TA/Prabhupada 0280 -பக்தி தொண்டு என்றால் புலன்களைத் தூய்மைப்படுத்துவது

Revision as of 19:00, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.2 -- San Francisco, September 11, 1968

ஆகையால் கிருஷ்ண உணர்வு, அல்லது பக்தி தொண்டு, என்றால் புலன்களைத் தூய்மைப்படுத்தல். அவ்வளவு தான். நாம் புலன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை பூண்டோடு அழிக்க வேண்டாம். இல்லை. நாம் வெறுமனே புலன்களை தூய்மைப்படுத்த வேண்டும். புலன்களிலிருந்து எவ்வாறு நீங்கள் விலக முடியும்? ஏனென்றால் நீங்கள் ஜீவாத்மாக்கள், புலன்கள் அங்குள்ளது. ஆனால் விஷயம் யாதெனில் இந்த தருணத்தில், நாம் பௌதிக தூய்மைக்கேட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால், நம் புலன்கள் முழுமையான இன்பத்தைப் பெறவில்லை. இதுதான் மிகவும் அறிவுப்பூர்வமானது. ஆகையால் பக்தி தொண்டு என்றால் புலன்களைத் தூய்மைப்படுத்துவது.


ஸர்வோபாதி-விநிர்முக்தம்-தத்-பரத்வேன நிர்மலம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170)


நிர்மலம் என்றால் தூய்மை. உங்கள் புலன்களை நீங்கள் எவ்வாறு தூய்மைபடுத்தலாம்? அது நாரத-பக்தி-ஸூத்ரவில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லியிருப்பது ஸர்வோபாதி-விநிர்முக்தம். புலன்களின் தூய்மை என்றால் பலவிதமான அனைத்து பதவிகளின் பெயரிலிருந்து விடுபட வேண்டும். நம் வாழ்க்கை பட்டப் பெயர் நிறைந்தது. எவ்வாறு என்றால் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் "நான் இந்தியன்," நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் "நான் சந்நியாசி," நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் அமெரிக்கர் என்று, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் "ஆண்," நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் "பெண்," நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் "வெள்ளை," நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் "கருப்பு." பல விதமான பட்டப் பெயர்கள். இவை அனைத்தும் பட்டப் பெயர்கள். ஆகையால் புலன்களை தூய்மைப்படுத்தல் என்றால் பட்டப் பெயரை தூய்மைப்படுத்தல்.


மேலும் கிருஷ்ண உணர்வு என்றால் அதாவது "நான் இந்தியனோ ஐரொப்பியனோ அல்லது அமெரிக்கனோஅதுவும் இதுவும் இல்லை. நான் நித்தியமாக கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டுள்ளேன். நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு." நாம் முழுமையாக ஏற்றுக் கொண்டால் அதாவது "நான் கிருஷ்ணரின் அங்க உறுப்பு," அது தான் கிருஷ்ண உணர்வு மேலும் அதுவே உங்கள் புலன்களை தூய்மைப் படுத்தும். ஆகையால் கிருஷ்ணரின் அங்க உறுப்பாக, நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும். அது தான் உங்கள் மகிழ்ச்சி. இப்போது நாம் நம்முடைய புலன்களை திருப்திபடுத்த முயற்சிக்கிறோம், நம் பௌதிக புலன்களை. நீங்கள் உங்களை.... நீங்களே அறியும் போது அதாவது நீங்கள் கிருஷ்ணரின் அங்க உறுப்பு என்று, பிறகு நீங்கள் கிருஷ்ணரின், கோவிந்தர் புலன்களை திருப்திபடுத்துவீர்கள். மேலும் அவருடைய புலன்களை திருப்திபடுத்துவதன் மூலம், உங்களுடைய புலன்கள் திருப்தி அடையும். பண்பாடற்ற உதாரணம் போல் - இது ஆன்மீகம் அல்ல - எவ்வாறு என்றால் கணவர் அனுபவிப்பவர் என்று புரிந்துக் கொள்ள வேண்டும், மேலும் மனைவி அனுபவிக்கப்படுபவர் என்று கருதப்படுகிறது. ஆனால் மனைவி கணவனின் புலன்களை திருப்திப்படுத்தும் போது, அவருடைய (அவளுடைய) புலன்களும் . திருப்தி அடைகிறது.


அதேபோல், எவ்வாறு என்றால் உங்கள் உடம்பில் சில அரிப்பு இருந்தால், மேலும் உங்கள் உடம்பில் ஒரு அங்கம், அந்த விரல்கள், உடம்பை சொறிந்துவிடுகிறது, அந்த திருப்தி விரல்களாலும் உணரப்படுகிறது. அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் திருப்தியினை உணர்கிறது என்று பொருள் அல்ல, ஆனால் உடம்பு முழுவதும் இந்த திருப்தியான உணர்வை உணர்கிறது. அதேபோல், முழுமுதற் கிருஷ்ணர், நீங்கள் கிருஷ்ணரை திருப்திபடுத்தும் போது, கிருஷ்ணரின் புலன்கள், கோவிந்த, பிறகு முழு பேரண்டத்தின் திருப்தியும் இடம் பெறுகிறது. இதுதான் அந்த விஞ்ஞானம்.


தஸ்மின் துஸ்தே ஜகத் துஸ்த


மற்றொரு உதாரணம் எவ்வாறு என்றால் உங்கள் உடலில் வயிற்றை நீங்கள் திருப்திப்படுத்தினால், பிறகு உடல் முழுவதும் திருப்தி அடையும். உணவுப் பொருள்களை ஜீரனிப்பதன் மூலம் வயிறு சக்திகளை கொடுக்கிறது, அதை அது இரத்தமாக மாற்றுகிறது, அது இதயத்திற்கு வரும், மேலும் இதயம் வழியாக உடல் முழுவதும் பரவச் செய்கிறது, மேலும் உடல் முழுவதும் இருந்த மனப்பதட்டம், கடும் சோர்வு, களைந்து திருப்தி அடையும். ஆகையால் இது தான் கிருஷ்ண உணர்வின் செயல்முறை. இது தான் கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானம், மேலும் கிருஷ்ணரே நேரில் விளக்குகிறார். ஆகையால் யஜ் ஞாத்வா, கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தைப் புரிந்துக் கொண்டால் பிறகு அங்கு தெரியாதது ஒன்றும் இல்லை. அனைத்தும் தெரிந்துவிடும். அது அவ்வளவு அருமையான காரியம்.