TA/Prabhupada 0257 - இறைவனின் சட்டங்களை உங்களால் எப்படி விலக்கி வைக்க முடியும்?: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0257 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0256 - Dans ce Kali-yuga Krishna est venu dans la forme de Son Saint Nom, Hare Krishna|0256|FR/Prabhupada 0258 - Intrinsèquement nous sommes tous des serviteurs|0258}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0256 - இந்தக் கலியுகத்தில், கிருஷ்ணர் தன் பெயரான ஹரே கிருஷ்ண உருவில் வந்திருக்கிறார்|0256|TA/Prabhupada 0258 - நிர்மாணப்படி நாம் எல்லோரும் சேவகர்கள்|0258}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:

<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|6awQMXS9cxo|How You Can Supersede the Laws of the Lord<br />- Prabhupāda 0257}}
{{youtube_right|I4jB5K__G0o|இறைவனின் சட்டங்களை உங்களால் எப்படி விலக்கி வைக்க முடியும்?<br />- Prabhupāda 0257}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->

Line 30: Line 30:

<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
எனவே, உண்மையான தெய்வீகத்தின் உயரிய ஆளுமை பொருந்திய கிருஷ்ணரை வழிபடுவதே எங்கள் திட்டம் ஆகும். Govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi. இந்தப் பொருள் உலகில் அனைவரும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் துன்பத்திலிருந்து  நிவாரணம் பெறுவதற்கும் முயற்சி செய்கிறார்கள். இரண்டு விஷயங்கள் நடக்கின்றன, முயற்சி எடுக்கப்படுகிறது. இதற்குப் பல்வேறு செயல் முறைகள் உள்ளன. பொருள் ரீதியான செயல்முறை அபத்தமானது. அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகையான பொருள் வசதிகளும், மகிழ்ச்சியும், மகிழ்ச்சி என்று அழைக்கப்படுவதும், நாம் நாடும் உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. அது சாத்தியம் அல்ல. பின்னர் பல்வேறு வகை பிற செயல்முறைகளும் உள்ளன. நம் பௌதிக வாழ்க்கையின் நிலையால் மூன்று வகையான கவலைகள் ஏற்படுகின்றன: ādhyātmic, ādhibhautic, ādhidaivic. Ādhyātmic உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது என்று அர்த்தம். இந்த உடலின் பல்வேறு வளர்சிதை செயல்பாடுகளில் சில மாற்றங்கள் நேரும்போது, நமக்குக் காய்ச்சல், சில வகை வலிகள், தலைவலி போன்றவை ஏற்படுகின்றன - பல விஷயங்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த  உடல் தொடர்பான கவலைகள் ādhyātmic என்று அழைக்கப்படுகின்றன. இந்த ādhyātmic துயரத்தின் மற்றொரு பகுதி மனதின் காரணமாக வருவது. எனக்கு ஒரு பெரும் இழப்பு நேர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். எனவே என் மனம் ஒரு நல்ல நிலையில் இல்லை. எனவே இதுவும் ஒரு வகை அவதியே. எனவே உடல் நோயுற்ற நிலையிலும், மனதின் அதிருப்தியினாலும், கவலைகள் ஏற்படுகின்றன. அதன் பின், ādhibhautic - மற்ற உயிரினங்கள் நமக்கு ஏற்படுத்தும் துன்பம். மனித இனத்தைச் சேர்ந்த நாம், தினசரி லட்சக் கணக்கில்  பாவப்பட்ட விலங்குகளைக் கசாப்புக் கடைக்கு அனுப்புவதைப் போல. அவற்றால் வெளிப்படுத்த முடிவதில்லை, ஆனால் இது தான் ādhibhautic என்று அழைக்கப்படுகிறது, வாழும் பிற உயிரினங்களால் ஏற்படும் துன்பம். இதேபோல், பிற உயிரினங்கள்மூலம் ஏற்படும் கஷ்டங்களையும் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால், கடவுளின் சட்டத்தை உங்களால் மீற முடியாது. எனவே பௌதிக  