TA/Prabhupada 0255 - பகவானின் அரசாங்கத்தில், பல இயக்குநர்கள் இருக்க வேண்டும், அவர்கள் தேவர்கள் என்று ஆழைக்

Revision as of 07:41, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0255 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.8 -- London, August 8, 1973

ஆக இப்போது கிருஷ்ணர் இப்படிச் சொல்லலாம்:. "அங்கு, அது பரவாயில்லை. நீங்கள் தற்காலிகமாக... நீங்கள் சண்டைக்குப் போகிறீர்கள். உங்களுக்கு இராஜ்ஜியம் கிடைக்கும் போது, நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். என்னைக் குருவாகக் கொள்ளத் தேவை இல்லை. அப்படியும் இல்லை..” சாதாரண மனிதர்களைப் போல, அவர்கள் நினைக்கிறார்கள், "நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன். ஒரு குருவைக் கொள்வதால் என்ன பயன்? என் வழியிலேயே நான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும்". மேலும் இன்னொரு அயோக்கியன், “Yes, yata mata tata patha. அவர்கள் கருத்து என்னவாக இருந்தாலும், அது சரி தான். நீங்கள் உங்கள் சொந்த கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.” இது நடந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் கடவுளைப் புரிந்து கொள்ள உங்கள் சொந்த கருத்தை உருவாக்கிக் கொள்ளலாம். எனவே அனைத்து முட்டாள் அயோக்கியர்களும், தம் சொந்த கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். இல்லை, அது சாத்தியம் இல்லை. எனவே அர்ஜுனன் சொல்கிறார்: avāpya bhūmāv asaptnam ṛddham (BG 2.8) என்று. Sapatni. Sapatni என்றால் “போட்டிக்கு மனைவி, இணையான மனைவி" என்று அர்த்தம். ஒரு மனிதனுக்கு இரண்டு, மூன்று மனைவிகள் இருந்தால்... ஏன் இரண்டு, மூன்று? ? நம் இறைவனுக்கோ 16,100 பேர் இருந்தார்கள். எனவே இவர் இறைவன். Sapatnya, ஆனால் போட்டி இருக்கவில்லை. கிருஷ்ணரின் புத்தகத்தில், திரௌபதியிடம் பேசும்பொழுது அனைத்து ராணிகளின் கூற்றிலும், அவர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணரின் பணிப் பெண் ஆவதில் எவ்வளவு ஆர்வத்துடன் இருந்தார்கள் என்று நீங்கள் காணலாம். யாரும் எதிரி இல்லை. இந்தப் போட்டி. பௌதிக உலகில், ஒரு மனிதனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவி இருந்துவிட்டால், போட்டி தான். போட்டி. இந்த உதாரணம் ஸ்ரீமத் பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு உணர்வுகள் இருப்பதைப் போலவே, ஒருவனுக்கு வேறு மனைவி இருந்தால், ஒரு மனைவி அவனைப் பறித்துக்கொண்டு: "நீங்கள், என் அறைக்கு வாருங்கள்" என்றும் மற்றொரு மனைவி பறித்துக்கொண்டு: "நீங்கள் என் அறைக்கு வாருங்கள்" என்றும் சொன்னால் அவன் குழப்பமடைகிறான். இதேபோல் நமக்கும் உணர்வுகள் என்னும் மனைவிகள் இருக்கிறார்கள். கண்கள் ஒரு பக்கம்: "தயவு செய்து திரைப்படத்திற்கு வாருங்கள்" என்று இழுக்கின்றன. நாக்கு ஒரு பக்கம்: " தயவு செய்து உணவகம் வாருங்கள்”என்று இழுக்கிறது. கைகள் எங்கோ ஓட்டிக்கொண்டு செல்கிறது. கால்கள் எங்கோ ஓட்டிக்கொண்டு செல்கிறது. நம் நிலைமையும் அப்படித்தான். வெவ்வேறு மனைவிகள் வெவ்வேறு அறைக்கு இழுத்துச் செல்லும் அந்த மனிதனைப் போலத் தான். இது தான் நம் நிலை. ஆக ஏன் இந்த