TA/Prabhupada 0635 - ஒரு எறும்பு உள்ளிட்ட அனைத்து ஜீவன்களின் உள்ளேயும் ஆத்மா இருக்கிறது

Revision as of 07:42, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.30 -- London, August 31, 1973

பக்தர்: மொழிபெயர்ப்பு: "ஓ பரதனின் சந்ததியே, உடலில் வசிப்பவர் நித்தியமானவர் மேலும் அழிக்கப்பட முடியாதவர். ஆகையினால் நீங்கள் எந்த உயிரினத்திற்கும் வருந்த வேண்டியதில்லை."

பிரபுபாதர்: தேஹீ நித்யம் அவதியோ அயம் தேஹி ஸர்வஸ்ய பாரத. தேஹி. தேஹி என்றால் உடல், உடலினுள். இந்த தலைப்பின் ஆரம்பம், தேஹினோ 'ஸ்மின் யதா தேஹே கெளமாரம் யௌவனம் ஜரா (ப.கீ. 2.13). தேஹ, தேஹி. தேஹி என்றால் உடலுக்கு சொந்தமானவர். எவ்வாறு என்றால் குணீ போல். ஆஸ்ததே ப்ரதா(?). அந்த இலக்கணம். குண, தேஹேவில், ப்ரதாவில் (?). தேஹின் ஸப்த. ஆக தேஹின் ஸப்தவின் முதலாம் வேற்றுமை தேஹி ஆகும். தேஹி நித்யம், நித்தியமாகும். பல விதத்தில், கிருஷ்ணர் விளக்கியுள்ளார். நித்யம், நித்தியமாகும். அழியாத் தன்மை, மாற்ற இயலாது. அது பிறப்பதில்லை, இறப்பதில்லை, அது எப்போதும், தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்கும். ந ஹன்யதே ஹன்யமானே ஷாரீரே (ப.கீ. 2.20). இந்த விதத்திலும், மறுபடியும் அவர் கூறுகிறார் நித்யம், நித்தியமாகும். அவதியா, ஒருவரும் கொல்ல முடியாது. உடலில், அவர் இருக்கிறார். ஆனால் தேஹி ஸர்வஸ்ய பாரத. இது மிகவும் முக்கியமானது. வெறுமனே மனிதரின் உடலில் ஆத்மா இருக்கிறது மற்ற உடல்களில் இல்லை என்பதல்ல. அது போக்கிரித்தனம். ஸர்வஸ்ய. அனைத்து உடலிலும் இருக்கிறது. எறும்பினுள் கூட, யானையிலும், பிரமாண்டமான ஆலமரத்தினுள்ளும் அல்லது நுண்ணுயிரினுள்ளும் உள்ளது. ஸர்வஸ்ய. ஆன்மா அங்கிருக்கிறது. ஆனால் சில மோசமானவர்கள், விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்று கூறுகிறார்கள். இது தவறாகும். விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்று எவ்வாறு கூறலாம்? இங்கு கிருஷ்ணரின் அதிகாரமுள்ள அறிக்கை: ஸர்வஸ்ய. மேலும் மற்றொரு இடத்தில், கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-யோனிஷு கெளந்தேய மூர்தய: ஸம்பவந்தி யா: (ப.கீ. 14.4). வாழ்க்கையின் பல இனத்திலும், பல மாதிரியான உயிரினங்கள் உள்ளன, 8,400,௦௦௦ வேறுபட்ட இனங்கள், தாஸாம் மஹத் யோனிர் ப்ரஹம. மஹத் யோனிர். அவர்கள் உடலின் மூலம் இந்த பௌதீக இயற்கையாலானது. அஹம் பீஜ-ப்ரத: பிதா: "நானே வித்திடும் தந்தை." தாயும் தந்தையும் இன்றி தளிர் இல்லை, ஆக கிருஷ்ணர் தந்தையாவார். மேலும் தாய் பௌதீக இயற்கையாகும், அல்லது ஆன்மிக இயற்கையாகும்.

அங்கு இரண்டு இயற்கைகள் உள்ளன. அது ஏழாம் பதத்தில் விளக்கப்பட்டுள்ளது. பௌதீக இயற்கை மேலும் ஆன்மிக இயற்கையாகும். அல்லது மேலான இயற்கை, தாழ்வான இயற்கை. எவ்வாறென்றால் நம் உடலிலும் தாழ்வான பாகம் மேலும் உயர்ந்த மேலான பாகம் உள்ளது. உடல் ஒன்றே. இருப்பினும் அங்கு உடலின் வேறுபட்ட பாகங்கள் உள்ளன. அவற்றில் சில தாழ்வாக கருதப்படுகிறது மேலும் சில மேலானதாக கருதப்படுகிறது. இரண்டு கைகளும் கூட. வேத நாகரிகத்தின் கருத்துப்படி, வலது கரம் மேலான கை, மேலும் இடது கரம் தாழ்வான கை. நீங்கள் யாருக்காவது ஏதாகிலும் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் வலது கையால் கொடுக்க வேண்டும். நீங்கள் அதை இடது கையால் கொடுத்தால், அது அவமதிப்பதாகும். இரண்டு கைகள் தேவைப்படுகிறது. ஏன் இந்த கை மேலானது, இந்த கை தாழ்வானது? ஆகையால் நாம் வேத தடையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு இயற்கையும், பௌதீக இயற்கையும், ஆன்மிக இயற்கையும், ஒரே மூலத்திலிருந்து வந்தாலும், முழுமுதற் கடவுள் ... ஜென்மாதி அஸ்ய யத: (ஸ்ரீ. பா. 1.1.1). அனைத்தும் அவரிடமிருந்து உருபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், உயர்வான இயற்கையும் மேலும் தாழ்வான இயற்கையும் இருக்கிறது. உயர்வுக்கும் தாழ்வுக்கும் இடையே என்ன வேற்றுமை உள்ளது? தாழ்வான இயற்கை அல்லது பௌதீக இயற்கையில், பகவான் உணர்வு ஏறக்குறைய பூஜ்ஜியமாகும். சத்வ குணத்தில் இருப்பவர்களுக்கு, பகவான் உணர்வு சிறிதளவு உள்ளது. மேலும் ரஜோ குணத்தில் இருப்பவர்களுக்கு, குறைந்த அளவில் உள்ளது; மேலும் தமோ குணத்தில் இருப்பவர்களுக்கு, பகவான் உணர்வே இல்லை. பூரணமாக இல்லை.