TA/Prabhupada 0388 - ஹரே கிருஷ்ண மந்திரம் பொருள்விளக்கம்

Revision as of 08:41, 30 January 2019 by Anurag (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0388 - in all Languages Category:TA-Quotes - Unknown Date Category:TA-Quot...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Hare Krsna Mantra -- as explained on the cover of the record album

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்ற இந்த மந்திர உச்சரிப்பிலிருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர் பெறச் செய்யும் மேன்மையான முறையாகும். தெய்வீக உயிர் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாவோம், ஆனால் பெளதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலுருந்து, நமது உணர்வானது பெளதிக சூழ்நிலையினால் மாசடைந்துள்ளது. வாழ்க்கையின் தவறான புரிதலால், நாமெல்லாம் ஜட இயற்கையின் வளங்களை சுரண்ட முயல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் அதன் விளைவான கடுஞ்சிக்கலில் மேன்மேலும் சிக்கிக் கொள்கிறோம். இந்த கண்துடைப்புக்கு பெயர் தான் மாயை, அதாவது வாழ்விருப்புக்கான கடும் போராட்டம், ஜட இயற்கையின் கடுமையான சட்டத்தை வெல்வதற்கான போராட்டம். நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம், பெளதிக இயற்கைக்கு எதிரான மாயையான இந்த கடின முயறச்சியை உடனேயே நிறுத்த முடியும். கிருஷ்ண உணர்வென்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல. இந்த உணர்வே உயிற்வாழியின் உண்மையான சக்தியாகும். இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும்போது, இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது. இந்த முறையானது கலியுகத்திற்காக வல்லுநர்களால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. நடைமுறை அனுபவத்தில் கூட, இந்த மஹா மந்திரத்தை உச்சரிப்பதால், அதாவது விமோசனத்திற்கான மகா நாம ஜெபத்தால், ஒருவர் உடனடியாக ஆன்மீக தளத்திலிருந்து வரும் தெய்வீக பரவச நிலையை உணரலாம். ஒருவர் புலன்கள், மனது, அறிவு, ஆகிய நிலையை கடந்து உண்மையில் ஆன்மீக உணர்வு நிலையில் இருக்கும்போது, அவர் தெய்வீக நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற இந்த உச்சாடமானது, ஆன்மீக தளத்திலிருந்து நேரடியாக விதிக்கப்பட்டதாகும். இவ்வாறாக இந்த சப்த அதிர்வானது, புலன், மனம், புத்தி என்ற தளத்தில் இருக்கும் கீழ்நிலை உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. இம்மந்திரத்தை உச்சரிப்பதற்காக மொழி தேவையில்லை. எவ்விதமான மனக்கற்பனையும் தேவையில்லை. இது தானாகவே ஆன்மீக தளத்திலிருந்து தோன்றுகிறது, ஆகவே எந்தவிதமான முன் தகுதியுமில்லாமல் ஒருவர் இந்த மந்திர உச்சரிப்பதில் கலந்து கொள்ளலாம். இதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். ஒரு குழந்தையோ, அல்லது ஒரு நாயோ கூட இந்த சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளலாம். இந்த ஜெபத்தை, பகவானின் ஒரு தூய பக்தனின் திருநாவிலிருந்து கேட்கவேண்டும். இதனால் உடனடியான பலன் கிடைக்கும். முடிந்த வரையில் பக்தர் அல்லாதவர்களிடம் இருந்து இந்த நாம ஸங்கீர்த்தனத்தை கேட்பதை தவிர்க்க வேண்டும். பாம்பின் உதடுபட்ட பால் விஷமாகி விடுவது போல்தான். ஹரா என்கின்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். மேலும் அவைகளின் பொருள், "மிக உன்னத நித்தியமான ஆனந்தம்" என்பதாகும். ஹரா என்பது பகவானின் அதி உன்னத ஆனந்த சக்தியை குறிக்கிறது. இந்த சக்தி, ஹரே என்று அழைக்கப்படும் பொழுது, பகவானை அடைய நமக்கு உதவுகிறது. மாயை என்று அழைக்கப்படும் பெளதிக சக்தியானது பகவானின் அநேக சக்திகளில் ஒன்றாகும். உயிர்வாழிகளாகிய நாமும் பகவானின் விளிம்பிலான சக்தியாவோம். உயிர்வாழிகள் பெளதிக சக்தியை விட மேலானர்வகள் என்று விவரிக்கப்பட்டுள்ளனர். உன்னத சக்தியானது தாழ்ந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும்போது பொருத்தமில்லாத ஒரு சூழ்நிலை உருவாகிறது. ஆனால் விளிம்பிலான உன்னத சக்தியானது ஹரா என்று அழைக்கப்படும் உன்னத சக்தியோடு தொடர்பு கொள்ளும் போது, உயிர்வாழி சக நிலையான மகிழ்ச்சியில் நிலை பெறுகிறான். ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும். மந்திர உச்சாடனமானது கட்டுண்ட ஆத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும். தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது இந்த மந்திர உச்சாடனம். ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்ணர் என்று அழைக்கப்படும் உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார். பகவானும் இப்பேர்பட்ட பக்தனுக்கு முன்பு தம்மை வெளிப்படுத்துவார். ஆகவே இந்த கலியுகத்தில் ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, பயனுள்ளது வேறு எதுவுமில்லை.