TA/Prabhupada 0322 - உடல் உன் கர்மத்தை பொறுத்து கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது

Revision as of 13:05, 25 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0322 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.15.40 -- Los Angeles, December 18, 1973

"இது தான் உன் அமெரிக்கா. இது தான் உன்‌இந்தியா. ", இவ்வாறு நமக்கு உன்னத தந்தையால் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எதுவும் அமேரிக்கனுக்கோ இந்தியனுக்கோ சேர்ந்தது அல்ல. அது அந்த உன்னத தந்தையுடையது. ஆக இந்த உணர்வுக்கு அவர்கள் வராதவரை, அதாவது "நான் அனுபவிப்பதற்காக அந்த தந்தை எனக்கு அளித்திருக்கிறார், எனக்கு சொந்தமானதைப் போல், ஆனால் உண்மையில் இது அந்த தந்தைக்கே சொந்தமானது..." இது தான் கிருஷ்ண உணர்வு. இது தான் கிருஷ்ண உணர்வு என்றழைக்கப்படுகிறது. ஆக கிருஷ்ண உணர்வு உடையவர்கள் முழுமையாக இதை உணர்வார்கள், அதாவது "எதுவும் எனக்கு சொந்தம் இல்லை. எல்லம் அவருக்கே சொந்தம்"


ஈஸாவஸ்யம் இதம் ஸர்வம் யத் கின்ச (Iso mantra 1)


"நுணுக்கமான விஷயங்களும், அணுவும் கடவுளுக்கே சொந்தம். எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது." இந்த உணர்வு உன்னிடம் இருந்தால், நீ விடுவிக்கப்பட்டுகிறாய். அது பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது.


மாம் ச யோ (அ)வ்யபிசாரேண பக்தி-யோகேன ஸேவதே ஸ குணான் ஸமதீத்யைதான் ப்ரஹ்ம-பூயாய கல்பதே (BG 14.26)


சிறைப்படுவது குணமயி மாயையால், பௌதீக இயற்கையின் குணங்களால் சூழப்படுவது. அது தான் அடிமைப்படுவது. ஆனால் ஒருவர் பக்தித்தொண்டில் ஈடுபட்டிருந்தால், அவன் அடிமை அவதில்லை ஏனென்றால் அவனுக்கு எல்லாம் உள்ளது உள்ளபடி தெரிகிறது. உதாரணமாக நான் வெளிநாட்டவன். நான் உங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறேன். இப்போது "இது என் நாடு," என்று நான் உரிமை கேட்டால் எனக்கு பிரச்சினை ஏற்படும். ஆனால் நான் இங்கு விருந்தினராக, வெளிநாட்டவனாக வந்திருப்பதை உணர்ந்து நடந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. நான் கவலை இல்லாமல் சுத்தலாம். அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் எல்லா வசதிகளும் எனக்கு கிடைக்கலாம். எந்த பிரச்சனையும் இருக்காது.


அதுபோலவே நாமும் இந்த ஜட உலகிற்கு ஒரு பயணியாக, ஒரு விருந்தாளியாக வருகிறோம், மற்றும் நான் இவ்வாறு உரிமை கேட்டால், அதாவது "இந்த உலகம் எனக்கு சொந்தம்," அல்லது ஒரு சமுதாயம் அல்லது ஒரு நாடு எனக்கு சொந்தம் என்றால் அது அறியாமை. ஆக கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் இந்த அறியாமையை நீக்குவது, மக்களை அறிவுடையவர் ஆக்குவது, அதாவது "எதுவும் உனக்கு சொந்தம் இல்லை. எல்லாம் கடவுளுக்கு தான் சொந்தம்." ஆக இது தான் பொதுவான செயல்முறை, துறவு. யுதிஷ்டிர மகாராஜா கூறுகிறார்... நான் ஏற்கனவே விவரித்திருக்கிறேன், நாம் அகங்காரத்தில் மிகவும் ஈடுபட்டு இருப்பதனால், "நான் இந்த உடல் மற்றும் இந்த உடலை சம்பந்தப்பட்ட எதுவும் எனக்கு சொந்தமானது." இது மாயை, 'மோஹ'. இது தான் மோகம், மாயை. ஜனஸ்ய மோஹோ அயம். மோஹ என்றால் மாயை. இது தான் மாயை. மாயை என்றால் என்ன?

அஹம் மாமேதி (SB 5.5.8)


"நான் இந்த உடல் மற்றும் இந்த உடலை சம்பந்தப்பட்ட எதுவும் எனக்கு சொந்தமானது." இது தான் மோஹ என்றழைக்கப்படுகிறது, மாயை. அந்த உடல் அவனுக்கு சொந்தமானது கூட இல்லை, ஏனென்றால் அந்த உடல் உன் கர்மத்தை பொறுத்து கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக நீ வழங்கும் தொகையைப் பொறுத்து, எஜமான் உனக்கு ஒரு அறையை நியமிக்கிறான். அந்த அறை உனக்கு சொந்தம் அல்ல. அது உண்மை. நீ வாரத்துக்கு 500 டாலர் செலுத்தினால் உனக்கு ஒரு சிறந்த அறை கிடைக்கும். மற்றும் 25 டாலர் செலுத்தினால் வேறொரு அறை கிடைக்கும். அதுபோலவே வெவ்வேறு விதமான உடல்கள் நமக்கு கிடைத்திருக்கிறது. நாம் அனைவருக்கும் வெவ்வேறு கிடைத்திருக்கிறது. இது ஒரு அறை. வாஸ்தவத்தில் நான் இதுக்குள் இருப்பதால் இது ஒரு அறையை போல் தான். நான் இந்த உடல் அல்ல. அது தான் பகவத்-கீதையின் கற்பித்தல்.


தேஹினோ (அ)ஸ்மின் யதா தேஹே (BG 2.13)


அஸ்மின் தேஹே, தேஹி அதாவது குடியிருப்பவன் இருக்கிறான். அவன் எஜமான் அல்ல. குடியிருப்பவன். வாடகை வீட்டைப் போல் தான். ஒருவர் குடியிருப்பவராக இருப்பார், வேறொருவர் எஜமானாக இருப்பார். அதுபோலவே இந்த உடல் ஒரு வீடு. நான் ஆன்மா, அதாவது குடியிருப்பவன். என் கர்மத்தைப் பொறுத்து, அதாவது நான் செலுத்திய தொகையைப் பொறுத்து நான் இதை பெற்றிருக்கிறேன்.