சட்டங்கள், மாநில சட்டங்களிடமிருந்து, நீங்கள் உங்களை ஒளித்துக் கொள்ளலாம், ஆனால் கடவுளின் சட்டத்திலிருந்து நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. அதற்குப் பல சாட்சிகள் உள்ளன. சூரியன் உங்கள் சாட்சி, சந்திரன் உங்கள் சாட்சி, காலை உங்கள் சாட்சி, இரவு உங்கள் சாட்சி, வானம் உங்கள் சாட்சி என்று. எனவே இறைவனின் சட்டங்களை உங்களால் எப்படி மீற முடியும்? எனவே ... ஆனால் இந்த பொருள் இயல்பு என்பது, நாம் கஷ்டப்பட வேண்டும் என்றே நிறுவப்பட்டுள்ளது. Ādhyātmic, உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது, மேலும் பிற உயிரினங்கள்மூலம் ஏற்படுவது, மேலும் மற்றொரு துன்பம் ādhidaivic எனப்படுவது. Ādhidaivic, ஒருவருக்குப் பேய் பிடிப்பதைப் போல், பேய் அவரை ஆட்கொள்வது. பேயைப் பார்க்க முடியாது, ஆனால் அவர், சித்தப்பிரமை பிடித்து, எதையோ பிதற்றுகிறார். அல்லது பஞ்சமோ, பூகம்பமோ நேர்கிறது, போர் மூள்கிறது, நடப்பு வியாதிகள், பல விஷயங்கள் உள்ளன. எனவே துன்பங்கள் எப்போதுமே இருக்கின்றன. ஆனால் நாம் ஒட்டுவேலை செய்து சரிசெய்ய முயற்சி செய்கிறோம். துன்பங்கள் எப்போதும் இருக்கின்றன. அனைவரும் துன்பத்திலிருந்து வெளியேற முயற்சி செய்கிறார்கள், அது உண்மை. வாழ்க்கையின் முழு போராட்டமும் துன்பத்திலிருந்து வெளிவருவதற்கே ஆகும். ஆனால் பல வகையான பரிந்துரைகள் உள்ளன. ஒருவர் நீங்கள் இந்த வழியில் துன்பத்திலிருந்து வெளியே வரலாம் என்று கூறினால், வேறொருவர் அந்த வழியில் வரலாம் என்று கூறுகிறார். எனவே, நவீன விஞ்ஞானிகள்,  தத்துவ அறிஞர்கள், நாத்திகர்கள், ஆத்திகவாதிகள், காரியவாத நடிகர்கள் என்ற பலரின் பரிந்துரைகள் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணர் பக்தி இயக்கத்தின்படி, நீங்கள் இந்த அனைத்துத் துன்பங்களிலிருந்தும் வெளியே வந்துவிடலாம், உங்கள் உணர்வை மாற்றிக் கொண்டுவிட்டால் மட்டும், அவ்வளவு தான் அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு என்பதாகும். நான் உங்களுக்குப் பல முறை உதாரணம் கொடுத்துள்ளதைப் போல ... நமது எல்லாத் துன்பங்களுக்கும் அறிவின்மை, அறியாமை தான் காரணம். அந்த அறிவை நல்ல அதிகாரிகளின் சங்கம் மூலம் அடைய முடியும்.  
ஆக, பரமபுருஷரான முழுமுதற் கடவுள், கிருஷ்ணரை வழிபடுவதே நம் இயக்கத்தின் திட்டம் ஆகும். கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி. இந்த பௌதிக உலகில் அனைவரும் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும் துன்பத்திலிருந்து  நிவாரணம் பெறுவதற்கும் முயற்சி செய்கிறார்கள். இரண்டு விஷயங்கள் நடக்கின்றன, அதற்கு முயற்சி நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு செயல்முறைகள் உள்ளன. பௌதிக செயல்முறை முற்றிலும் அபத்தமானது. அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தோசம் என்கிற பெயரில், எந்த அளவுக்கு பௌதிக சுகங்கள் இருந்தாலும் சரி, அதால் நாம் நாடும் உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. அது சாத்தியம் அல்ல. அதைத் தவிர்த்து மற்ற செயல்முறைகளும் உள்ளன. நம் பௌதிகத்தில் பக்குவப்படுத்தப்பட்ட வாழ்க்கையால், 'ஆத்யாத்மிக', 'ஆதிபௌதிக', 'ஆதிதைவிக'. என்ற மூன்று விதமான துயரங்களுக்கு நாம் ஆளாகிறோம். ஆத்யாத்மிக என்றால் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது. உதாரணத்திற்கு, இந்த உடலில் சில வளர்சிதை நிகழ்வுகளில் ஏதாவது சீர்குலைவு ஏற்பட்டால், நமக்குக் காய்ச்சல், உடம்பு வலி, தலைவலி - இப்படி பல