TA/Prabhupada 0640 - நீங்கள் யார் ஒருவர் தன்னை கடவுள் என்று சொல்கிறானோ, அவன் முகத்திலேயே எட்டி உதையுங்கள்

Revision as of 04:28, 30 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0640 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.30 -- London, August 31, 1973

'எய் ரூபே'. இந்த பிரம்மாண்டத்தில் கோடிக்கணக்கான உயிர்வாழீகள் இருக்கின்றன. மேலும் அவை 84,00,000 உயிரினங்களில் மாறி மாறி பிறக்கிறார்கள் - இவ்வாறு துரதிர்ஷ்டசாலிகள். வெறும் மறுபடியும் மறுபடியும் பிறப்பு இறப்பு, பிறப்பு இறப்பு, வெவ்வேறு.... அவைகளில் ஒருவன் பெறும் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க படுகிறது, குரு-கிருஷ்ண-ப்ரஸாதே பாய பக்தி-லதா-பீஜ. குரு‌ மற்றும் கிருஷ்ணரின் கருணையால் அவன், பக்தி தொண்டு என்கிற கொடியின் விதையை பெறுவான். மற்றும் அவன் மடையனாக இருந்தால், புத்தி இருந்தால் ஒழிய அவன் அந்த விதையை எப்படிப் பெறமுடியும்? அது தான் தீக்ஷை. பிறகு அவன் அதற்கு நீரூட்டினால்... ஒரு நல்ல விதை கிடைத்தால், அதை விதைத்து சிறிதளவு நீர் ஊற்றினால்... பிறகு அது வளரும். அதுபோல் தான். அதுபோலவே, ஒருவர் பெரும் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ண உணர்விற்கு வந்த பிறகு, பக்தி தொண்டின் விதைக்கு நீரூட்ட வேண்டும். மேலும் அந்த நீரானது என்னவாகும்?


ஷ்ரவண-கீர்த்தன-ஜலே கரயே ஸேசன (CC Madhya 19.152)


இது தான் நீரூட்டல். இந்த கிருஷ்ணரைப் பற்றி கேட்பது மற்றும் ஜெபிப்பது. இது தான் நீரூட்டல். உபநியாச வேளையில் வராமல் இருக்காதீர்கள். இந்த செவிப்பாடும் ஜெபமும் தான் பக்தி தொண்டின் விதைக்கு நீரூட்டலாகும். நீங்கள் உபநியாசத்திற்கு வராமல் இருப்பதை வழக்கமாகவே ஆக்கிவிட்டால்... இது எல்லாத்தைவிட முக்கியமான விஷயம்.


ஷ்ரவண-கீர்த்தனம் விஷ்ணோ (SB 7.5.23)


இது எல்லாத்தைவிட முக்கியமான விஷயம். கேட்பது. ஷ்ரவண கீர்த்தனம் என்றால் வேறு எதைப் பற்றியும் கேட்பதோ ஜெபிப்பதோ அல்ல. அல்ல. விஷ்ணு ஷ்ரவணம்-கீர்த்தனம். அந்த அயோக்கியர்கள் "காளீ-கீர்த்தன" என்பதை கற்பனையால் உருவாக்கி இருக்கிறார்கள். சாத்திரத்தில் காளீ-கீர்த்தனை, சிவ-கீர்த்தனை என்று எங்கேயாவது இருக்கிறதா? இல்லை. கீர்த்தனம் என்றால் முழுமுதற்கடவுளான கிருஷ்ணரின் துதி பாடுவது. அது தான் கீர்த்தனம். வேறு எந்த கீர்த்தனமும் கிடையாது. ஆனால் அவர் உற்பத்தி... போட்டி, காளீ-கீர்த்தனம். சாத்திரத்தில் காளீ-கீர்த்தனம் என்பது எங்கேயாவது உண்டா? துர்க்கா-கீர்த்தனம்? இது எல்லாம் அறிவற்றது. வெறும் கிருஷ்ணர். ஷ்ரவணம்-கீர்த்தனம் விஷ்ணோ


ஸ்மரணம் பாத-ஸேவனம் (SB 7.5.23)


கிருஷ்ணரே வழிபடவேண்டும், கிருஷ்ணரைப் பற்றி கேட்கவேண்டும், கிருஷ்ணரையே ஜெபிக்க வேண்டும், கிருஷ்ணரையே நினைக்க வேண்டும். இவ்வாறு, நீங்கள் கிருஷ்ண உணர்வில் முன்னேறலாம். மிக நன்றி. ஹரே கிருஷ்ண.