TA/Prabhupada 0653 – கடவுள் ஒரு நபராக இல்லாமலிருந்தால், அவரது பிள்ளைகள் எப்படி நபர்களாக இருக்க முடியும்

Revision as of 16:06, 23 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0653 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

பக்தர்: "பத்ம புராணத்தில், ஸ்ரீ கிருஷ்ணரின் நாமம், ரூபம், குணங்கள் மற்றும் லீலைகளின் உன்னதத் தன்மையை ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது அவர்களது களங்கமான பௌதிகப் புலன்களை கொண்டு. பகவானின் உன்னதமான தொண்டின் மூலம் ஆன்மீகத்தில் ஊரியவனுக்கே, பகவானின் உன்னதமான நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகள் வெளிப்படுகின்றன.

பிரபுபாதர்: ஆமாம், இது மிக முக்கியம். இப்போது கிருஷ்ணர், கிருஷ்ணரை நாம் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம். கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? ஏனெனில் அது பிரம்ம சம்ஹிதை போன்ற வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ஈஸ்வர பரம கிருஷ்ணா ஸச்சிதானந்த விக்ரஹ (பி. ச. 5.1). கற்பனை... தமோ குணத்திலும் ரஜோ குணத்திலும் இருப்பவர்கள் பகவானின் உருவத்தை கற்பனை செய்கின்றனர். அவர்கள் குழம்பும் பொழுது என்ன சொல்லி விடுகின்றனர், "பகவானுக்கு ரூபம் இல்லை அத்தனையும் அருவம் சூனியம்." அதுவே விரக்தி. உண்மையில் பகவானுக்கு உருவம் உண்டு. ஏன் இருக்காது? வேதாந்தம் சொல்கிறது, ஜன்மாத்யஸ்ய யத: (ஸ்ரீ.பா. 1.1.1): ஒப்புயர்வற்ற பிரம்மஞானம் அந்த உருவமே அதிலிருந்தே அனைத்தும் உருவாகிறது. நமக்கு உருவம் இருக்கின்றது. எனவே நாமும்... நாம் மட்டுமல்ல, பல்வேறு விதமான உயிரினங்களும் உருவம் கொண்டவை. அவை எங்கிருந்து வந்தன? எங்கிருந்து இந்த உருவம் உருவானது? இது பொதுவானதொரு சமயோசித கேள்வி. கடவுள் ஒரு நபர் இல்லை என்றால், அவருடைய மகன்கள் எப்படி நபர்களாக இருக்க முடியும்? உன் தந்தை ஒரு மனிதன் இல்லை என்றால் நீ மட்டும் எப்படி மனிதன் ஆனாய்? இது பொதுவானதொரு சமயோசித கேள்வி. எனது தந்தைக்கு உருவம் இல்லை என்றால் எனக்கு உருவம் எங்கிருந்து கிடைத்தது? ஆனால் மக்கள் கற்பனை செய்து, தாங்கள் விரக்தி அடையும் போது, இந்த உருவம் சிரமம் கொடுப்பதாக இருக்கும்போது, பகவான் உருவமற்றவராக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். உருவத்திற்கு எதிர்மறையான கருத்து இது. ஆனால் பிரம்ம சம்ஹிதை இதை மறுக்கிறது. பகவானுக்கு உருவம் உண்டு, ஆனால் அவர் ஸச்சிதானந்த விக்ரஹ. ஈஸ்வர பரம கிருஷ்ணா ஸச்சிதாநந்த விக்ரஹ ( பி.ச. 5.1) சத் சித் ஆனந்த. சத் என்றால் நித்தியமானது. சக் என்றால் நித்தியமானது, சித் என்றால் ஞானம், ஆனந்தம் என்றால் மகிழ்ச்சி. எனவே கடவுளுக்கு உருவம் இருக்கிறது, ஆனால் அந்த உருவம் ஆனந்த மயமானது, ஞான மயமானது, மற்றும் நித்தியமானது. இப்போது அதனுடன் உன் உடலை ஒப்பிடு. உன் உடல் நித்தியமானதுமல்ல ஆனந்த மயமானதுமல்ல ஞான மயமானதுமல்ல. எனவே கடவுளுக்கு உருவம் இருக்கிறது, அதுவும் மாறுபட்ட உருவம். ஆனால் உருவத்தைப் பற்றி பேசும் பொழுது அது இப்படித்தான் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். அதற்கு எதிர்மறையானதற்கு உருவம் இல்லை. அங்கு ஞானம் இல்லை. அது ஞானம் இல்லை. எனவே பத்ம புராணத்தில் கூறுகிறது, பகவானுடைய ரூபம் நாமம் குணம் அவனைப் பற்றிய அனைத்தும் உன்னுடைய இந்த பௌதிக புலன்களால் புரிந்துகொள்ள முடியாது என்று. அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: (சி.சி. மத்திய லிலா 17.136). உன்னுடைய புலன் கற்பனையைக் கொண்டு புலன்கள் முழுமையற்றதாதாக முழுமையான பரம்பொருளை எப்படி கற்பனை செய்வது? அது சாத்தியமல்ல. அது எப்படி சாத்தியமாகும்? ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. புலன்களை பயிற்றுவித்தால், புலன்களை தூய்மை படுத்தினால், அந்த தூய்மையான புலன் பகவானை காண உதவும்.

