TA/Prabhupada 0490 - தாயின் கருவரையில் காற்றுப்புகா வண்ணம் பல மாதங்கள்

Revision as of 17:08, 17 November 2019 by MaliniKaruna (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 English Pages with Videos Category:Prabhupada 0490 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974

இதற்கு முந்தய ஸ்லோகத்தில், தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா: (BG 2.13) என்று விளக்கப்பட்டுள்ளது. "நாம் ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு கூடு விட்டு கூடு பாய்கிறோம். ஒரு குழந்தையின் உடலில் இருந்து சிறுவன் உடலுக்கும், சிறுவன் உடலில் இருந்து வாலிபன் உடலுக்கும் மாறுவது போலவே நாமும் இந்த உடலை கடந்து வேறொரு உடலை ஏற்கிறோம். இப்போது, இன்பம் துன்பம் என்ற கேள்விக்கு வருவோம். இன்பம் துன்பம் - உடலைப் பொறுத்தவரை. பெரிய செல்வந்தன் சற்றே சௌகர்யமாக இருப்பான். பொதுவாக வரும் துன்பமும் சோகமும் பொது தான். பொதுவானது என்பது என்ன? ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-து:க-தோஷாநுதர்ஷனம் (BG 13.9). நாயாகப் பிறவி எடுத்தாலும், அரசனாகப் பிறவி எடுத்தாலும், துன்பம் என்பது ஒன்றுதான். அதில் வேறுபாடு இல்லை. ஏனெனில் நாய் தன் தாயின் கருவில் காற்றுப்புகா நிலையில் பல மாதங்கள் இருக்க வேண்டி உள்ளது. அது போல மனிதனும், அவன் அரசனோ யாரோ, அவனும் அதே சோதனைக்குத்தான் ஆட்படவேண்டி இருக்கிறது. வேறு வழியில்லை. அரச குடும்பத்தில் பிறந்துவிட்டான் என்பதால் மட்டுமே ஒருவன் தன் தாயின் கருவறை வாசம் துன்பம் குறைந்ததாக இருந்துவிடாது, அவனே ஒரு நாயாகித் தன் தாயின் கருவறையில் பிறக்கிறான் என்றால் அவன் உயர்ந்தவன் என்பதில்லை. அதுவும் ஒன்றே தான். அதுபோல் தான் இறக்கும் தருவாயில்... இறக்கும் தருவாயில் பெரும் துயரம் உள்ளது. அத்தனை வலுவான அந்தத் துயரமானது ஒருவனை தன் உடலை விட்டே செல்ல வைத்துவிடுகிறது. துயரம் மிக அதிகமாகும் போது ஒருவர் எப்படி தற்கொலை செய்து கொள்வாரோ அது போல. அவனால் தாங்க முடியாமல், "இந்த உடலை முடித்துவிடு" என்று எண்ணுவான்.

