TA/Prabhupada 0234 - ஒரு பக்தனாவது மிக உயர்ந்த தகுதி ஆகும்

Revision as of 18:42, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0234 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.4-5 -- London, August 5, 1973

நரசிம்ம தேவர், பிரகலாதரிடம் இவ்வாறு அருள்வார்த்தைகளைக் கூறினார்.... "உனக்கு விருப்பமான எந்த வரத்தையும் கேட்பாயாக". எனவே, பிரஹலாத மகாராஜா இவ்வாறு பதிலளித்தார், "என் இறைவனே! நாங்கள் பௌதிகவாதிகள். நான் முற்றிலும் ஒரு பௌதிகவாத தந்தைக்குப் பிறந்தவன். பௌதிகவாத தந்தைக்குப் பிறந்ததனால், நானும் ஒரு பௌதிகவாதி தான். மேலும் நீங்களோ தெய்வீகத்தின் தலையாய ஆளுமை பொருந்தியவர், நீங்கள் எனக்கு ஆசி அருளுகிறீர்கள். நான் உங்களிடமிருந்து எந்த வகையான ஆசியையும் பெற்றுக் கொள்ளத் தயார். எனக்கு அது தெரியும். ஆனால் அதன் பயன் என்ன? நான் ஏன் உங்களிடமிருந்து ஏதேனும் ஒரு ஆசியைக் கோரப் போகிறேன்? நான் என் தந்தையைப் பார்த்திருக்கிறேன். பொருட்செல்வத்தில், அவர் எவ்வளவு சக்திவாய்ந்தவர் என்றால், இந்திரன் , சந்திரன், வருணன் போன்ற தேவர்களையும் அவரின் சிவந்த கண்கள் அச்சுறுத்தின. மேலும் அவர், இந்தப் பிரபஞ்சத்தையே தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவந்தார். அவர் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். மேலும் செல்வம், செழிப்பு, வலிமை, புகழ், எல்லாம் முழுமையாக, ஆனால் நீங்கள் ஒரு நொடியில் அதை ஒழித்துவிட்டீர்கள். ஆக, நீங்கள் ஏன் எனக்கு ஆசி வழங்குகிறார்கள்? நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்? நான் உங்களிடமிருந்து ஆசியை பெற்றுக் கொண்டு தலைக்கனம் கொண்டு, உங்களுக்கு விரோதமாக அனைத்தையும் தவறாக செய்துவிட்டால், ஒரு விநாடியில் நீங்கள் என் கதையை முடித்து விடுவீர்கள். எனவே தயவுசெய்து அந்த ஆசீர்வாதத்தை, அந்தச் செல்வ செழிப்பை எனக்கு வழங்க வேண்டாம். அதைவிடச் சிறந்தது உங்கள் சேவகனின் சேவையில் ஈடுபடும் ஆசீர்வாதம் கொடுங்கள். எனக்கு இந்த ஆசீர்வாதமே வேண்டும். நான் நேரடியாக உங்கள் சேவகனாக அல்ல, உங்கள் சேவகனின் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ஆசீர்வதிக்கப் பட வேண்டும்”. எனவே பல வேண்டுதல்களுக்குப் பின், இறைவனைச் சமாதானப்படுத்திய பிறகு … அவர் மிகவும் கோபத்தில் இருந்தார். பின்னர் அவரைச் சிறிது சமாதானப்படுத்திய பிறகு, அவர் கேட்டார், "என் அருமை ஆண்டவா, நான் மற்றொரு ஆசீர்வாதத்தைக் கேட்கலாமா. என் தந்தை உங்களின் தீவிர எதிரியாக இருந்தார். அவர் வதம் செய்யப்பட்டதற்கு அதுவே காரணம். இப்போது அவரை மன்னித்து அவருக்கு முக்தி கொடுக்க உங்களிடம் கோருகிறேன்." இது தான் வைஷ்ணவத் திருமகன் என்பது. அவர் தனக்காக எதுவும் கேட்கவில்லை. தன் தந்தை தான் மிகப் பெரிய எதிரி என்று அறிந்திருந்தும், அவரின் ஆசியைக் கேட்கிறார், "இந்த பாவப்பட்ட ஜென்மத்திற்கு மோட்சம் வழங்கிவிடுங்கள்" என்று. எனவே இறைவன் நரசிம்ம தேவன் உத்தரவாதம் வழங்கி இவ்வாறு கூறினார், "என் அருமை பிரஹலாதா, உன் தந்தை மட்டுமல்ல, உன் தந்தையின் தந்தை, அவரது தந்தை என்று, பதினான்கு தலைமுறைகளுக்கும் முக்தி வழங்குகிறேன். நீ இந்தக் குடும்பத்தில் பிறந்ததனால்." எனவே, எவன் ஒருவன் வைஷ்ணவன் ஆகிவிட்டானோ, இறைவனின் பக்தனாகிவிட்டானோ, அவன் குடும்பத்திற்கு மிகச் சிறந்த சேவையை வழங்குகிறான். ஏனென்றால் அவனுடைய உறவினர் என்பதால், அவன் தந்தை, தாய், யாராக இருந்தாலும் அவருக்கு முக்தி வழங்கப்படும். இளம் வயதில் போரில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்தை அரசாங்கம் கவனித்துக் கொள்வதைப் போல. அதேபோல், ஒரு பக்தனாகி விடுவதே மிகப்பெரிய தகுதி ஆகும். அவனிடம் அனைத்தும் இருக்கிறது. Yatra yogeśvaro hariḥ yatra dhanur-dharaḥ pārthaḥ (BG 18.78). கிருஷ்ணர் எங்கு இருக்கிறாரோ, அவர் பக்தன் எங்கு இருக்கிறாரோ, அங்கு அனைத்துப் புகழும் வந்தடையும். அது உறுதி.