TA/Prabhupada 0548 - ஹரிக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் நிலைக்கு நீங்கள் வரவேண்டும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0548 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0547 - I Thought "I shall first of all become very rich man; then I shall preach"|0547|Prabhupada 0549 - The Real Purpose of Yoga is to Control the Senses|0549}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0547 - அனைவர்க்கும் முதலில் செல்வந்தனாவேன் எனும் எண்ணத்தையடுத்து நான் பிரசங்கிப்பேன்|0547|TA/Prabhupada 0549 - இந்திரியங்களை அடக்குவதே யோகத்தின் உண்மை நோக்கமாகும்|0549}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:25, 22 August 2021



Lecture -- New York, April 17, 1969

அதனால், ஆராதிதோ யதி ஹரிஸ் தபஸா ததஹ் கிம் ( நாரத பஞ்சராத்ர ). நாம் கோவிந்தம் ஆதி-புருஷத்தை வணங்குகிறோம், ஹரி என்று அழைக்கப்படும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளை. வேத இலக்கியம் கூறுகிறது - ஆராதிதோ யதி ஹரிஹி. முழுமுதற் கடவுளான ஹரியை வணங்கும் நிலைக்கு நீங்கள் வந்திருந்தால், தபஸா ததஹ் கிம், தவம், யோகம் யோகாசனம் - இனி தேவையில்லை, இதுவோ, அதுவோ, பல தியாகங்கள், சடங்கு ... அனைத்தும் முடிந்தது. ஹரிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யும் நிலைக்கு நீ வந்திருந்தால், இந்த விஷயங்களுக்கு நீங்கள் சிரமப்பட தேவையில்லை. ஆராதிதோ யதி ஹரிஸ் தபஸா ததஹ் கிம். மற்றும், நாராதிதோ யதி ஹரிஸ் தபஸா ததஹ் கிம். மேலும் நீ எளிமை நடவடிக்கைகள், தவங்கள், தியாகங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், எல்லாம் மேற்கொள்ளலாம், ஆனால் ஹரி என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை: அது பயனற்றது, அனைத்தும் பயனற்றது. நாராதிதோ யதி ஹரிஹ, நாராதிதஹ். ஹரியை வணங்கும் நிலைக்கு நீ வரவில்லை என்றால், இந்த விஷயங்கள் அனைத்தும் பயனற்றவை. ததஹ் கிம். அந்தர்பஹிர் யதி ஹரிஸ் தபஸா ததஹ் கிம். நீ எப்போதும் ஹரியை உன்னுள் பார்த்தால், ஹரியை எப்போதும் வெளியே, உள்ளேயும் வெளியேயும் பார்த்தால் ... தத் வந்திக்கே தத் தூரே தத் ... அந்த ஸ்லோகம் என்ன? இசோபநிஷத் ? ... தூரே தத் அந்திக்கே ஸர்வஸ்ய. ஹரி எல்லா இடங்களிலும் இருக்கிறார், எனவே ஹரியைப் பார்க்கும் ஒருவர், அந்திக்கே, அருகில், மற்றும் ... அல்லது தொலைதூர இடம், உள்ளும், வெளியேயும் அவர் ஹரியைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அது எப்படி சாத்தியமாகும்? பிரேமாஞ்சன - சூரித்த- பக்தி - விலோசனென ( Bs 5.38 ). ஒருவர் கடவுளின் அன்பில் சஞ்சரிக்கும் போது, அவர் ஹரியைத் தவிர வேறு எதையும் உலகில் காண்பதில்லை. அதுவே அவரது பார்வை. எனவே, அந்தர்பஹிர் யதி ஹரி, உள்ளேயும் வெளியேயும், நீங்கள் எப்போதும் ஹரி, கிருஷ்ணரையே பார்கிறாயோ, தபஸா ததஹ் கிம், உங்கள் யோக வாழக்கை மற்றும் தவங்களின் பயன் என்ன? நீங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கிறீர்கள். அது தேவை. நாந்த - பஹிர் யதி ஹரிஸ் தபஸா ததஹ் கிம். நீ எப்போதும் ஹரியை உள்ளும் புறமும் பார்க்கவில்லை என்றால், உன் தவ நடவடிக்கைகளின் மதிப்பு தான் என்ன? ஆகையால் காலையில் இந்த மந்திரத்தை உச்சரிக்கிறோம், கோவிந்தம் ஆதி புருஷம் தம அஹம் பஜாமி. நமக்கு வேறு தொழில் இல்லை. நாம் செய்ய வேண்டியது- புருஷோத்தமரான முழுமுதற் கட்வுள் (கிருஷ்ணர்) கோவிந்தரை திருப்திப்படுத்த வேண்டும். அதுவே முழுமை. அவர் முழுமையானவர், அவருடைய வழிபாடு முழுமையானது, அவருடைய பக்தர் முழுமையானவர். எல்லாம் முழுமை அடையும்.

மிக்க நன்றி.