யாருக்கும் உடலைத் துறக்கும் விருப்பம் இல்லை, ஆனால் துன்பம் மிகக் கடுமையாகும் போது உடலை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதுவே மரணம். ம்ருத்யு: ஸர்வ-ஹரஷ் ச அஹம் (BG 10.34)என்று பகவத் கீதையில் சொல்லப்படுகிறது. "நானே மரணம்," என்கிறார் கிருஷ்ணர். மரணம் என்பதன் அர்த்தம் என்ன? மரணம் என்றால், "நான் அவனிடமிருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்கிறேன். முடிந்தது. அவன் உடலை, அவன் சொந்தங்களை, அவன் நாட்டை, அவன் சமூகத்தை, அவன் வங்கிக் கனக்கில் உள்ள பணத்தை, அனைத்தையும் எடுத்துக் கொள்கிறேன்." ஸர்வ-ஹர:. ஸர்வ என்றால் அனைத்தும் என்று பொருள். வங்கிக் கணக்கில் பெரும் பணம், பெரும் வேடு, பெரும் குடும்பம், பெரிய வாகனம் அனைத்தையும் சேர்த்து வைக்க ஒவ்வொருவரும் ப்ரயத்தனம் செய்கின்றனர்... ஆனால் மரணம் வந்து அனைத்தையும் முடித்துவிடுகிறது. எனவே, அதுவே பெரும் துயரம். சிலசமயங்களில் மக்கள் அழுவதுண்டு. இறக்கும் தருவாயில், சுயநினைவில்லாத நேரத்தில் கூட அவர் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைக் காணலாம். "நான் இத்தனையும் செய்தேனே, சௌகர்யமாக வாழவேண்டுமென்று, இப்போது அனைத்தையும் இழக்கின்றேனே." என்று எண்ணுகிறான். பெரும் துயரம். அலஹாபாத்தில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பெரும் செல்வந்தர். அவருக்கு 44 வயதே ஆனது. எனவே மருத்துவரிடம் கெஞ்சி அழுதார், " மருத்துவரே, எனக்கு நான்கு ஆண்டுகளாவது தருவீர்களா, வாழ்வதற்கு? எனக்கு ஒரு திட்டம் இருந்தது. அதை நான் முடிக்கவேண்டும்." அந்த மருத்துவரால் என்ன செய்ய முடியும்? "ஐயா, அது சாத்தியம் இல்லை. நீங்கள் போய்த் தான் ஆகவேண்டும்." என்பார். ஆனால் இந்த முட்டாள் மக்களுக்கு இது தெரியாது. அதனை நாம் சகித்துக் கொள்ளவேண்டும். நான் சகித்துக் கொள்ளவேண்டும். "இந்த மனித உடலைப் பெற்றுவிட்டபடியால் தாயின் கருவறை வாசத்தைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்." என்று இங்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே வெளியே வாருங்கள். என்னால் பேச முடியாது. நான் ஒரு சிறு குழந்தை என்று வைதுக்கொள்ளுங்கள், என்னை ஒரு பூச்சி கடிக்கிறது. "தாயே, என் முதுகை எதுவோ கடிக்கிறது" என்று என்னால் சொல்லமுடியாது, ஏனெனில் என்னால் அப்போது பேச முடியாது. நான் அழுகிறேன், ஆனால் அன்னை நினைக்கிறாள், "குழந்தைக்குப் பசிக்கிறது, பால் கொடுக்கலாம்" என்று. (சிரிப்பு) இது எந்த அளவுக்கு என்று பாருங்கள்... எனக்கு வேண்டியது ஒன்று, ஆனால் தரப்படுவதோ வேறொன்ரு. இதுவே உண்மை. குழந்தை ஏன் அழுகிறது? அதற்கு ஏதோ அசௌகரியம். இப்படியாக நான் வளர்கிறேன். எனக்கு பள்ளிக்கூடம் செல்ல விருப்பம் இல்லை, ஆனால் கட்டாயப்படுத்தப்படுகிறேன். ஆம். நான் அப்படித் தான் இருந்தேன். (சிரிப்பு) நான் பள்ளிகூடம் செல்ல விரும்பியதே இல்லை. என் தந்தை மிகவும் இரக்கம் கொண்டவர். "சரி, நீ ஏன் பள்ளிக்குச் செல்வதில்லை?" என்பார். நான், "நாளை செல்கிறேன்." என்பேன். "சரி" என்பார். ஆனால் என் தாயார் மிகவும் கவனமாக இருப்பார். என் தாயார் அவ்வாறு கொஞ்சம் கண்டிப்பாக இல்லையென்றால் நான் கல்வியே கற்றிருக்கமாட்டேன். என் தந்தை மிகவும் கனிவானவர். எனவே தாயார் தான் என்னை கட்டாயப்படுத்துவார். என்னை பள்ளிக்கு ஒருவர் அழைத்துச் செல்வார். உண்மையில், குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்லப் பிடிப்பதில்லை. விளையாடத்தான் பிடிக்கும். குழந்தைகளின் விருப்பதிற்கு மாறாக அவர் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வார். பள்ளிக்குச் சென்றால் மட்டும் போதாது, அதில் பரீட்சை வேறு இருக்கும்.