TA/Prabhupada 0524 - அர்ஜுனர் கிருஷ்ணரின் நித்திய தோழர், அவர் எந்த எண்ணமயக்கத்திலும் இருக்க முடியாது

Revision as of 23:37, 1 October 2020 by Elad (talk | contribs) (Text replacement - "(<!-- (BEGIN|END) NAVIGATION (.*?) -->\s*){2,}" to "<!-- $2 NAVIGATION $3 -->")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

பிரபுபாதர்: ஆம்.


ஜய-கோபாலன்: பகவத் கீதை உண்மையுருவில் இப்புத்தகத்தின் நான்காவது அத்தியாயத்தில், சூரிய பகவானுக்கு பகவத் கீதை உபதேசிக்கப் படும் பொழுது அர்ஜுனனும் அங்கே இருந்தான் எனக் கூறப்பட்டுள்ளது. அவரது பாத்திரம் அங்கே என்னவாக இருந்தது?


பிரபுபாதர்: அவரும் அங்கே இருந்தார் ஆனால் அவர் அதை மறந்துவிட்டார்.


ஜய-கோபாலன்: குருக்ஷேத்திரத்தின் போர் களத்தில் சொல்லப்படவில்லை என்றால் அவர் எந்த நிலையில் இருந்தார்?


பிரபுபாதர்: கடவுளின் மீஉயர்ந்த சித்தத்தினால் அர்ஜுனன் அந்த நிலைக்கு ஆளாக்கப் பட்டான். உதாரணமாக திரையரங்கத்தில் தந்தையும் மகனும் எதோ ஒரு பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தந்தை அரசனின் பாத்திரமும் மற்றும் மகன் வேறொரு அரசனின் பாத்திரமும் கொள்கிறார்கள். இருவரும் பகையுணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் வெறும் அப்படி நடிக்கிறார்கள். அதுபோலவே, அர்ஜுனர் கிருஷ்ணரின் நித்திய தோழர். அவர் என்த எண்ணமயக்கத்திலும் இருக்க முடியாது. கிருஷ்ணரே நித்திய தோழனாக இருந்தால் அவர் எப்படி மாயையில் இருக்க முடியும்? ஆனால் அவர் மாயையில் இருக்குமாறு சித்தம், ஆகையால் அவர் கட்டுண்ட ஆன்மாவின் பாத்திரத்தை நிகழ்த்துகிறார். கிருஷ்ணரும் அவருக்கு அனைத்தையும் விளக்கினார். அவர் ஒரு சாதாரண நபரின் பாத்திரத்தை நிகழ்த்துவதால் அவர் கேள்விகளும் ஒரு சாதாரண மனிதரைப் போல் இருந்தன. இல்லாவிட்டால்... ஏனென்றால் கீதையின் கற்பித்தல் தொலைந்து போனது. அது விளக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மறுபடியும் கீதையின் யோக முறையை கிருஷ்ணர் அளிக்க தீர்மானித்தார். ஆனால் கேள்வி கேட்பதற்கு யாராவது வேண்டுமே. நீ கேட்கிறாய் நான் பதில் அளிக்கிறேன்; அது போல் தான். அதே மாதிரி, அர்ஜுனர் மாயையில் இல்லாமல் இருந்தாலும், அவர் தன்னை கட்டுண்ட உயிர்வாழீயின் பிரதிநிதியாக வைத்து, பல விஷயங்களை பற்றி கேட்டார். பகவானும் அதற்கு பதில்களை அளித்தார்.