்தது

Revision as of 18:31, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0233 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

ஆக, கிருஷ்ணருக்கும் எதிரிகள் உள்ளனர். அவர்களை அவர் வதம் செய்தே ஆக வேண்டும். கிருஷ்ணருக்கு இரண்டு தொழில்கள் உள்ளன: paritrāṇāya sādhūnāṁ vināśāya ca duṣkṛtam (BG 4.8). கிருஷ்ணருக்கு சவால் விடும் துஷ்ட அரக்கர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிருஷ்ணருடன் போட்டியிடவும், கிருஷ்ணரின் சொத்தில் பங்குகேட்கவும் விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் எதிரிகளாவர். அவர்கள் அனைவரும் வதம் செய்யப்படவேண்டும். ஆகவே இங்கு எதிரிகளை கொல்லும் இந்த செயல் சரியானதாகவே கருதப்படவேண்டும். பின்னர் வரும் அடுத்த கேள்வி என்னவென்றால், "சரி, எதிரிகளை வதம் செய்யலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனது குருவை வதம் செய்யுமாறு அறிவுறுத்துவது சரி தானா?" Gurūn ahatvā. ஆனால் கிருஷ்ணர் விருப்பப்பட்டால், நீங்கள் உங்கள் குருவை கொன்று தான் ஆக வேண்டும். அது தான் தத்துவம். கிருஷ்ணருக்காக செய்யலாம். கிருஷ்ணர் விரும்பினால் உங்களை தடுக்கலாம். கிருஷ்ணர் நீங்கள் உங்கள் குருவை வதம் செய்ய வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் அதைச் செய்தே ஆக வேண்டும். அது தான் கிருஷ்ண பக்தி. நிச்சயமாக, கிருஷ்ணர் உங்கள் குருவை வதம் செய்ய சொல்ல மாட்டார். ஏனென்றால் குருவும் கிருஷ்ணரும் ஒன்றே. Guru-kṛṣṇa-kṛpāya (CC Madhya 19.151). குருவின் கருணையினாலும், கிருஷ்ணரின் கருணையினாலும் தான் நமக்குக் கிருஷ்ண பக்தி கிடைக்கும். எனவே உண்மையான குரு கொல்லப்பட தேவை இல்லை. ஆனால் தன்னை குரு என்று சொல்லி ஏமாற்றும் குருக்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். குரு என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்யான குரு வதம் செய்யப்பட வேண்டும். இங்கு நாம் பிரகலாதரை எடுத்துக்கொள்ளலாம். நரசிம்மதேவர் பிரகலாதரின் கண்முன் அவருடைய தந்தையை கொன்றுகொண்டிருந்தார். தந்தையும் ஒரு குரு ஆவார். Sarva-devamayo guruḥ (SB 11.17.27). அவர் ஜடரீதியாக குரு ஆவார். பிரகலாதன் தன் குருவான தந்தையை எவ்வாறு வதம் செய்ய அனுமதித்தார்? ஹிரணியகசிபு பிரகலாதரின் தந்தை என்று நம் எல்லோருக்கும் தெரியும். உங்கள் தந்தையை யாராவது வதம் செய்ய முயன்றால் நீங்கள் அதை வேடிக்கைபார்க்க விரும்புவீர்களா? வேடிக்கை பார்ப்பது தான் உங்கள் கடமையா? அவ்வாறு இல்லை. உங்கள் தந்தை தாக்கப்படும் போது நீங்கள் எதிர்க்கவேண்டும். உங்களால் எதிர்க்க முடியாவிட்டாலும், போராடி உங்கள் உயிரை விட வேண்டும். "என் தந்தையை கொல்ல அனுமதிக்கமாட்டேன்" என்று நினைப்பதே ஒரு மகனின் கடமை. ஆனால் பிரகலாதர் அவ்வாறு எதிர்க்கவில்லை. பகவானின் பரம பக்தரான அவர் தனது தந்தையை மன்னித்து விடுவிக்குமாறு வேண்டியிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. "அழிவது என் தந்தை அல்ல. என் தந்தையின் உடல் மட்டுமே" என்பது அவருக்கு தெரியும். ஆனால் அவர் தன் தந்தைக்காக வேறுவிதமாக வேண்டினார். நரசிம்மதேவர் கோபமாக இருந்தபோது ஹிரணியகசிபுவின் உடலை வதம் செய்தார். "உடல் எனது தந்தை அல்ல. ஆன்மாவே எனது தந்தை" என்கிற உண்மை பிரகலாதருக்கு தெரியும். எனவே பகவான் அந்த உடலை வதம் செய்வதால் திருப்திகொள்ளட்டும். நான் எனது உண்மையான தந்தையை பிறகு காப்பாற்றுகிறேன் என்று எண்ணிக்கொண்டார்.