TA/Prabhupada 0326 - கடவுள் எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை, பரம உரிமையாளர், பரம நண்பர்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0326 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, Pittsburgh]]
[[Category:TA-Quotes - in USA, Pittsburgh]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0325 - Essayer de répandre ce mouvement et ce sera votre sadhana|0325|FR/Prabhupada 0327 - L’être vivant est à l’intérieur des corps grossier et subtil|0327}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0325 - இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்ப முயற்சி செய்யுங்கள், இது தான் உங்கள் சாதனா|0325|TA/Prabhupada 0327 - உயிர் வாழும் ஜீவன், உடலுக்குள்ளே இருக்கின்றது, ஸ்தூல மற்றும் சூட்சும உடலுக்குள்|0327}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|ozpRFLn2DO4| கடவுள் எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை, பரம உரிமையாளர், பரம நண்பர் <br />- Prabhupāda 0326}}
{{youtube_right|Vud382yuE3k| கடவுள் எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை, பரம உரிமையாளர், பரம நண்பர் <br />- Prabhupāda 0326}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/720908BG.PIT_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/720908BG-PIT_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 39: Line 39:
:''ஸர்வ-லோக-மஹேஷ்வரம்''  
:''ஸர்வ-லோக-மஹேஷ்வரம்''  
:''ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்''  
:''ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்''  
:''க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி'' ([[Vanisource:BG 5.29|BG 5.29]])
:''க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி'' ([[Vanisource:BG 5.29 (1972)|பகவத்-கீதை 5.29]])





Latest revision as of 19:15, 29 June 2021



Lecture on BG 2.13 -- Pittsburgh, September 8, 1972

ஆக இந்த ஆனமா எப்படி உடல் மாற்றம் செய்கிறது? இந்த ஜென்மத்துக்கு பிறகு எனக்கு மேம்பட்ட ஜென்மம் கிடைத்தால் நல்லது. ஆனால் தாழ்ந்த இனத்தில் ஜென்மம் எடுத்தால், என் கதி? ஒருவேளை எனக்கு புனை, நாய் அல்லது மாடு ஜென்மம் கிடைத்தால். ஒருவேளை மீண்டும் நீ அமெரிக்காவில் ஜென்மம் எடுத்தால். ஆனால் நீ உன் உடலை மாற்றிக் கொண்டால் முழு சூழ்நிலையே மாறிவிடும். ஒரு மனிதனாக, அரசாங்கம் உனக்கு எல்லா பாதுகாப்பையும் அளிக்கிறது. ஆனால் நீ வேறு உடல் பெற்ற உடனேயே, மரமாகவோ, மிருகங்களாகவோ, வேறுவிதமாக நடத்தப்படுவாய். மிருகங்கள் கசாப்புக் கடைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன, மரங்கள் வெட்டப்படுகின்றன. யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆக இதுதான் ஜட வாழ்க்கையின் நிலைமை. சிலசமயங்களில் நமக்கு நல்வாழ்வு கிடைக்கிறது, சிலசமயங்களில் தாழ்ந்த வாழ்வு கிடைக்கிறது. நிச்சயமாக சொல்லவே முடியாது. அது என் செயல்களை பொறுத்து. அது தான் வாஸ்தவம். இதே ஜென்மத்தில் கூட, நீ நன்கு படித்திருந்தால், உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நீ படிக்காதவனாக இருந்தால் உன் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமாக இருக்காது.


அதுபோலவே, இந்த மனித வாழ்வில் நாம் இந்த மீண்டும் மீண்டும் நிகழ்கிற பிறப்புக்கும் இறப்புக்கும் தீர்வு காணலாம். மேலும் அதுவே மனித வாழ்வின் ஒரே குறிக்கோள், அதாவது பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய்: இந்த ஜட கட்டுப்பாடுகளிலிருந்து எப்படி வெளியேறுவது. நம்மால் தீர்வைக் காண முடியும். அந்த தீர்வு கிருஷ்ண உணர்வு. நாம் கிருஷ்ணரை உணர்ந்த உடன்... கிருஷ்ண உணர்வு என்றால், கிருஷ்ணர் முழுமுதற் கடவுள். நாம் கிருஷ்ணரின் அம்சம். இது தான் கிருஷ்ண உணர்வு. வெறும் இதை புரிந்துகொள்வது. அதாவது... நீ உன் தந்தையை, உன் சகோதரர்களை மற்றும் தன்னை புரிந்து கொள்கிறாய். அதுபோல்தான். நீங்கள் ஒரு தந்தையின் பிள்ளைகள். ஆக இதழ் எளிதாக புரிந்து கொள்ளலாம். ஒரு தந்தை முழு குடும்பத்தையும் பராமரிப்பது போல், கிருஷ்ணர், முழுமுதற் கடவுள், அவருக்கு எண்ணிக்கையற்ற பிள்ளைகள், உயிர்வாழீகள் இருக்கின்றன மற்றும் அவர் இந்த மொத்த தேகத்தை, முழு குடும்பத்தை பராமரிக்கிறார். இதில் என்ன குழப்பம்? பிறகு அடுத்தக்கட்ட பொறுப்பு உயர்நிலை உணர்வை அடைவது. ஒரு நல்ல மகன் எப்பொழுது, "அப்பா எனக்காக இவ்வளவு செய்திருக்கிறார். நான் என் தந்தை எனக்காக செய்ததுக்கெல்லாம் நன்றிக்கடனை செலுத்துவேன், குறைந்தபட்சம் நன்றி மறக்க மாட்டேன்," இந்த உணர்வுக்கு தான் கிருஷ்ண உணர்வு என்று பெயர். ஆக கிருஷ்ண உணர்வுடைவனாவதற்கு நாம் இந்த மூன்று விஷயங்களை‌ புரிந்துகொள்ள வேண்டும்:


