TA/Prabhupada 0336 - ஆனால் எப்படி இவர்கள் இப்போது கடவுளளுக்காக பைத்தியமாக இருக்கிறார்கள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0336 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Aligarh]]
[[Category:TA-Quotes - in India, Aligarh]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0335 - Éduquer les gens à devenir des yogis exemplaires|0335|FR/Prabhupada 0337 - Ne perdez pas votre temps à vous soucier de ces soi-disants bonheur et malheur matériel|0337}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0335 - யோகி ஆவதற்கான கல்வியை அளிக்கிறது|0335|TA/Prabhupada 0337 - சொற்ப மகிழ்ச்சி மற்றும் துன்பத்திற்காக கவலை படுவதில் நேரத்தை வீணாக்க தேவையில்லை|0337}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|A42qwBy44zI|ஆனால் எப்படி இவர்கள் இப்போது கடவுளளுக்காக பைத்தியமாக இருக்கிறார்கள் <br/>- Prabhupāda 0336 }}
{{youtube_right|l3KxTmlAbYw|ஆனால் எப்படி இவர்கள் இப்போது கடவுளளுக்காக பைத்தியமாக இருக்கிறார்கள் <br/>- Prabhupāda 0336 }}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 33: Line 33:




''கர்மணா தைவ நேத்ரேண ஜந்துர் தேஹோபத்தயே'' ([[Vanisource:SB 3.31.1|SB 3.31.1]])
''கர்மணா தைவ நேத்ரேண ஜந்துர் தேஹோபத்தயே'' ([[Vanisource:SB 3.31.1|ஸ்ரீமத் பாகவதம் 3.31.1]])




Line 39: Line 39:




''யாந்தி தேவ-வ்ரதா தேவான்'' ([[Vanisource:BG 9.25|BG 9.25]])
''யாந்தி தேவ-வ்ரதா தேவான்'' ([[Vanisource:BG 9.25 (1972)|பகவத்-கீதை 9.25]])




Line 51: Line 51:
ஆக நீ பித்ருலோகத்திற்கு செல்ல நினைத்தால், நீ அங்கே செல்லலாம். நீ தேவலோகத்தில் இருக்கும் மேம்பட்ட கிரகங்களுக்கு செல்ல நினைத்தால், அங்கேயும் செல்லலாம். மேலும் நீ இங்கேயே இருக்க விரும்பினால், இங்கேயும் இருந்திருக்கலாம். மற்றும் நீ கோலோக பிருந்தாவனம் என்னும் லோகத்திற்கு செல்ல விரும்பினால்
ஆக நீ பித்ருலோகத்திற்கு செல்ல நினைத்தால், நீ அங்கே செல்லலாம். நீ தேவலோகத்தில் இருக்கும் மேம்பட்ட கிரகங்களுக்கு செல்ல நினைத்தால், அங்கேயும் செல்லலாம். மேலும் நீ இங்கேயே இருக்க விரும்பினால், இங்கேயும் இருந்திருக்கலாம். மற்றும் நீ கோலோக பிருந்தாவனம் என்னும் லோகத்திற்கு செல்ல விரும்பினால்


''மத்-யாஜினோ (அ)பி யாந்தி மாம்'' ([[Vanisource:BG 9.25|BG 9.25]])
''மத்-யாஜினோ (அ)பி யாந்தி மாம்'' ([[Vanisource:BG 9.25 (1972)|பகவத்-கீதை 9.25]])




Line 57: Line 57:




''த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி'' ([[Vanisource:BG 4.9|BG 4.9]])
''த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி'' ([[Vanisource:BG 4.9 (1972)|பகவத்-கீதை 4.9]])




Line 63: Line 63:




''த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி'' ([[Vanisource:BG 4.9|BG 4.9]])
''த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி'' ([[Vanisource:BG 4.9 (1972)|பகவத்-கீதை 4.9]])




இதுதான் பலன். அதாவது உனக்கு இந்த ஜட உலகில் மறுஜென்மமே இருக்காது. ஆக அது தான் உன்னதமான பலன்.  
இதுதான் பலன். அதாவது உனக்கு இந்த ஜட உலகில் மறுஜென்மமே இருக்காது. ஆக அது தான் உன்னதமான பலன்.  