உதாரணத்திற்கு உனக்கு ஒரு நோய் வந்து இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், கண்களில் புரை, அதனால் உன்னால் காணவே முடியாது என்பதில்லை. புரையினால் உன்னால் காண முடியாதே தவிர, பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. உன்னால் பார்க்க முடியவில்லை. அதுபோல்தான் இறைவனுடைய ரூபம் எது என்பதை உன்னால் கற்பனை செய்ய முடியாது, ஆனால் உன் குறை நீக்கப்படும், உன்னால் பார்க்க முடியும். அதுவே தேவை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி (பி.ச. 5.38). பகவானின் அன்பு என்னும் மருந்தினால் அலங்கரிக்கப்பட்ட கண்களை உடையவன், தன் மனதாலும் கிருஷ்ணரை காண்கிறான், இருபத்திநான்கு மணி நேரமும் என்கிறது பிரம்ம சமஹிதை. அதுவல்ல... எனவே உன் புலன்களை தூய்மை செய்தல் அவசியம். பின்னர் பகவானின் ரூபம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். பகவானின் நாமம் என்ன, பகவானின் குணம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும், பகவானின் அவயவங்கள் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். பகவானிடம் அனைத்தும் இருக்கிறது. இவை வேத சாஸ்திரங்களில் கூறப்படுகின்றன.

பாதோ ஜவன-க்ருஹீத. அபானி என்பதைப் போல. பகவானுக்கு கை கால்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் நீ கொடுக்கும் எதையும் அவனால் ஏற்க முடியும். பகவானுக்கு கண்கள், காதுகள் இல்லை, ஆனால் அவரால் அனைத்தையும் பார்க்க முடியும் கேட்கவும் அவரால் முடியும். எனவே இதில் மாற்றுக்கருத்து உள்ளது. என்னவென்றால் நாம் ஒன்றை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம், ஒருவருக்கு கண் இப்படியாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். அதுவே நமது பௌதிக கருத்து. பகவானுக்கு கண்ணு இருக்கிறது, அவரால் இருட்டிலும் பார்க்க முடியும். உன்னால் இருட்டில் பார்க்க முடியாது. எனவே அவருக்கு வித்தியாசமான கண்கள். பகவானால் கேட்க முடியும் நாம்... பகவான் அவருடைய ராஜ்யத்தில் இருக்கின்றார் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள, ஆனால் நீ ரகசியமாக ஏதாவது சதித்திட்டம் தீட்டினால் கூட, அவரால் கேட்க முடியும். ஏனெனில் அவர் உன் உள்ளேயே அமர்ந்து இருக்கிறார். எனவே பகவானின் பார்வை பகவானின் கேட்டல் மற்றும் ஸ்பரிசத்தை உன்னால் தவிர்க்க முடியாது.