TA/Prabhupada 0303 - தெய்வீகமானது, நீ அப்பால் பட்டவன்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 French Pages with Videos Category:Prabhupada 0303 - in all Languages Category:FR-Quotes - 1968 Category:FR-Quotes - Le...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 1: Line 1:
<!-- BEGIN CATEGORY LIST -->
<!-- BEGIN CATEGORY LIST -->
[[Category:1080 French Pages with Videos]]
[[Category:1080 Tamil Pages with Videos]]
[[Category:Prabhupada 0303 - in all Languages]]
[[Category:Prabhupada 0303 - in all Languages]]
[[Category:FR-Quotes - 1968]]
[[Category:TA-Quotes - 1968]]
[[Category:FR-Quotes - Lectures, General]]
[[Category:TA-Quotes - Lectures, General]]
[[Category:FR-Quotes - in USA]]
[[Category:TA-Quotes - in USA]]
[[Category:FR-Quotes - in USA, Seattle]]
[[Category:TA-Quotes - in USA, Seattle]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0302 -Les gens n’aiment pas se soumettre|0302|FR/Prabhupada 0304 - Maya ne peut pas recouvrir le Tout Suprême|0304}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0302 - மக்களுக்கு சரணடைவதில் நாட்டம் இருப்பதில்லை|0302|TA/Prabhupada 0304 -பரம பூரணத்தை மாயையால் மறைக்க முடியாது|0304}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|7jkwGqDcdpo|Au delà de la transcendance<br />- Prabhupāda 0303 }}
{{youtube_right|uHZlS8DCOMU|தெய்வீகமானது, நீ அப்பால் பட்டவன்<br />- Prabhupāda 0303 }}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 44: Line 44:
''மனஸஸ் து பரா புத்திர்''  
''மனஸஸ் து பரா புத்திர்''  
''யோ புத்தே: ரதஸ் து ஸ''
''யோ புத்தே: ரதஸ் து ஸ''
([[Vanisource:BG 3.42|BG 3.42]])
([[Vanisource:BG 3.42 (1972)|பகவத் கீதை 3.42]])





Latest revision as of 19:08, 29 June 2021



Lecture -- Seattle, October 2, 1968


பிரபுபாதர்: மேலும் வாசியுங்கள்.


தமால கிருஷ்ணன்: "உன் நிலைப்பாடு தெய்வீகமானது."


பிரபுபாதர்: தெய்வீகமானது. "நீ அப்பால் பட்டவன்." இது பகவத் கீதையில் விளக்கப் பட்டிருக்கிறது


இந்த்ரியாணி பராண்-யாஹுர் இந்த்ரியேப்ய: பரம் மன மனஸஸ் து பரா புத்திர் யோ புத்தே: ரதஸ் து ஸ (பகவத் கீதை 3.42)


இப்போது... முதலில் இந்த உடலை உணருகிறீர்கள். உடல் என்றால் புலன்கள். ஆனால் மேலும் ஆராய்ந்தால், மனம் தான் புலன் செயல்பாட்டின் மையம் என உணருகிறோம். மனம் நோயற்றதாக இருந்தால் தான், நம்மால் புலன்களோடு செயல் புரிய முடியும். ஆகையால்


இந்த்ரியேப்ய: பரம் மன


புலன்களுக்கு அப்பால் மனம் உள்ளது, மற்றும் மனதிற்கு அப்பால் புத்தி உள்ளது, மற்றும் புத்திக்கும் அப்பால் ஆன்மா உள்ளது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் வாசியுங்கள்.


தமால கிருஷ்ணன்: "கிருஷ்ணரின் மேம்பட்ட சக்தி ஆன்மீகமானது மற்றும் வெளிப்புறச் சக்தி ஜடமானதாகும். ஜட சக்திக்கும் ஆன்மீக சக்திக்கும் நடுவில் நீ இருப்பதால் உன் நிலைப்பாடு நடுத்தரமானது.


வேறுவிதமாக கூறினால், நீ கிருஷ்ணரின் நடுத்தர சக்தியை சேர்ந்தவனாவாய். நீ ஒரே நேரத்தில் கிருஷ்ணரிடமிருந்து ஒன்றுப் படுவாய் அதே சமயம் வேறுபடுவாயாக. நீ ஆன்மா என்பதால் நீ கிருஷ்ணரிடமிருந்து வேறுபடுவதில்லை. ஆனால் நீ வெறும் கிருஷ்ணரின் அணுவைப் போன்ற அம்சம், ஆகையால். நீ அவரிடமிருந்து வேறுபட்டவன்.


பிரபுபாதர்: இந்த இடத்தில் நடுநிலை சக்தி என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்படுகிறது. நடுநிலை சக்திக்கு சரியான சமஸ்கிருத சொல் தடஸ்த. நிலம் முடியும் இடத்தில் கடல் ஆரம்பிப்பது போல் தான்.கரையில் துளியளவு நிலம் இருக்கிறது. பசிபிக் கரைக்கு சென்றால் அங்கு துளியளவு நிலம் காணலாம், அது போல் தான். சில நேரங்களில் அது தண்ணீரால் மூடப்பட்டிருக்கும் மற்றும் சிலப் பொழுது நிலம் தென்படும். அது போலவே, ஆன்மாவான நாம், பகவானுடன் இயல்பில் ஒன்றாக இருந்தாலும், சில நேரங்களில் மாயையால் மூடப்பட்டிருக்கிறோம் மற்றும் மற்ற நேரங்களில் கட்டற்று இருக்கிறோம். ஆகையால் நமது நிலைப்பாடு நடுத்தரமானது. நம் நிலையை நாம் எப்பொழுது புரிந்துக் கொள்கிறோமோ, அப்பொழுது... அப்படி தான்... அதே உதாரணம் தான். புரிந்து கொள்ள பாருங்கள்.


கடற்கரையில் நிலத்தின் துளி பாகம் தண்ணீரால் சில நேரங்களில் மூடப்பட்டிருக்கும், பின்னர் மறுபடியும் நிலமாகவே தோன்றும். அதுபோலவே நாம் சில நேரங்களில் மாயையால் , கீழ்நிலை சக்தியால் கவரப்படுகிறோம், மற்றும் சில நேரங்களில் விடுவிக்கப்படுகிறோம். ஆகையால் நாம் அந்த கட்டற்ற நிலையை கட்டிக்காக்க வேண்டும். திறந்த நிலத்தில் எப்படி தண்ணீர் இருப்பதில்லையோ, அப்படித் தான். கடல் தண்ணீரிலிருந்து சற்று தூரம் வந்தால், அங்கு தண்ணீர் இருப்பதில்லை, வெறும் நிலம் தான். அதுபோலவே, நீ உன்னை நீயே ஜட உணர்விலிருந்து வெளியே வைத்திருந்தால், கிருஷ்ண உணர்வு அல்லது தைவீக உணர்வு என்கிற நிலத்திற்கு வந்தால், உன்னால் உன் சுதந்திரத்தை உன்னிடம் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் நீ உன்னை நடுத்தர நிலையில் வைத்திருந்தால், பின்னர் சில நேரங்களில் மாயையால் கவர்ந்திருப்பாய் மற்றும் சில நேரங்களில் விடுவிக்கப் படுவாய். இது தான் நம் நிலமை.