TA/Prabhupada 0525 - மாயை மிகவும் சக்திவாய்ந்தது, சிறிதளவு தன்னம்பிக்கை இருந்தால் மாயை தாக்குகிறது‌‌

Revision as of 23:37, 1 October 2020 by Elad (talk | contribs) (Text replacement - "(<!-- (BEGIN|END) NAVIGATION (.*?) -->\s*){2,}" to "<!-- $2 NAVIGATION $3 -->")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 7.1 -- Los Angeles, December 2, 1968

தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, உங்கள் சேவை செய்யும் பொழுது சில நேரங்களில் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் எவ்வளவு மோசமாக, குறைபாடுகளுடன் சேவையை செய்திருக்கிறேன் என்பதை உணரும்போது எனக்கு ஒரு கொடுமையான வருத்தம் ஏற்படுகிறது. என்த உணர்வு சரியானது ?


பிரபுபாதர்: (சிரித்து) உனக்கு கொடுமையாக இருக்கிறதா?


தமால கிருஷ்ணன்: ஆம்.


பிரபுபாதர்: ஏன்? ஏன் வருத்தப்படுகிறாய்?


தமால கிருஷ்ணன்: நான் செய்த எல்லா தவறுகளை நினைத்து பார்க்கும்பொழுது.


பிரபுபாதர்: சிலசமயம்... அது நல்லது. தவறுகளை ஏற்றுக்கொள்வது... தவறே இல்லாத இருந்தாலுமே. ஒரு மகனுக்கு அவன் தந்தை மிக பிரியமானவர் அல்லது தந்தைக்கு தன் மகன் மிக பிரியமானவன், அதுபோல் தான். மகனுக்கு சிறிய நோய் வந்தாலே, தந்தை நினைப்பார், "ஓ, என் பையன் இறந்துவிட்டால் நான் அவனைவிட்டுப் பிரிந்துவிடுவேனே." இது தீவிரமான அன்பின் அடையாளம். அன்த மகன் இந்த க்ஷணமே சாகவேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் அப்படி நினைக்கிறார். பிரிவின் உணர்ச்சி. புரிகிறதா? ஆக அது நல்ல ஒரு அறிகுறி. நாம் மிக சிறப்பாக செயல்படுகிறோம் என்று நினைக்கக்கூடாது. நாம் எப்போதும் "நான் தகுதியற்றவன்." என்று எண்ண வேண்டும். அது பிழை அல்ல. "நான் பிழையற்றவன்." என்று நாம் எப்போதும் நினைக்கக்கூடாது. ஏனென்றால் மாயை மிகவும் சக்திவாய்ந்தது. உனக்கு சிறிதளவு தன்னம்பிக்கை எற்பட்ட உடனேயே மாயை தாக்குகிறது‌‌. புரிகிறதா? நோயுள்ள நிலையில்... எப்படி ஜாக்கிரதையாக இருந்தால் அந்த நோய் மீண்டும் தோன்றும் வாய்ப்பு சுருங்கி போகிறதோ அப்படி தான். ஆக இது தவறல்ல. நாம் எப்போதும் அப்படி நினைக்கவேண்டும் "ஒருவேளை நான் அவ்வளவு சிறப்பாக செய்யவில்லையோ." ஆனால் நம்மால் முடிந்தவரை நம் வேலையை சிறப்பாக நிகழ்த்த வேண்டும். நாம் செய்தது மிக சிறப்பானது என்று எப்போதும் நினைக்கக்கூடாது. அது நல்லது.