TA/Prabhupada 0619 - ஆன்மிக வாழ்வை எவ்வாறு மேம்படுத்துவது என்பதே கிரகஸ்த ஆஸ்ரமத்தின் நோக்கம்

Revision as of 03:17, 23 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0619 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.24 -- Vrndavana, September 21, 1976

மதிர் ந க்ருஷ்ணே பரத꞉ ஸ்வதோ வா மிதோ₂ (அ)பி₄பத்₃யேத க்₃ருஹ-வ்ரதாநாம் (SB 7.5.30). க்₃ருஹ-வ்ரதாநாம் மதிர் ந க்ருஷ்ணே. சபதம் எடுத்தவர்கள், "நான் இந்த குடும்ப வாழ்க்கையில் நிலைத்திருந்து, என் நிலையை மேம்படுத்துவேன் என்று, க்ருஹ- வ்ருதாநாம்… க்ருஹ- வ்ருதா. க்₃ருஹஸ்த₂, க்ருஹ- வ்ருத ஆகியவை வேறுபட்டவை. க்₃ருஹஸ்த₂ என்றால் க்₃ருஹஸ்த₂-ஆஷ்₂ரம என்று பொருள். ஒருவர்- கணவன், மனைவி அல்லது குழந்தைகளுடன் வாழ்கிறார், ஆனால் இதன் நோக்கம் ஆன்மீக வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதுதான். அது க்ருஹஸ்த-ஆஷ்ரம. மேலும் அத்தகைய நோக்கம் இல்லாத ஒருவர், வெறுமனே புலன்களை அனுபவிக்கவே விரும்புகிறார், அந்த நோக்கத்திற்காக அவர் வீட்டை அலங்கரிக்கிறார், மனைவி, குழந்தைகளை அலங்கரிக்கிறார் - இது க்ருஹ-வ்ருத அல்லது க்ருஹமேதி என்று அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் வெவ்வேறு அர்த்தங்களுக்கு வெவ்வேறு சொற்கள் உள்ளன. எனவே க்ருஹ-வ்ருதர்களாக இருப்பவர்கள் கிருஷ்ண உணர்வுடன் இருக்க முடியாது. மதிர் ந க்ருஷ்ணே பரத꞉ ஸ்வதோ வா. பரத꞉ என்றால் குருவின் அறிவுரை அல்லது அதிகாரியின் அறிவுரை, பரத:. அத்துடன் ஸ்வதோ வா. ஸ்வதோ என்பது தானாகவே என்று பொருள். அறிவுரையாலும் கூட தானாக நிகழ்வது சாத்தியமில்லை. ஏனென்றால், "நான் இந்த வழியில் நிலைத்திருப்பேன்" என்பதே அவரது சபதம். க்₃ருஹ-வ்ரதாநாம். மதிர் ந க்ருஷ்ணே பரத꞉ ஸ்வதோ வா மிதோ₂ (அ)பி₄பத்₃யேத. மித₂꞉, மாநாட்டின் மூலமோ, சந்திப்பின் மூலமோ, தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமோ அல்ல, "நாம் கிருஷ்ண உணர்வினராக மாற விரும்பினால்,"அது சாத்தியமில்லை. இது முழுவதும் தனிப்பட்டது. நான் கிருஷ்ணரிடம் சுயமாக சரணடைய வேண்டும். நீங்கள் விமானத்தில் வானத்திற்குச் செல்வது போல, ​​அது முழுவதும் தனிப்பட்டது. ஒரு விமானம் ஆபத்தில் இருந்தால், மற்றைய விமானம் அவரை காப்பாற்ற முடியாது. அது சாத்தியமில்லை. இதேபோல், இது முழுவதும் தனிப்பட்டது. இது முழுவதும் பரத: ஸ்வதோ வா. ஒருவர் அதை தனிப்பட்ட முறையில் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், "கிருஷ்ணர் விரும்புகிறார், எனவே நான் சரணடைவேன். கிருஷ்ணர் கூறினார் "ஸர்வ-த₄ர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷ₂ரணம் வ்ரஜ" (BG 18.66), எனவே நான் அதை செய்வேன்." "என் தந்தை எப்போது செய்வாரோ, அப்போது நான் செய்வேன்" என்பது அல்ல, அல்லது "என் கணவர் செய்வார், பிறகு நான் செய்வேன்" அல்லது "என் மனைவி செய்வார்." அப்படி இல்லை. இது அனைத்தும் தனிப்பட்டது. அத்துடன் எந்த கட்டுப்பாடும் இல்லை. அஹைதுகி அப்ரதிஹதா. நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைய விரும்பினால், உங்களை யாரும் தடுக்க முடியாது. அஹைதுகி அப்ரதிஹதா யயா ஆத்மா ஸுப்ரஸீத₃தி. நீங்கள் அதை தனித்தனியாக செய்யும்போது (SB 1.2.6)... கூட்டாக அது முடிந்தால், அது நல்லது, ஆனால் அது தனித்தனியாக செய்யப்பட வேண்டும்.