TA/Prabhupada 0687 – ஒருவன் தன் மனதை வெற்றிடத்தில் குவிக்கச்செய்வது மிகவும் கடினம்

Revision as of 13:42, 24 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0687 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.35-45 -- Los Angeles, February 20, 1969

பக்தர்கள் : எல்லா புகழும் பிரபுபாதருக்கே.

பக்தர் : ஸ்லோகம் 35 : பகவான் கிருஷ்ணர் கூறினார்: பலம் பொருந்திய புயங்களை உடைய குந்தியின் மகனே, அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும். (ப.கீ 6.35)

பிரபுபாதா : ஆம் .இப்போது , கிருஷ்ணர் கூறுகிறார் " ஆம்" கிருஷ்ணர் இது கடினமானது அல்ல என்று கூறவில்லை. "ஆம் இது கடினமே" என்றுதான் கூறுகிறார் ஆனால் தொடர்ந்த பயிற்சியினால் இது சாத்தியம் தொடர்ந்த பயிற்சி என்பது , கிருஷ்ணரை நினைவூட்டும் ஏதாவது ஒரு செயலில், ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகும். ஏதாவது செய்ய வேண்டும்....... அதனால்தான் நம்மிடையே பல செயல்கள் உள்ளன. கீர்த்தனை மட்டுமல்ல ,கோவில் நிகழ்ச்சிகள், பிரசாத செயல்கள் ,புத்தகப் பதிப்பு சம்பந்தப்பட்ட செயல்கள்,பல செயல்கள். அனைவருமே ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதில் மையப்புள்ளி கிருஷ்ணரே. எனவே தட்டச்சு செய்யும் ஒரு நபர் , கிருஷ்ணருகாக செயல்படுவதால் அவர் யோக முறையில் உள்ளார். கிருஷ்ணருக்காக சமையல் செய்யும் நபர், அவரும் யோக முறையில் உள்ளார் வீதிகளில் கீர்த்தனம் செய்யும் நபர், நம் பிரசுரங்களை விநியோகித்து , அவரும் கிருஷ்ணரில் உள்ளார். ஆக, நம் பௌதீக வாழ்க்கையில் நாம் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது போல, நாம் ஈடுபடும் சாதாரண செயல்களிலும், கிருஷ்ணருடன் தொடர்புபடுத்தி அமைத்து கொண்டோமானால் , பிறகு நம்முடைய எல்லா செயல்களுமே கிருஷ்ண உணர்வுடன் இருக்கும். எனவே இந்த யோகத்தின் பக்குவமும் தானாகவே அமையும் .தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : ஸ்லோகம் 36: "கட்டுப்படாத மனதை கொண்டவனுக்கு தன்னை உணர்தல் கடினமான செயலாகும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி சரியான வழியில் முயல்பவனுக்கு வெற்றி நிச்சயம். இதுவே என் அபிப்ராயம். " (ப.கீ 6.36) பொருளுரை : பௌதிக ஈடுபாடுகளில் இருந்து மனதை விடுவிப்பதற்கு, சரியான மருத்துவத்தை ஏற்காதவன், தன்னுணர்வில் வெற்றி அடைவது கடினம் என்று பரமபுருஷ பகவான் அறிவிக்கிறார் மனதை பௌதிக இன்பங்களில் ஈடுபடுத்திய வண்ணம் யோகத்தைப் பயில முயல்வது விறகின் மீது நீரை ஊற்றிய வண்ணம் நெருப்பை மூட்ட முயல்வது போன்றதாகும். மனதைக் கட்டுப்படுத்தாமல் யோகத்தைப் பயில்வது காலவிரயமே.