''புனர் ஜன்ம நைதி மாம் ஏதி. மாம் உபேத்ய புனர் ஜன்ம து: காலயம்-அஷாஷ்வதம் நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா''  ([[Vanisource:BG 8.15|BG 8.15]])
''புனர் ஜன்ம நைதி மாம் ஏதி. மாம் உபேத்ய புனர் ஜன்ம து: காலயம்-அஷாஷ்வதம் நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா''  ([[Vanisource:BG 8.15 (1972)|பகவத்-கீதை 8.15]])




Line 74: Line 74:




''ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே'' ([[Vanisource:SB 1.2.6|SB 1.2.6]])
''ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே'' ([[Vanisource:SB 1.2.6|ஸ்ரீமத் பாகவதம் 1.2.6]])




Line 80: Line 80:




''பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத'' ([[Vanisource:BG 18.55|BG 18.55]])
''பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத'' ([[Vanisource:BG 18.55 (1972)|பகவத்-கீதை 18.55]])




Line 86: Line 86:




''பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத'' ([[Vanisource:BG 18.55|BG 18.55]])
''பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத'' ([[Vanisource:BG 18.55 (1972)|பகவத்-கீதை 18.55]])




Line 92: Line 92:




''யதோ பக்திர் அதோக்ஷஜே'' ([[Vanisource:SB 1.2.6|SB 1.2.6]])
''யதோ பக்திர் அதோக்ஷஜே'' ([[Vanisource:SB 1.2.6|ஸ்ரீமத் பாகவதம் 1.2.6]])




Line 98: Line 98:




''ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத-ஸேவனம் அர்சனம் வந்தனம் தாஸ்யம் ஸாக்யம் ஆத்ம-நிவேதனம்'' ([[Vanisource:SB 7.5.23|SB
''ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத-ஸேவனம் அர்சனம் வந்தனம் தாஸ்யம் ஸாக்யம் ஆத்ம-நிவேதனம்'' ([[Vanisource:SB 7.5.23-24|ஸ்ரீமத் பாகவதம் 7.5.23]])
7.5.23]])




<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 19:19, 29 June 2021



Lecture on SB 1.2.5 -- Aligarh, October 9, 1976

தற்போது நீ இந்த நாட்டில், அதாவது இந்தியாவில் இருக்கிறாய் ஆனால் அடுத்த ஜென்மத்தில், நீ உடலை மாற்றவேண்டிய அவசியம் இருப்பதனால், அடுத்த ஜென்மத்தில் நீ இந்தியாவில் பிறக்காமல் இருக்கலாம். நீ சொர்கலோகத்தில் பிறந்திருக்கலாம் அல்லது மிருகங்களின் சமுதாயத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் அதற்கு எந்த உத்தரவாதம் கிடையாது. கிருஷ்ணர் கூறுகிறார் ததா தேகாந்தர ப்ராப்திர். மரணம் என்றால் உடைமாற்றும். ஆனால் நீ எந்த விதமான உடலை ஏற்கவேண்டும் என்பது தைவீக தீர்மானமானது. ஆனால் அதை நீயும் தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக, நீ மருத்துவ தேர்வில் வெற்றியடைந்தால், அரசாங்க மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது, இருப்பினும் மருத்துவ அதிகாரிகளால் அங்கிகாரம் பெற்றிருக்கவேண்டும். மேலும் பல நிபந்தனைகள் உள்ளன. அதுபோலவே, அடுத்த உடல் கிடைப்பது உன் தேர்வானது அல்ல. அந்த தேர்வு மேம்பட்ட தைவீக அதிகாரத்தை பொறுத்தது.


