TA/Prabhupada 0294 - கிருஷ்ணரிடம் சரணடைவதில் ஆறு நோக்கங்கள் உள்ளன: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0294 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0293 - Twelve Kinds of Rasas, Humor|0293|Prabhupada 0295 - One Living Force is Supplying all the Demands of all other Living Entities|0295}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0293 - பன்னிரெண்டு விதமான ரஸஸ், மனநிலை உள்ளது|0293|TA/Prabhupada 0295 - ஒரு உயிருள்ள சக்தி மற்ற அனைத்து ஜீவாத்மாக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது|0295}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 20: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|ESE7I9NEn40|கிருஷ்ணரிடம் சரணடைவதில் ஆறு நோக்கங்கள் உள்ளன<br />- Prabhupāda 0294}}
{{youtube_right|gOVlQMRHuQI|கிருஷ்ணரிடம் சரணடைவதில் ஆறு நோக்கங்கள் உள்ளன<br />- Prabhupāda 0294}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 19:05, 29 June 2021



Lecture -- Seattle, October 4, 1968

கிருஷ்ணரிடம் சரணடைவதில் ஆறு நிலைகள் உள்ளன. சரணாகதியின் ஒரு நிலை எப்படி என்றால், "கிருஷ்ணர் என்னை காப்பாற்றுவார்," என்ற நம்ம்பிக்கை. ஒரு சிறு பிள்ளைக்கு தன் தாயின்மீது எப்படி முழு விசுவாசம் இருக்கிறதோ அப்படித்தான். "என் தாய் இருக்கிறாள். எனக்கு எந்த ஆபத்தும் வராது." திட நம்பிக்கை. நான் பார்த்திருக்கிறேன். எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும். எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். கல்கத்தாவில், என் இளம் நாட்களில், நான் ட்ரேம் வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன், மேலும் என் இளைய மகன், என்னுடன் இருந்தான். அவனுக்கு இரண்டோ, இரண்டரை வயதோ இருக்கும். அப்பொழுது அந்த கண்டக்டர், விளையாட்டாக, அவனிடம் கேட்டார், "உனக்கான டிக்கேடுக்கு காசை கொடு." அதற்கு அவன் முதலில் கூறினான்: "என்னிடம் பணம் இல்லை." அதற்கு கண்டக்டர் கூறினார், "அப்படியென்றால் நீ கீழே இறங்கு." அவன் உடனேயே கூறினான், "ஓ, என் தந்தை இங்கு இருக்கிறார்." (சிரிப்பு) புரிகிறதா. "நீங்கள் என்னை கீழே இறங்க சொல்ல முடியாது. என் தந்தை இங்கு இருக்கிறார்." நீங்கள் பார்த்தீர்களா? ஆக இதுதான் அடிப்படை தத்துவம். நீங்கள் கிருஷ்ணரை அணுகியிருந்தால், மிகப் பெரிய ஆபத்தும், பயமும் உங்களை தளர வைக்காது. அதுதான் உண்மை. ஆக அப்பேர்பட்டவர் தான் கிருஷ்ணர். ஆக இந்த தலைச்சிறந்த வரப்பிரசாதத்தை, கிருஷ்ணரை அடைய முயற்சி செய்யுங்கள். மேலும் கிருஷ்ணர் என்ன கூறுகிறார்? கெளந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஷ்யதி (பகவத் கீதை 9.31). "என் பிரியமான கெளந்தேயனே, குந்தியின் மகனே, அர்ஜுனா, என் பக்தர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை என்பதை இந்த உலகம் முழுவதிலும் உறுதியுடன் அறிவிப்பாயாக." ஒருபோதும் தோல்வி அடைய மாட்டார்கள். கெளந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: பிரணஷ்யதி. இதுபோலவே, பகவத் கீதையில் பல வரிகள் இருக்கின்றன. நான் பகவத் கீதையிலிருந்து குறிப்பிடுவது ஏனென்றால் இந்த புத்தகம் உலகெங்கும் பிரபலமானது, மேலும்... இந்த விலை மதிப்பிட முடியாத ஞானத்தின் நூலை புரிந்துகொள்ள முயலுங்கள், படிக்க முயலுங்கள். ஆக கிருஷ்ணர் கூறுகிறார்: அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸ்ர்வம் ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ-ஸமன்விதா: (பகவத் கீதை 10.8) கிருஷ்ணரை வழிபட உகந்தவர் யார்? அது இங்கு விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது புதா. புதா என்றால் சிறந்த அறிவாற்றல் வாய்ந்த நபர். போத, போத என்றால் அறிவு, மற்றும் புதா என்றால் விவேகமுள்ள, ஞானம் நிறைந்த ஒருவர். எல்லோரும் அறிவைத் தேடிச் செல்கிறார்கள். உங்களிடம் இந்த வோஷிங்டன் பல்கலைக் கழகம் இருக்கிறது. அங்கே நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு ஞானத்தை பெற வந்திருக்கிறார்கள். ஆக, அறிவின் பக்குவ நிலையை, அதாவது அறிவின் மீஉயர்ந்த தளத்தை அடைந்த ஒருவன், புதா என்றழைக்கப்படுகிறான். ஆக வெறும் புதா மட்டுமல்ல, ஆனால் பாவ-ஸமன்விதா: . பாவ என்றால் பரவசம். ஒருவன் நன்கு கற்றறிந்தவனாகவும் விவேகமுள்ளவனாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் ஆன்மீக ரீதியாக பரவசத்தையும் உணர வேண்டும். "அப்படிப்பட்ட ஒருவன்," கிருஷ்ணர் கூறுகிறார், இதி மத்வா பஜந்தே மாம். "அப்படிப்பட்டவர்கள் என்னை வழிபடுவார்கள் அதாவது நேசிப்பார்கள்." யாரொருவன் நல்ல புத்தியுள்ளவனோ, மற்றும் யாரொருவன் முக்குணங்களுக்கு அப்பால் அந்த திவ்யமான பரவசத்தை முழுமையாக உணர்கிறானோ, அப்பேர்பட்டவன், கிருஷ்ணரை வழிபடுவான் அதாவது நேசிப்பான். ஏன்? ஏனென்றால் இதி மத்வா, "இதை நன்கு புரிந்துகொண்டு." எதை புரிந்துகொண்டு? அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ (பகவத் கீதை 10.8), "அனைத்திற்கும் மூலமானவன் நானே, ஸர்வஸ்ய." நீங்கள் எதை ஆராய்ந்தாலும் சரி, அது தோன்றிய மூல காரணத்தை தொடர்ந்து தேடிப் பார்த்தால், அது கிருஷ்ணர் தான் என்பதை உணர்வீர்கள். வேதாந்தமும் அதையே தான் கூறுகிறது. ப்ரஹ்மன் என்றால் என்ன? அதாதோ ப்ரஹ்ம ஜிஞாசா.