போக்தாரம் யக்ஞ-தபஸாம்
ஸர்வ-லோக-மஹேஷ்வரம்
ஸுஹ்ருத ம் ஸர்வ-பூதானாம்
க்ஞாத்வா மாம் ஷாந்திம் ருச்சதி (பகவத்-கீதை 5.29)


நம்மில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அதாவது திருப்தி அடைய முயற்சி செய்கிறோம். இது தான் உயிர் வாழ்வதற்கான போராட்டம். ஆனால் நாம் இந்த மூன்று விஷயங்களை‌ புரிந்துகொண்டால், அதாவது கடவுள் எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை, கடவுள் பரம உரிமையாளர், கடவுள் பரம நண்பர், இந்த மூன்று விஷயங்களை நீ புரிந்துக் கொண்டாள், உடனேயே அமைதி பெறுவாய். உடனேயே. நீ பல நண்பர்களின் உதவியை நாடிச் செல்கிறாய். ஆனால் நாம் வெறும் கடவளை, கிருஷ்ணரை நண்பராக ஏற்றுக்கொண்டால், உன நட்பு பிரச்சினை தீர்ந்து விடும்.


அதுபோலவே, கடவுளை பரம உரிமையாளராக ஏற்றுக்கொண்டால் வேறொரு பிரச்சினை தீர்ந்து விடும். நாம் கடவுளுக்கு சொந்தமான விஷயங்களுக்கு அநியாயமாக உரிமை கேட்கிறோம். நாம் அநியாயமாக உரிமை கேட்பது எப்படியென்றால், "இந்த அமேரிக்கா எனப்படும் நிலம் அமெரிக்கர்களுக்கு சொந்தம்; இந்த ஆப்ரிக்கா எனப்படும் நிலம் ஆப்பிரிக்கர்களுக்கு சொந்தம்." அப்படி கிடையாது. இந்த ஆப்ரிக்கா எனப்படும் நிலம் ஆப்பிரிக்கர்களுக்கு சொந்தம்." அப்படி கிடையாது. நாம் வெவ்வேறு வடிவங்களில் கடவுளின் பிள்ளைகள். மற்றோர் உரிமையை மீறாமல், தந்தையின், கடவுளின் சொத்தை அனுபவிப்பதற்கான உரிமை நமக்கு இருக்கிறது. உதாரணமாக குடும்பத்தில் நாம் பல சகோதரர்களுடன் வாழ்கிறோம். அம்மா, அப்பா நமக்கு சாப்பிட தருவதை நாம் சாப்பிடுகிறோம். நாம் மற்றோர் தட்டை ஆக்கிரமிப்பதில்லை. அது நாகரீகமுள்ள குடும்பம் கிடையாது.


அதுபோலவே, நாம் கடவுள் உணர்வு, கிருஷ்ண உணர்வு பெற்றால், உலகத்தின் எல்லா பிரச்சினைகளும் - சமுதாயம், மதம், பொருளாதாரம், அரசியல் - சம்பந்தப்பட்ட அனைத்தும் தீர்ந்து விடும். அது உண்மை. ஆகையால் நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை பரப்ப முயற்சி செய்கிறோம், மனித சமுதாயத்தின் முழுமையான நலம் கருதி. நாம் புத்திசாலிகளிடம் வேண்டிக் கேட்கிறேன், குறிப்பாக இந்த மாணவர்கள் சமுதாயத்தை, இந்த இயக்கத்தில் சேர்ந்து, இதை ஆய்நதறிய முயற்சி செய்யவேண்டும். நம்மிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன, குறைந்தது இரண்டு டஜன் புத்தகங்கள், பெரிது பெரிதாய், ஆழமான விவரங்கள் கொண்ட புத்தகங்கள். ஆக நீங்கள் அதை படிக்கலாம், இந்த இயக்கத்தை‌புரிந்துக் கொள்ள முயற்சி செய்து, எங்களிடம் வந்து சேரலாம். மிக நன்றி. ஹரே கிருஷ்ண. (கைத்தட்டல்)