நிலை? ஏனெனில் இந்த மனைவிகளுக்குள் போட்டி இருப்பதால் தான். இங்கே: sapatnyam ṛddham. ஒரு சொத்தை உரிமை கொண்டாட பல அரசர்கள் இருந்தால், அதில் கஷ்டம் தான். அர்ஜூனன் கூறுகிறார்: avāpya bhūmāv asaptnyam ṛddham (BG 2.8) என்று. "செல்வத்தை உரிமை கொண்டாட வேறு யாரும் இல்லையென்றால், நான் ஒருவன் தான் அதன் சொந்தக்காரன் என்றால், அப்படிப்பட்ட செல்வம் எனக்குக் கிடைத்தாலும், இராஜ்ஜியம், அப்படிப்பட்ட பேரரசு, surāṇām api cādhipatyam, இந்த உலகித்தின் பேரரசு மட்டுமல்ல, உயர்நிலை கிரக அமைப்பின் பேரரசு கிடைத்தாலும்…" இந்த மனிதர்கள் சந்திர கிரகத்திற்குச் செல்ல முயல்கிறார்கள். ஆனால் வேறொரு இராஜ்ஜியம் கூட இருக்கிறது, வேறொரு இராஜ்ஜியம். எனவே அந்த இராஜ்ஜியம் உயரிய ஜீவன்களுக்குச் சொந்தமானது, கடவுளின் அவதாரங்கள் என்று அழைக்கப்படுபவர்கள். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். இந்திரனைப் போலவே. இந்திரன் மழையைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரிடம் இடி முழக்கம் இருக்கிறது. ஆனால் மக்கள் இதை நம்புவதில்லை, ஆனால் நாம் நம்புகிறோம். வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது... நம்புவதென்பதில்லை. நம்பியே தீர வேண்டும். இது தான் உண்மை. எங்கிருந்து இந்த இடி முழக்கம் வருகிறது? யார் மழைக்கு ஏற்பாடு செய்கிறார்கள்? ஏதோ ஒரு இயக்குநர் இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களிலோ அல்லது மாநிலங்களிலோ, பல மேலாண்மைத் துறைகள் உள்ளன. இதேபோல் இறைவனின் அரசாங்கத்திலும், பல இயக்குநர்கள் இருக்க வேண்டும், பல அதிகாரிகள். அவர்களைக் கடவுளின் அவதாரம் என்று அழைக்கிறோம். Devarṣi-bhūtāpta-nṛṇāṁ pitṟṇām (SB 11.5.41). Devatāḥ, அவதாரங்கள், அவர்களும் கிருஷ்ணரின் உத்தரவின்படி நமக்கு வழங்குகின்றனர். இந்திரனைப் போலவே. இந்திரன் நமக்கு வழங்குகிறார். எனவே இந்திர யாகம், வெவ்வேறு அவதாரங்களையும் திருப்திப்படுத்தத் தானங்கள் இருக்கின்றன. இந்த இந்திர யாகத்தைக் கிருஷ்ணர் நிறுத்துவிட்டார், உங்களுக்குத் தெரிந்திருக்கும், கோவர்த்தனா. நந்த மகாராஜா இந்திர யாகத்திற்கு ஏற்பாடு செய்யும் போது, கிருஷ்ணர் இவ்வாறு கூறினார்: "எனதருமை தந்தையே, இந்திரன் யாகத்திற்கு ஒன்றும் அவசியம் இல்லை." என்று. அப்படியென்றால் கிருஷ்ண பக்தி உணர்வு கொண்ட எவருக்கும் எந்த யாகமும் தேவை இல்லை என்று பொருள். குறிப்பாக இந்தக் காலத்தில், கலியுகத்தில், பல்வேறு வகையான யாகங்களைச் செய்வது மிகவும் கடினம். த்ரேதா-யுகத்தில் அது சாத்தியமானதாக இருந்தது. Kṛte yad dhyāyato viṣṇuṁ tretāyāṁ yajato makhaiḥ (SB 12.3.52).Makhaiḥ என்றால் யாகம், யாகம் நடத்துவது என்று பொருள். Yajñārthe karmaṇo 'nyatra loko 'yaṁ karma-bandhanaḥ (BG 3.9). எனவேஇந்த சூத்திரங்கள், இந்தக் குறிப்புகளை யாரும் பின்பற்றுவதில்லை. அது இந்தக் காலத்தில் சாத்தியம் இல்லை. எனவே சாஸ்திரத்தின் உத்தரவு: yajñaiḥ saṅkīrtanair prāyair yajanti hi sumedhasaḥ என்று உள்ளது. நல்ல அறிவார்ந்த மூளையுடையோர், பல விஷயங்களைப் பற்றியும் கவலைப்படுவதற்குப் பதில், ஒருவர் saṅkīrtana -யாகத்தைச் செய்துவிடலாம். இவை சாஸ்திரத்தில் உள்ள கூற்றுக்கள்.