TA/Prabhupada 0281 - மனிதன் ஒரு மிருகம், ஆனால் விவேகமுள்ள மிருகம்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0281 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, San Francisco]]
[[Category:TA-Quotes - in USA, San Francisco]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0280 - Devotional Service Means Purifying the Senses|0280|Prabhupada 0282 - We Have to Follow the Footprints of the Acaryas|0282}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0280 -பக்தி தொண்டு என்றால் புலன்களைத் தூய்மைப்படுத்துவது|0280|TA/Prabhupada 0282 - நாம் ஆச்சார்யர்களின் அடிச்சுவட்டை பின்பற்ற வேண்டும்|0282}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 20: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|4IGdUThH088|Man is Animal, but Rational Animal<br />- Prabhupāda 0281}}
{{youtube_right|ZNDnoQ9IPpg|மனிதன் ஒரு மிருகம், ஆனால் விவேகமுள்ள மிருகம்<br />- Prabhupāda 0281}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 19:01, 29 June 2021



Lecture on BG 7.2 -- San Francisco, September 11, 1968

யக் ஞாத்வா நேஹ பூயோ (அ)'ன்யக் ஞாதவ்யம் அவசிஷ்யதே (பகவத் கீதை 7.2). பூயோ என்றால் அதற்கு மேல் புரிந்துகொள்ள ஒன்றும் இல்லாத நிலை. அனைத்தும் முழுமையாக தெரிந்திருக்கும் நிலை. பிறகு, "ஏன் மக்கள் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முயல்வதில்லை?" என ஒரு கேள்வி எழும்பலாம். இது அர்த்தமுள்ள கேள்வி தான், மேலும் இதற்கு பதில், கிருஷ்ணர் அடுத்த பதத்தில் அளிக்கிறார். மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே யததாம் அபி ஸித்தானாம் கஷ்சின் மாம் வேத்தி தத்வத: (பகவத் கீதை 7.3) மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ. பலவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எப்படி என்றால் இந்த பூமியில் இருப்பவர்களைப் பற்றி நமக்குத் தெரியும், அதைத் தவிர மற்ற கிரகங்களிலும் ஆயிரக் கணக்கான வகைகளைச் சேர்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன், நாம் இங்கு உட்கார்ந்திருக்கிறோம், இவ்வளவு ஆண்களும் பெண்களும் இருக்கிறோம், இதிலேயே பல வகைகள் இருக்கின்றன. மேலும் நீங்கள் வெளியே சென்றால், அங்கும் வெவ்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் இன்னொரு நாட்டிற்குச் சென்றால் - இந்தியா, ஜப்பான், சீனா - அங்கு வெவ்வேறு வகையான மனிதர்களை காண்பீர்கள். எனவே, மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ (பகவத் கீதை 7.3) என்று கூறப்பட்டிருக்கிறது. அத்தகு பலதரப்பட்ட மனிதர்களில், கஷ்சித் யததி ஸித்தயே, சிலர் மட்டுமே வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்துகொள்ள முடிவெடுப்பார்கள், ஏனென்றால் மனிதன் ஒரு விவேகமுள்ள மிருகம். மனிதன் விவேகமுள்ளவன். மனிதன் ஒரு மிருகம், ஆனால் விவேகமுள்ள மிருகம். மனிதனுக்கு கிடைத்திருக்கும் சிறந்த வரப்பிரசாதம் என்னவென்றால், அவனால் எது நல்லது, எது கெட்டது என்பதை தீர்மானிக்க முடியும். அவன், மிருகங்களைவிட அதிகமாக அறிவைப் பெற்றிருக்கிறான். ஆக தற்சமயம் கல்வி முறை மிகவும் மோசமாக இருக்கிறது, அதாவது வாஸ்தவத்தில் அது மிருகங்களுக்கு உகந்த கல்வி முறை தான். உண்பது, உறங்குவது, உடலுரவு கொள்வது மற்றும் தற்காத்தலில் நாம் மிகுந்த ஆர்வம் காட்டினால், அதுதான் மிருகங்களுக்கு உகந்த கல்வி. உண்பது, உறங்குவது, உடலுரவு கொள்வது மேலும் தற்காத்தல், இதை மிருகங்களிடமும் நீங்கள் காணலாம். அதில் வித்தியாசமில்லை. அவைகளுக்கு சொந்த தற்காப்பு ஏற்பாடுகள், சொந்த உறங்கும் முறைகள், சொந்த உடலுரவு முறைகள் எல்லாம் இருக்கின்றன. நீங்கள் உங்கள் மனைவியுடன் ஒதுங்கிய இடத்தில் அழகான, அலங்கரிக்கப்பட்ட அறையில், உறவு கொள்கிறீர்கள், ஆனால் ஒரு நாய் தெருவில் உறவு கொள்கிறது, ஆனால் அதன் விளைவு அதேதான். ஆக உறவு கொள்ளும் முறையை மேம்படுத்துவது நாகரிகத்தின் முன்னேற்றமல்ல. அது ஒழுக்கப்படுத்தப்பட்ட மிருக நாகரிம், அவ்வளவுதான். மிருகங்கள் கூட, நாயும் மற்ற நாய்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும். உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் அணுசக்தியைக் கண்டுபிடித்துவிட்டதாக நீங்கள் நினைத்தால், அது மனித நாகரிகத்தின் முன்னேற்றமல்ல. தற்காப்புக்கு ஒரு ஏற்பாடு, அவ்வளவு தான். அதுபோலவே, நீங்கள் எல்லாத்தையும் ஆராயலாம். மனிதன் தனது ஆன்மீக நிலையை தேடும்பொழுது தான் அவனுடைய ஆய்வு பக்குவம் அடைகிறது. "நான் யார்? நான் யார்? நான் இந்த உடலா? நான் ஏன் இந்த உலகத்திற்கு வந்தேன்?" இந்த அறிவை அடைவதற்கான தாகம் இருக்கவேண்டும். அது தான் மனிதனின் தனிச்சிறப்புரிமை. ஆகையினால் ஒருவன், "நான் யார்?" என்ற கேள்விக்கான பதிலை தொடர்ந்து தேடினால், பிறகு அவன் இறுதியில் இறைவனை நாடிச் செல்வான். ஏனென்றால் அவன் இறைவனின் அம்சம். ஆகவே மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷூ (பகவத் கீதை 7.3). பல பல ஆயிரக் கணக்கான பலதரப்பட்ட மனிதர்களில், ஒன்று, அல்லது சிலர் மட்டுமே, கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். கடவுளை தெரிந்துகொள்வது இருக்கட்டும், சும்மா தன்னைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பதே அரிதான விஷயம். மேலும் அவன் தன்னைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தால், பிறகு படிப்படியாக அவன் கடவுளை நாடிச் செல்வான்.