TA/Prabhupada 0301 - மிகவும் அறிவார்ந்த நபர்கள் - அவர்கள் நடனமாடுகிறார்கள்

Revision as of 01:01, 3 November 2016 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0301 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture -- Seattle, October 2, 1968

இப்போது இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நாம் பகவான் சைதன்யரின் போதனைகள் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். அவர், ... ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் வங்காளத்தில் தோன்றினார். இந்தியாவின் ஒரு மாகாணத்தில், மற்றும் அவர் குறிப்பாக கிருஷ்ண பக்தி இயக்கத்தை போதித்தார். அவரது நோக்கம் இந்தியாவில் பிறந்த எவர் ஒருவரும் இந்த கிருஷ்ண பக்தி உபதேசத்தை எடுத்து கொள்ள வேண்டும் என்பது, மற்றும் உலகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்பதுமே ஆகும். அந்த கட்டளையை செயல் படுத்த நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன். எனவே என் கோரிக்கை இதுதான், நீங்கள் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பது, உங்கள் முழு அறிவுடன் நன்கு ஆறாய்ந்த பின். கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். உங்கள் வாதங்கள், அறிவு, தர்க்கம், உணர்வின் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - நீங்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள் - மற்றும் நீங்கள் விழுமியமாக, சந்தேகமின்றி விழுமியமாக காணலாம். இந்த புத்தகத்தை நாம் வெளியிட்டிருக்கிறோம், "பகவான் சைதன்யரின் போதனைகள்", மற்றும் மற்ற புத்தகங்கள், பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். எனவே அவற்றை படிக்க முயற்சி செய்யுங்கள். எங்களிடம் இதழ்களும் இருக்கிறது, "பகவத் தரிசனம்". நாம் உணர்வாளர்கள் இல்லை, வெறுமனே நடனம் ஆடுவதற்கு. நடனம் புரிவது என்பது பெரும் மதிப்பிற்குரியது; அதை நீங்கள் எங்களுக்குடன் நடனமாடினால், நீங்களும் உணரலாம். அது சில வேடிக்கையான கூட்டாளிகளின் நடனம் அல்ல. இல்லை. அதிமிக அறிவார்ந்த நபர்கள், அவர்கள் நடனமாடுகிறார்கள். இது நன்றாக செய்யப்பட்டிருக்கிறது ஒரு சிறிய பாலகன் கூட - இங்கே போன்ற, அவர் ஒரு பாலகன் - அவர் பங்கேற்க முடியும். உலகத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். எங்களுடன் சேர்ந்து, ஹரே கிருஷ்ணா ஜபித்து மற்றும் நடனமாடினால், மற்றும் நீங்களும் அதை உணரலாம். மிகவும் எளிய முறை. நீங்கள் எந்த விதமான உயர்ந்த தத்துவமோ அல்லது வார்த்தை ஜாலமோ, இதுவோ அதுவோ எதுவும் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. எளிய விஷயம். எளிய விஷயம் என்ன? கடவுள் மகத்தானவர், அனைவருக்கும் தெரியும், நாம் அந்த மகத்தானவரின் ஒரு பகுதி மற்றும் அங்கமுமாவோம். ஆதலால் நாம் அந்த மகத்துவருடன் இணையும் பொழுது நாமும் மகத்துவர்களாகிறோம். உங்கள் உடல் போன்று, உங்கள் உடலின் ஒரு சிறிய பாகம், ஒரு சிறிய விரல் அல்லது கால்விரல், அது கூட முழு உடலின் மதிப்பே ஆகும். ஆனால் அந்த சிறிய பகுதி அல்லது பெரிய பகுதி உடலில் இருந்து பிரிந்த உடனே, அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அதற்கு எந்த மதிப்பும் இல்லை. இந்த விரல், உங்கள் உடலின் ஒரு மிக சிறிய பகுதி. ஏதாவது வலி இருந்தால், நீங்கள் அதற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை செலவு செய்கிறீர்கள். நீங்கள் வலியை குணப்படுத்த மருத்துவருக்கு ஆயிரக்கணக்கான டாலர்கள் செலுத்துகிறீர்கள், மற்றும் மருத்துவர் இவ்வாறு கூறும்பொழுது, "இந்த விரலை," அது என்ன கூறுவார்கள், "இடம் பெயர்க்கவோ அல்லது துண்டிக்கவோ, பிரிக்கவோ வேண்டும், இல்லை என்றால் முழு உடலும் பாதிக்கப்படும்," ஆதலால் இந்த விரலை உங்கள் உடலில் இருந்து துண்டிக்கும் போது, நீங்கள் அதை பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு மதிப்பும் இல்லை. புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு தட்டச்சு இயந்திரம், ஒரு சிறிய திருகு, அது விடுபட்ட போது, உங்கள் இயந்திரம் நன்றாக வேலை செய்வதில்லை. நீங்கள் ஒரு பழுது பார்க்கும் கடைக்கு செல்கிறீர்கள். அவர் பத்து டாலர்கள் கட்டணம் கேட்கிறார். நீங்கள் உடனடியாக பணம் செலுத்துகிறீர்கள். அந்த சிறிய திருகு, அது அந்த இயந்திரத்தை விட்டு வெளியே இருக்கும் போது, அதற்கு ஒரு காசு மதிப்பு கூட இல்லை. இதேபோல், நாம் எல்லோரும் முதற்கடவுளின் பகுதி மற்றும் அங்கமுமாவோம். நாம் எல்லோரும் முதற்கடவுளுடன் சேர்ந்து வேலை செய்தால், அதாவது கிருஷ்ண உணர்வுடன் வேலை செய்தாலோ அல்லது கடவுள் உணர்வுடன் வேலை செய்தாலோ, அதாவது, "நான் ஒரு பகுதி மற்றும் அங்கமுமாவேன்..." எவ்வாறு இந்த விரல் என் உடலுடன் ஒத்து முழு உணர்வோடு செயல்படுகிறதோ அவ்வாறு. எப்போதெல்லாம் சிறிய வலி வந்தாலும் என்னால் உணர முடிகிறது. இதேபோல், நீங்கள் உங்களை கிருஷ்ண உணர்வோடு இணைத்துக்கொண்டால், நீங்கள் உங்கள் இயல்பான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் வாழ்க்கை வெற்றிபெறும். மற்றும் நீங்கள் கிருஷ்ண உணர்விலிருந்து பிரிந்த உடனே, முழு பிரச்சனையும் அங்கு தான் உள்ளது. முழு பிரச்சனையும் அங்கு தான் உள்ளது. எனவே பல உதாரணங்கள் உள்ளன நாம் ஒவ்வொரு நாளும் இந்த வகுப்பில் எடுத்துரைக்கிறோம். எனவே நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இந்த கிருஷ்ண உணர்வை ஏற்க வேண்டும், மற்றும் நமது இயல்பான நிலையை அடைய வேண்டும். இது தான் கிருஷ்ண பக்தி இயக்கம் ஆகும்.