கர்மணா தைவ நேத்ரேண ஜந்துர் தேஹோபத்தயே (ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)


அடுத்த ஜென்மம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரிவதில்லை. நாம் அடுத்த ஜென்மத்தை தீர்மானிக்க குறிப்பாக எந்த முயற்சியும் செய்வதில்லை. இந்த உடலைவிட்டு வெளியேறியப் பிறகு அடுத்த வாழ்வை ஏற்றே ஆகவேண்டும். ஆகையால் நாம் அதற்காக தயாராக இருக்கவேண்டும். தயாரிப்பு என்பதற்கு பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது,


யாந்தி தேவ-வ்ரதா தேவான் (பகவத்-கீதை 9.25)


நீ மேல்நிலை கிரக அமைப்புகளுக்கு செல்ல தன்னை தயார் செய்தால், அதாவது சந்திர லோகம், சூரிய லோகம், இந்திர லோகம், சொர்க்க லோகம், பிரம்ம லோகம், ஜன லோகம், மகர் லோகம், தபோ லோகம் - இவ்வாறு பல நூற்றுக்கணக்கானவை இருக்கின்றன. நீ அங்கே செல்ல நினைத்தால், அவ்வாறு தயார் செய்து கொள்ளவேண்டும்.


யாந்தி தேவ-வ்ரதா தேவான் பித்ரூன் யாந்தி பித்ரு-வ்ரதா


ஆக நீ பித்ருலோகத்திற்கு செல்ல நினைத்தால், நீ அங்கே செல்லலாம். நீ தேவலோகத்தில் இருக்கும் மேம்பட்ட கிரகங்களுக்கு செல்ல நினைத்தால், அங்கேயும் செல்லலாம். மேலும் நீ இங்கேயே இருக்க விரும்பினால், இங்கேயும் இருந்திருக்கலாம். மற்றும் நீ கோலோக பிருந்தாவனம் என்னும் லோகத்திற்கு செல்ல விரும்பினால்

மத்-யாஜினோ (அ)பி யாந்தி மாம் (பகவத்-கீதை 9.25)


நீ அங்கே செல்லலாம். திரும்பி கடவுளிடம், அவர் திருவீட்டிற்கு. அது சாத்தியம். கிருஷ்ணர் கூறுகிறார்,


த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி (பகவத்-கீதை 4.9)


நீ விரும்பினால் திரும்பி கடவுளிடம், அவர் திருவீட்டிற்கு செல்லலாம். அது சாத்தியம். ஆக புத்தியுள்ளவர்கள், இதை தெரிந்து கொள்ளவேண்டும் "நான் தேவலோகத்திற்குச் சென்றால், அதன் பலன் என்ன. நான் பித்ருலோகத்திற்குச் சென்றால், அதன் விளைவு என்ன. நான் இங்கேயே இருந்திருந்தால், அதன் விளைவு என்ன. மற்றும் நான் திரும்பி கடவுளிடம், அவர் திருவீட்டிற்கு சென்றால், அதற்கு என்ன பலன்." உன்னதமான பலன் என்னவென்றால், நீ திரும்பி கடவுளிடம் சென்றால், என்ன பலன் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.


த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி (பகவத்-கீதை 4.9)


இதுதான் பலன். அதாவது உனக்கு இந்த ஜட உலகில் மறுஜென்மமே இருக்காது. ஆக அது தான் உன்னதமான பலன்.

புனர் ஜன்ம நைதி மாம் ஏதி. மாம் உபேத்ய புனர் ஜன்ம து: காலயம்-அஷாஷ்வதம் நாப்னுவந்தி மஹாத்மான: ஸம்ஸித்திம் பரமாம் கதா (பகவத்-கீதை 8.15)


அது தான் மீஉயர்ந்த பலன். ஆகையால் இங்கு கூறப்பட்டிருக்கிறது,


ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6)


ஆக உனக்கு கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி செல்ல விருப்பம் இருந்தால், யதோ பக்திர் அதோக்ஷஜே. இந்த பக்தி என்கிற பாதையை ஏற்றுக் கொள்ளவேண்டும்,


பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத (பகவத்-கீதை 18.55)


கிருஷ்ணர் அதாவது முழுமுதற் கடவுளை கர்ம அல்லது க்ஞான யோகங்கள் மூலம் புரிந்துகொள்ள முடியாது. எந்த வழிமுறையும் கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கு போதுமானதல்ல. ஆகையால் கிருஷ்ணரால் பரிந்துரைக்கப்பட்ட இந்த வழிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்த்வத (பகவத்-கீதை 18.55)


ஆக பக்தர்களால் நிகழ்த்தி இருந்தாலொழிய நாம் கிருஷ்ண லீலையில் ஈடுபடுவதில்லை. ஆனால் இதையே ஒரு தொழிலாக செய்பவர்களால் நிகழ்த்தப் பட்டிருந்தால் அது தடைப்படுத்தப் பட்டிருக்கிறது. சைதன்ய மஹாப்ரபு ஒருபோதும் இதில் ஈடுபடவில்லை. ஏனென்றால் கிருஷ்ணரே பற்றிய விஷயங்களை பக்தியின் வழிமுறையால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.


யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6)


பகதியை தவிர, வேறு எப்படியும் அது சாத்தியம் அல்ல. கடவுளிடம் திரும்பி, அவருடைய திருவீட்டிற்குச் செல்ல விருப்பம் இருந்தால், பக்தி முறையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அது தான் கிருஷ்ண பக்தி இயக்கம். நம் இயக்கம், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், எப்படி பக்தி தொண்டில் முன்னேறி திரும்பி கடவுளிடம், அவருடைய திருவீட்டிற்குச் செல்வது என்பதை மக்களுக்கு கற்பிக்கிறது. மேலும் இது வெகு கடினமான காரியம் அல்ல. இது எளிதானது. இது எளிதானது இல்லையென்றால் எப்படி இந்த ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் தற்போது இதை தீவிரமாக ஏற்றுக் கொள்கிறார்கள்? இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கு முன்பு, இவர்களில் பலருக்கு கிருஷ்ணர் என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது இவர்கள் எல்லாம் கிருஷ்ணரின் பக்தர்கள். கிருத்துவ பாதிரியார்கள் கூட ஆச்சரியப்படுகிறார்கள். பாஸ்டன் ஊரில் ஒரு கிறித்துவப் பாதிரியார் ஒத்துக்கொண்டார், "இந்த இளைஞர்கள், எங்கள் இளைஞர்கள், கிறித்துவ சமுதாயம் அல்லது யூத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இயக்கத்திற்கு முன்பு இவர்கள் எங்களைப் பார்க்கவோ கடவுளைப் பற்றி எங்களிடம் எதையும் கேட்கவோ அல்லது சர்ச்சுக்கு வரவோ கவலை பட மாட்டார்கள். எதையும் பொருட்படுத்தாமல் இருந்தார்கள். ஆனால் எப்படி இவர்கள் இப்போது கடவுளளுக்காக பைத்தியமாக இருக்கிறார்கள்? அவர்கள் வியந்து போகிறார்கள். 'எதற்காக? எதற்காக இவர்கள் இப்படி மாறிவிட்டார்கள் ?' ஏனென்றால் இவர்கள் இந்த செயல்முறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். செயல்முறை முக்கியம். வெறும் ஊகித்து... பக்தி என்பது வெறும் கருத்தளவிலானதல்ல. இது நடைமுறைக்குரியது. யதோ பக்திர் அதோக்ஷஜே. பக்தி செயல்முறையை ஏற்பது என்றால் கருத்துக்களை ஊகிப்பது அல்ல. செயல்முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். யதோ பக்திர் அதோக்ஷஜே. அந்த செயல்முறை தான்


ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ ஸ்மரணம் பாத-ஸேவனம் அர்சனம் வந்தனம் தாஸ்யம் ஸாக்யம் ஆத்ம-நிவேதனம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5.23)