TA/Prabhupada 0481 - கிருஷ்ணர் அனைவரையும் வசீகரிப்பவர், கிருஷ்ணர் அழகானவர்.

Revision as of 03:00, 30 May 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0481 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, October 18, 1968

எனவே இந்த வாதம், சிவப்பணுக்கள் நின்று விட்டன; ஆகையால் வாழ்க்கை நின்றுவிட்டது- இல்லை. இதைப்போல பல வாதங்களும் பிரதிவாதங்களும் உள்ளன. உண்மையில், இதுதான் உண்மை, ஏனென்றால் நாங்கள் குரு சாது சாஸ்திரத்தின் அடிப்படையில் பேசுகின்றோம். அதுதான் புரிந்துகொள்வதற்கான வழி. உங்களின் சிறிய மூளையையும் குறைபாடுள்ள புலன்களையும் கொண்டு உருவாக்க முடியாது. மனிதன் எப்போதும் குறைபாடுள்ளவன். உதாரணமாக, ஒரு குழந்தை சூரியனைப் பார்க்கிறது. ஒரு விஞ்ஞானி சூரியனைப் பார்க்கிறார். இயற்கையாகவே, குழந்தைகளுக்கு சூரியனைப் பற்றிய அறிவு குறைபாடு உடையது. அதே குழந்தை, ஒரு விஞ்ஞானியிடம் பாடம் பெற்றால், அக்குழந்தை சூரியன் எத்தனை உயர்ந்தது என புரிந்துகொள்ள முடியும். அதனால் புலன்கள் முலம் நேரடியாக உணர்ந்தறியப்படும் ஞானமானது குறையுள்ளதாகவே இருக்கும், வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒருவர் அதிகாரியை அனுகவேண்டும். அதேபோல கடவுளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பகவத்கீதையிடம் புகலடைய வேண்டும். வேறு கதியில்லை. உங்களால் கடவுள் இப்படி இருப்பார், இல்லை அப்படி இருக்கக் கூடும் என்று யூகம் செய்ய முடியாது. கடவுள் இல்லை, கடவுள் இறந்துவிட்டார், கடவுள் இறக்கவில்லை. இது எல்லாமே யூகங்களே. இங்கு கிருஷ்ணர் சொல்கிறார், மய்யாஸக்த-மனா: பார்த2 யோக3ம்' யுஞ்ஜன் மத்3-ஆஷ்2ரய: அஸம்'ஷ2யம்' ஸமக்3ரம்' மாம்' யதா2 ஜ்ஞாஸ்யஸி தச் ச்2ரு'ணு (பகவத் கீதை 7.1) புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் நேரடியாக பேசுகிறார் என்பதை அர்ஜுனன் நம்பியது போல நீங்கள் நம்பினால், பின்பு கடவுள் என்றால் என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இல்லை என்றால் சாத்தியமில்லை. அஸம்ஷ2யம். அதற்கான வழிமுறையானது, முதல் வழிமுறையானது, மய்யாஸக்த-மனா: நீங்கள் தொடர்ந்து உங்கள் மனதை கிருஷ்ணரின் மீது ஈடுபடுத்த வேண்டும். அதுதான் யோக முறை, அதனைத்தான் நாங்கள் கிருஷ்ண உணர்வு என்று முன்வைக்கிறோம். கிருஷ்ண உணர்வு ... நீங்கள் தொடர்ந்து உங்களை மின் சக்தி நிலையத்துடன் தொடர்பு வைத்திருந்தால், மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல், நீங்கள் தொடர்ந்து உங்கள் மனதை கிருஷ்ணரிடம் ஈடுபடுத்தினால், அது மிகவும் கடினம் அல்ல. ஏனெனில், கிருஷ்ணர் அனைவரையும் வசீகரிக்க கூடியவர். கிருஷ்ணர் அழகாக இருக்கிறார். கிருஷ்ணருக்கு பல நடவடிக்கைகள் உள்ளன. முழு வேத இலக்கியங்களும் கிருஷ்ணரின் நடவடிக்கைகள் நிறைந்தவை. இந்த பகவத் கீதை கிருஷ்ணரின் நடவடிக்கைகளால் நிறைந்துள்ளது. கடவுள் பெரியவர் என்பதை மட்டும் புரிந்துகொள்வது, அது நடுநிலையான புரிதல். ஆனால் அவர் எவ்வளவு பெரியவர் என்பதை நீங்கள் மேலும் மேலும் உயர்த்த வேண்டும். அவர் எவ்வளவு பெரியவர், நம்மால் புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நம் புலன்கள் எப்போதும் பூரணமானவை அல்ல. ஆனால் முடிந்தவரை கடவுளின் செயல்பாடுகளைப் பற்றி நீங்கள் கேட்கலாம், கடவுளின் நிலையைப் பற்றி கேட்கலாம், நீங்கள் அதைப் பற்றிச் சிந்திக்கலாம், உங்களால் மதிப்பிட முடியும், உங்கள் வாதத்தை முன் வைக்கலாம். பிறகு கடவுள் என்றால் என்ன என்பதை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்வீர்கள். முதல் ஆரம்பம், மய்யாஸக்த-மனா: கடைசி அத்தியாயத்தில் கிருஷ்ணர் விளக்கி உள்ளார், யார் ஒருவர், கிருஷ்ணரின் சிந்தனையில் தொடர்ந்து நிலைத்திருக்கிறாரோ, அவர் முதல் தரமான யோகி, முதல் தரமான யோகி. உங்கள் நாட்டில் யோகா முறை மிகவும் பிரபலமானது, ஆனால் முதல்தரமான யோகி யார் என்று உங்களுக்குத் தெரியாது. முதல் தரமான யோகி (என்பது) பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது: யோகி3னாம் அபி ஸர்வேஷாம்' மத்3-க3தேனாந்தராத்மனா (பகவத் கீதை 6.47), பல, பல ஆயிரம் யோகிகளில், யோகி அல்லது பக்த-யோகி எப்போதும் தனக்குள்ளும், தன் இதயத்திற்குள்ளும், கிருஷ்ணரின் வடிவத்தை பார்க்கிறார், அவரே முதல் தரமான யோகி, அவர்தான் முதல் தரம். எனவே நீங்கள் அந்த முதல் தரமான யோக முறையைத் தொடர வேண்டும், அது இங்கே விளக்கப்பட்டுள்ளது, மய்யாஸக்த-மனா: கிருஷ்ணரிடம் பற்று கொள்ளுதல்.