TA/Prabhupada 0512 - ஆகையால் ஜட இயற்கையிடம் சரணடைந்தவர்கள், வேதனைப்பட வேண்டும்

Revision as of 02:54, 24 April 2020 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0512 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.25 -- London, August 28, 1973

யஸ்யாத்ம-புத்தி : குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீ: கலத்ராதிஷு பௌம இஜ்ய-தீ யத்-தீர்த்த-புத்தி: ஸலிலே ந கர்ஹிசிஜ் ஜனேஷ்வ அபிக்க்னேஷு கோ-கரஹ. கோ-கரஹ என்றால் பசுக்களும் கழுதைகளும். ஆகையால் இந்த நாகரிகம், நவீன நாகரிகம், ஆன்மாவைப் பற்றி ஒரு தகவலும் பெற்றிருக்கவில்லை, இது வெறுமனே ஒரு மிருகக் ௯ட்டம் மட்டுமே, அவ்வளவு தான். ஆகையினால் அவர்களுடைய நடவடிக்கையின் விளைவுகளின் முடிவுகளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை, அவர்கள் தெய்வ பக்தி, பக்தி மேலும் கொடூரமான செயல்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவர்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறார்கள்... அது அசுர நாகரிகம். ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விதுர் ஆஸுரா-ஜனா: (ப. கீ. 16.7). ஆஸுரா-ஜனா என்றால் இந்த அயோக்கியர்கள் அல்லது அசுரர், நாத்திகர்கள், முட்டால்கள், போக்கிரிகள், அவர்களுக்கு ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி பற்றி தெரியாது. ப்ரவ்ருத்தி என்றால் எந்த தலைப்பின் சமாச்சாரத்தில் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும், அதுதான் ப்ரவ்ருத்தி என்று அழைக்கப்படுகிறது. மேலும் நிவ்ருத்தி என்றால் எந்த தலைப்பின் சமாச்சாரத்தில் நாம் ஆர்வம் கொள்ள ௯டாது அல்லது அதை நாம் விட்டுவிட வேண்டும். ஆஸுரா-ஜனா, அவர்களுக்கு தெரியாது. எவ்வாறு என்றால் நமக்கு ப்ரவ்ருத்தி விருப்பம் இருப்பது போல், லோகே வ்யவாய ஆமிஸ மத-சேவா நித்யஸ்ய ஐந்து:. அணைத்து ஜீவாத்மாக்களுக்கும் பௌதிக ரீதியாக ...... அங்கே இரண்டு இயற்கை உள்ளது, ஆன்மிகம் மேலும் பௌதிகம். பௌதிக ரீதியாக, பாலியல் கவர்ச்சியின் ஆசை மேலும் மாமிசம் உண்பது - ஆமிஸ, ஆமிஸ என்றால் மாமிசம் உண்பது, ஊன் மேலும் மீன், அது போல். இதை ஆமிஸ என்றழைக்கிறோம். அசைவ உணவு உண்பவர் என்றால் நிராமிஸ. ஆகையால் ஆமிஸ, மதவும் மேலும் வ்யவாய. வ்யவாய என்றால் பாலியல் உறவு. லோகே வ்யவாய ஆமிஸ மத-சேவா. பாலியல் உறவில் ஈடுபடுதல் மேலும் மாமிசம், சதை, முட்டை உண்பது, மேலும் மது அருந்துவது. மத. மத என்றால் மதுபானம். நித்யஸ்ய ஜந்து. ஜந்து. பௌதிக உலகில் இருக்கும் ஒருவர் ஜந்து என்று அழைக்கப்படுகிறார். ஜந்து என்றால் மிருகம். அவர் உயிர்வாழியாக இருப்பினும், அவர் ஜீவ ஆத்மா என்று அழைகப்படுவதில்லை. அவர் ஜந்து என்றழைக்கப்படுகிறார். ஜந்துர் டேஹோபபட்டயே. ஜந்து. இந்த பௌதிக உடல் ஜந்துவாக வளர்கிறது, மிருகம். ஆன்மீக அறிவு இல்லாத எவரும், அவர் ஜந்து அல்லது மிருகம் என்றழைக்கப்படுகிறார். இதுதான் சாஸ்த்ரிக் ஆணை. ஜந்துர் டேஹோபபட்டயே. யார் இந்த ஜட உடலை பெறுகிறார்கள்? ஜந்து, மிருகம். ஆகையால், நம்மால் முடிந்தவரை, தொடர்ந்து அல்லது இந்த ஜட உடலை மாற்ற வேண்டும், நாம் ஜந்துவாக, மிருகமாக இருப்போம். க்லேசட ஆச டெஹ:. ஒரு ஜந்து, மிருகம், பொறுத்துக் கொள்ளும், அல்லது அது பொறுத்துக் கொள்ள வற்புறுத்தப்படுகிறது. எவ்வாறு என்றால் ஒரு மாட்டை வண்டியில் கட்டி மேலும் சவுக்கு அடி கொடுப்பது போல். அது பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டு போக முடியாது. அதேபோல், அவைகளை மிருகவதை மையங்களுக்கு கொல்வதற்காக கொண்டுச் செல்லும் பொது, அது அதை சகித்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. இதுதான் ஜந்து என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் ஜட இயற்கையிடம் சரணடைந்தவர்கள், அவர்கள் வேதனைப்பட வேண்டும். அவர்கள் வேதனைப்பட வேண்டும். வேறு வழியில்லை. நீங்கள் இந்த உடலை ஏற்றுக் கொண்டீர்கள். நீங்கள் வேதனைப்பட வேண்டும். க்லேசட ஆச டெஹ:. இந்த ஜட உடல் என்றால் அவதிப்படுத்தல். ஆனால் அவர்களுக்கு இது தெரியாது. அவர்கள் பல ஏற்பாடுகள் செய்கிறார்கள் மேலும் எவ்வாறு ஆனந்தமாக இருப்பது என்று திட்டங்கள், எந்தவிதமான சோகமான நிலைமை இல்லாமல், எவ்வாறு அமைதியாக இருப்பது, ஆனால் அந்த போக்கிரிகள், அவர்களுக்கு தெரியவில்லை இந்த ஜட உடல் இருக்கும்வரை, அரசனுடைய உடல் அல்லது எறும்பின் உடல் - நீங்கள் அவதிப்பட வேண்டும். அவர்களுக்கு தெரியாது. ஆகையினால் கிருஷ்ணர் இங்கு கூறுகிறார் நீங்கள் உங்கள் ஆன்மாவை கவனித்துக் கொள்ளுங்கள். தஸ்மாத் ஏவம். தஸ்மாத் ஏவம் விதித்வா. ஆத்மாவை புரிந்துக் கொள்ள முயற்ச்சிப்பது மிகவும் முக்கியமானது. இந்த உடம்பிற்காக நீங்கள் புலம்ப வேண்டாம். இது ஏற்கனவே மேலே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அவ்வளவு துன்பங்களும், அவ்வளவு வசதியும், நீங்கள் பெறுவீர்கள். இந்த உடல், ஜட உடலாக இருப்பினும் ...... ஏனென்றால் இந்த ஜட உடலும் மூன்று தன்மைகளுக்கு ஏற்ப படைக்கப்பட்டுள்ளது. காரணம் குண-ஸங்கோ 'ஸ்ய ஸத்-அஸத்-ஜன்ம-யோனிஸு (ப.கீ. 13.22).