TA/Prabhupada 0247 - உண்மையான மதம் என்றால் பகவானிடம் அன்பு செலுத்துவதாகும்

Revision as of 06:20, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0247 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.9 -- London, August 15, 1973

இவ்வாறாகப் பகவத் கீதை முடிவடைகிறது: sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja (BG 18.66). பாகவதம் அந்த இடத்திலிருந்து துவங்குகிறது. எனவே பகவத் கீதை ஸ்ரீமத்-பாகவதத்தின் பூர்வாங்க ஆய்வு ஆகும். பாகவதம் தொடங்குகிறது, dharmaḥ projjhita-kaitavaḥ atra: "இப்போது, இந்த ஸ்ரீமத்-பாகவதத்தில், அனைத்து அனைத்து ஏமாற்று வகை மதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, projjhita." ஆக இது தான் அதன் தொடர்பாகும். உண்மையான மதம் என்றால் கடவுளின் பால் அன்பு செலுத்துவது என்று பொருள். அதுதான் உண்மையான மதம். எனவே பாகவதம் சொல்கிறது, sa vai puṁsāṁ paro dharmo yato bhaktir adhokṣaje: (SB 1.2.6) என்று. “அது தான் முதல் தரமான மதம்" நீங்கள் இந்த மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ தான் பின்பற்ற வேண்டும் என்று இல்லை. நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ முகமதிய மதமோ, நீங்கள் விரும்பியவற்றைப் பின்பற்றலாம். அது ஒரு விஷயமே இல்லை. ஆனால் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாணவர் எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றதைப் போல். யாரும் இப்படி விசாரிப்பதில்லை, "நீ எந்தக் கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றாய்?” என்று. “ நீ எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளாயா? அப்போது சரி." நீ பட்டதாரியா, முதுநிலை பட்டதாரியா, அவ்வளவுதான் தான் நமக்குத் தேவை. யாரும், "நீ எந்தக் கல்லூரியில், எந்த நாட்டிலிருந்து, எந்த மதத்தைப் பின்பற்றி, எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றாய்?" என்று விசாரிப்பதில்லை. இல்லை. அதே போல் யாரும் "நீ எந்த மதத்தைச் சேர்ந்தவன்” என்று விசாரிக்கக் கூடாது. அவன் கடவுள்மீது அன்பு செலுத்தும் கலையைக் கற்றுள்ளானா, என்று தான் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அது தான் மதம் என்பது. ஏனெனில் இங்கு மதம் : sarva-dharmān parityajya māṁ ekaṁ śaraṇaṁ vraja (BG 18.66). இது தான் மதம் என்பது. பாகவதம் சொல்கிறது. Dharmaḥ projjhita-kaitavaḥ atra: "அனைத்து ஏமாற்று வகை மதங்களும் இந்தப் பாகவதத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன”. nirmatsarāṇām மட்டுமே, இறைவனின் பால் பொறாமை கொள்ளாதவர்கள் ... "ஏன் நான் கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும்? நான் ஏன் கடவுளை வணங்க வேண்டும்? நான் ஏன் கடவுளை ஏற்க வேண்டும்?" அவர்கள் அனைவரும் அரக்கர்கள். அவர்களுக்காக மட்டுமே ஸ்ரீமத்-பாகவதம், அவர்களுக்காக மட்டுமே, உண்மையில் தம் அன்பில் தீவிரமாக இருப்பவர்களுக்காக மட்டுமே. Ahaitukī apratihatā yenātmā samprasīdati. ஆக உண்மையில் வாழ்க்கையின் வெற்றி என்பது நீங்கள் கடவுளின் பால் அன்பு செலுத்த கற்றுக் கொள்ளும் போது தான். பின்னர் உங்கள் மனது நிறைவடையும். Yaṁ labdhvā cāparaṁ lābhaṁ manyate nādhikaṁ tataḥ. உங்களுக்குக் கிருஷ்ணரோ இறைவனோ கிடைக்கும்பொழுது ... கிருஷ்ணர் என்றால் இறைவன் என்று பொருள். உங்களிடம் இறைவனின் மற்றொரு பெயர் இருந்தால், அதுவும் ஏற்கப்படும். ஆனால் இறைவன், உயரிய பகவான், உயரியவர். உங்களுக்கு இது கிடைத்த போது… ஏனெனில் நாம் யாரோ ஒருவரின் பால் அன்பு செலுத்துகிறோம். இந்த அன்பு செலுத்தும் மனப்பான்மை உள்ளது. அனைவரிடமும். ஆனால் அது தவறான வழியில் செலுத்தப்படுகிறது. எனவே கிருஷ்ணர் சொல்கிறார், "இந்த அன்பு செலுத்தும் விஷயங்களை எல்லாம் வெளியே தள்ளுங்கள். என்மீது அன்பு செலுத்த முயலுங்கள்" என்று. arva-dharmān parityajya mām ekam (BG 18.66). இந்த வழியில், உங்கள் அன்பு என்றுமே உங்களுக்குத் திருப்தி அளிக்காது. Yenātmā samprasīdati. உங்களுக்கு உண்மையான நிறைவு வேண்டும் என்றால், நீங்கள் கிருஷ்ணரை, அதாவது இறைவனை நேசிக்க வேண்டும். அது தான் முழுத் தத்துவம், ... வேத தத்துவம். அல்லது நீங்கள் எந்தத் தத்துவத்தை எடுத்துக்கொண்டாலுமே கூட. ஏனெனில், எல்லாவற்றையும் விட உங்களுக்குச் சுய திருப்தி வேண்டும், உங்கள் மனதில் முழு திருப்தி வேண்டும். அதை நீங்கள் இறைவனை நேசிக்கும் பொழுது மட்டுமே அடைய முடியும். எந்த மதம் தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இறைவனை எப்படி நேசிப்பது என்று கற்றுத் தருகிறதோ, பயிற்சி அளிக்கிறதோ, அது தான் முதல் தரமான மதம். அது தான் முதல் தரமான மதம். Sa vai puṁsāṁ paro dharmo yato bhaktiḥ... (SB 1.2.6). மேலும் அந்த அன்பிற்கு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. இந்தப் பொருள் உலகில் உள்ளதைப் போல், "நான் உன்னைக் காதலிக்கிறேன்; நீ என்னைக் காதலிக்கிறாய்", என்றால் அதன் பின்னணியில், எதோ ஒரு உள்நோக்கம் இருக்கும். Ahaituky apratihatā. Ahaitukī, no motive. Anyābhīlāṣitā-śūnyam [Bhakti-rasāmṛta-sindhu 1.1.11]. மற்ற எல்லா ஆசைகளையும் பூஜ்யம் ஆக்க வேண்டும். பூஜ்யம். அது பகவத் கீதையில் கற்றுக் கொடுக்கப் படும்.