விஷயங்கள் ஏற்படுகின்றன. ஆக இந்த  உடல் சம்பந்தப்பட்ட துயரங்கள், ஆத்யாத்மிக என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்த ஆத்யாத்மிக துயரத்தின் மற்றொரு பகுதி மனதின் காரணமாக ஏற்படுகிறது. எனக்கு ஒரு பெரும் இழப்பு நேர்ந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆக மனம் தளர்ச்சி அடைகிறது. ஆக இதுவும் ஒரு துயரம் தான். ஆக உடல் நோயுற்ற நிலையிலும், மனதின் அதிருப்தியினாலும், நாம் துயரங்களை அனுபவிக்கின்றோம். அதன் பின், ஆதிபௌதிக - மற்ற உயிர்வாழிகளால் நமக்கு ஏற்படும் துயரங்கள். உதாரணத்திற்கு, மனித இனத்தைச் சேர்ந்த நாம், தினசரி லட்சக் கணக்கில்  பாவப்பட்ட விலங்குகளை கசாப்புக் கடைக்கு அனுப்புகிறோம். அவற்றால் வெளிப்படுத்த முடிவதில்லை. இது தான் ஆதிபௌதிக என்று அழைக்கப்படுகிறது, அதாவது மற்ற உயிர்வாழிகளால் ஏற்படும் துயரங்கள். அதுபோலவே, மற்ற உயிர்வாழிகளால் ஏற்படும் கஷ்டங்களை நாமும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால், கடவுளின் சட்டத்தை உங்களால் மீற முடியாது. ஆக பௌதிக  சட்டங்களிடமிருந்து, அரசாங்க சட்டங்களிடமிருந்து, நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம், ஆனால் கடவுளின் சட்டத்திலிருந்து நீங்கள் ஓடி ஒழிய முடியாது. அதற்கு பல சாட்சிகள் இருக்கிறார்கள். சூரியன் சாட்சி, சந்திரன் சாட்சி, காலை சாட்சி, இரவு சாட்சி, வானம் சாட்சி. ஆக இறைவனின் சட்டங்களை உங்களால் எப்படி மீற முடியும்? ஆக... ஆனால் இந்த ஜட இயற்கையின் அமைப்பு எப்படி என்றால், நாம் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும். ஆத்யாத்மிக, உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்டது, மற்றும் மற்ற உயிர்வாழிகளால் ஏற்படும் துயரங்கள் இருக்கின்றன. பிறகு மற்றொரு வகையான துயரங்களுக்கு, 'ஆதிதைவிக' எனப் பெயர். ஆதிதைவிக, சிலர் வீட்டில் பேய்கள் தாக்கி தொல்லை கொடுக்கும். பேயைப் பார்க்க முடியாது, ஆனால் அவர், சித்தப்பிரமை பிடித்து, எதையோ பிதற்றுவார். அல்லது பஞ்சமோ, பூகம்பமோ நேர்கிறது, போர் மூள்கிறது, நடப்பு வியாதிகள், இப்படி பல விஷயங்கள் உள்ளன. ஆக துன்பங்கள் எப்போதுமே இருக்கின்றன. ஆனால் நாம் எப்படியோ ஒட்டவைத்து பிரச்சனைகளை சரிசெய்ய முயற்சி செய்கிறோம். துன்பங்கள் எப்போதுமே இருக்கின்றன. அனைவரும் துன்பத்திலிருந்து வெளியேற முயற்சி செய்கிறார்கள், அது உண்மை. வாழ்க்கையின் முழு போராட்டமும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு தான். ஆனால் நிவாரணத்திற்கு பல வகையான தீர்வுகள் வழங்கப்படுகின்றன. ஒருவர், நீங்கள் இந்த வழியில் துன்பத்திலிருந்து வெளியே வரலாம் என்று கூறினால், வேறொருவர் அந்த வழியில் செல்லுங்கள் என்று கூறுகிறார். ஆக, நவீன விஞ்ஞானிகள்,  தத்துவ அறிஞர்கள், நாத்திகர்கள், ஆத்திகவாதிகள், கர்மிகள் என பலரும் வெவ்வேறு தீர்வுகளை வழங்குகிறார்கள். ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பொறுத்தவரை, வெறும் உங்கள் உணர்வை மாற்றிக் கொண்டால், உங்கள்ளல் எல்லா துயரங்களிலிருந்தும் விடுபட முடியும். அவ்வளவு தான். அது தான் கிருஷ்ண உணர்வு. நான் உங்களுக்கு பல முறை இதற்கு உதாரணத்தை கொடுத்திருக்கிறேன்... நமது எல்லா துன்பங்களுக்கும் அஞானம், அறியாமை தான் காரணம். அந்த ஞானத்தை, நல்ல தகுதியுள்ள ஆணையுரிமை வாய்ந்த பக்தர்களுடன் தொடர்பு கொள்வதால் அடைய முடியும்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:53, 29 June 2021

Lecture -- Seattle, September 27, 1968