TA/Prabhupada 0385 - கௌராங்க போலிதே ஹபே பாடலின் பொருள்

Revision as of 19:35, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Gauranga Bolite Habe -- Los Angeles, December 29, 1968

இந்த பாடல் நரோத்தம தாச தாக்குரால் பாடப்பட்டது. அவர் கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சீட பரம்பரையில் வந்த ஒரு பெரிய பக்தரும் ஆச்சாரியாரும் ஆவார். கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயம் என்றால் பகவான் சைதன்யர்முதல் வரும் சீடர்களின் பரம்பரை. ஆக இந்த நரோத்தம தாச தாக்குர் என்பவர் பல பாடல்களை எழுதியுள்ளார். அவைகள் எல்லா வைஷ்ணவர்களாலும் அங்கிகரிக்கப்பட்டவை. அவர் இந்த பாடல்களை எளிதான பங்காள மொழியில் பாடியுள்ளார். ஆனால் இந்த பாடலின் ஆழ்ந்த சிந்தனையும் பொருளும் மதிப்புக்குரியது. அவர் கூறுகிறார்:


கௌராங்க பொலிதே ஹபே புலக-ஷரீர


இது தான் ஜெபத்தின் உன்னதமான நிலை, அதாவது ஜெபிக்க ஆரம்பித்தவுடன் அதாவது சங்கீர்த்தன இயக்கத்தை தொடக்கிவைத்த கௌராங்க பகவானின் நாமத்தை உச்சரித்தவுடன், உடம்பெல்லாம் புல்லரித்து போகும், இது நகல் செய்யவேண்டிய விஷயம் அல்ல. ஆனால் நரோத்தம தாச தாக்குர் கூறுவது என்னவென்றால், கௌராங்க பெருமாளின் திருநாமத்தை ஜெபித்தவுடன் என் உடம்பெல்லாம் புல்லரித்து போகும் அந்த அதிருஷ்டமான நேரம் எப்பொழுது வரும். மற்றும், மெய்சிலிர்த்துப் போனபிறகு,


ஹரி ஹரி போலிதே நயனே பாபே நீர


ஹரே கிருஷ்ண ஜெபிப்பதால் என் கண்களில் ஆனந்த கண்ணீர் வடியும். மேலும் அவர் கூறுகிறார், ஆர கபே நிதாய்சாந்த் கொருணா கரிபே. நாம் எல்லாம் நித்தியானந்த பகவானின் கருணையை வேண்டி கேட்கிறோம். நித்தியானந்தர் தான் மூலமுதல் ஆச்சாரியார் என கருதப்படுகிறார். ஆகையால் நாம் கௌராங்கரை அதாவது சைதன்ய பெருமானை, நித்தியானந்த பகவானின் கருணையால் தான் அணுகவேண்டும். மேலும் நித்தியானந்த பகவானின் காரணமற்ற கருணையை பெற்றவனின் அறிகுறிகள் என்ன? நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், நித்தியானந்தரின் காரணமற்ற கருணையை உண்மையிலேயே பெற்றவனுக்கு, எந்த பௌதீக ஆசைகளும் இருக்காது. அது தான் அறிகுறி.


ஆர கபே நிதாய்சாந்த கொருணா கரிபே ஸம்ஸார-வாஸனா மொர கபே துச்ச


ஸம்ஸார-வாஸனா என்றால் பௌதீக சுகம் பெறுவதற்கான ஆசை; அது என்றைக்கு முக்கியமற்றதாகும்.


இந்த உடல் இருக்கும் வரை நாம் பல பௌதீக விஷயங்களை ஏற்றாக வேண்டியிருக்கிறது. அதுவும் வாஸ்தவம் தான். ஆனால் அதன் மூலம் சுகம் அனுபவிக்கும் நோக்கத்துடன் அல்ல, இந்த உடலையும் ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கு மட்டும் தான். ஆக... அவர் மேலும் கூறுகிறார்: ரூப-ரகுநாத-பதே ஹய்பே ஆகுடி. என்றைக்கு நான் ஆறு கோஸ்வாமிகளால் ஒப்படைக்கப்பட்ட நூல்களை படிக்க வெகு ஆவலாக இருப்பேன்? ஆகுடி என்றால் ஆவலாக இருப்பது. ரூப கோஸ்வாமி பக்தித் தொண்டின் கருத்துகளுக்கு புத்துயிர் அளித்த தந்தை. அவர் பக்தி-ரஸாம்ருத-ஸிந்து எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அப்புத்தகத்தில் சிறப்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. சைதன்ய சரிதாம்ருதம் மற்றும் மற்ற புத்தகங்களிலும் இருக்கவேயிருக்கிறது... அந்த வழிகாட்டுதலை நம்முடைய