பிரபுபாதா : நான் தியானம் செய்ய அமர்வதால், உண்மையில் , தியானம் , மனதை விஷ்ணுவின் மீது நிலைப்படுத்துமானால் அது மிக நல்லதே. ஆனால் இப்போதுள்ள பல யோகா மையங்கள், சூனியமான ஏதாவது ஒன்றிலோ அல்லது ஏதாவது ஒரு நிறத்திலோ, தங்களது மனதை நிலை நிறுத்துமாறு , தங்களது மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். பாருங்கள், விஷ்ணுவின் மீது அல்ல. எனவே இது மிக கடினமான விஷயம் இது பகவத் கீதையிலும் விளக்கப்பட்டுள்ளது....க்லேஷோ2 'தி4கதரஸ் தேஷாம் அவ்யக்தாஸக்த-சேதஸாம் (ப.கீ 12.5) தன் மனதை பிரம்மத்தின் மீதோ அல்லது சூனியத்தின் மீதோ நிலைநிறுத்த விரும்புபவனுக்கு, இது மிகவும் கடினமானதும் , தொந்தரவு தரக்கூடியது ஆகும். இங்கு, இந்தக் கோயிலில் நம் மாணவர்கள் தங்கள் மனதை கிருஷ்ணரின் மீது நிலை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் சூனியத்தின் மீது மனதை நிலை நிறுத்துவது என்பது மிகவும் கடினம். எனவே இயல்பாகவே என் மனம் சஞ்சலம் அடைய கூடியது ஆகும் . சூன்யமான ஏதோ ஒன்றை கண்டுபிடிப்பதற்கு பதிலாக என் மனம் வேறு எதிலாவது ஈடுபடும். ஏனென்றால் மனதை எப்போதும் எதிலாவது ஈடுபடுத்த வேண்டும். கிருஷ்ணரிடம் ஈடுபடவில்லை என்றால் அது மாயையில் ஈடுபட வேண்டும். எனவே அதைச் செய்ய இயலவில்லை என்றால் பிறகு இந்தப் பெயரளவு தியானம் மற்றும் ஆசனங்கள் வெறும் காலவிரயமே ஆகும்.

பக்தர் : அத்தகு யோகக் காட்சி , பௌதிக லாபத்தை உண்டாக்கலாம், ஆனால் ஆன்மீக உணர்வை பொறுத்தவரை அது பயனற்றதாகும்.

பிரபுபாதா : ஆம் பௌதீகரீதியாக லாபகரமானது. நான் அப்படி ஒரு யோகா பள்ளியை ஆரம்பித்து ஒவ்வொரு அமர்வுக்கும் 5 டாலர்கள் கட்டணம் வசூலிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள் பணத்திற்கு உங்கள் நாட்டில் பஞ்சமே இல்லை, எனவே நீங்கள் வருவீர்கள். ஆனால் நான் உங்களுக்கு வெறுமனே சில ஆசனங்கள், மூக்கை அழுத்துதல், அது இது, என கற்றுக் கொடுத்து, ஆனால் உங்களால் உண்மையானதை, அதாவது யோகப் பயிற்சியின் உண்மையான பயனை அடைய முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணடித்து உள்ளீர்கள் மேலும் நானும் உங்களை ஏமாற்றி உள்ளேன். அவ்வளவுதான். அது சாத்தியம் அல்ல , அது சாத்தியமல்ல. ஒருவன் தன் மனதை விஷ்ணுவின் வடிவத்தில் ஸ்திரமாக, தொடர்ந்து நிலைநிறுத்துதல் ---இதுவே சமாதி என்று அழைக்கப்படுகிறது எனவே , அதே விஷயம் வேறு வகையில், இந்த யுகத்திற்கு பொருத்தமான வகையில் செய்யப்படுகிறது. இதுவே கிருஷ்ண உணர்வு. தொடர்ந்து படிக்கவும்.

பக்தர் : "எனவே, பகவானின் திவ்யமான அன்பு தொண்டில் இடையறாது ஈடுபடுவதன் மூலம் மனதை கட்டுப்படுத்த வேண்டும்."

பிரபுபாதா : ஆம்.

பக்தர் : கிருஷ்ண உணர்வின் ஈடுபடாதவன், மனதை நிலையாக கட்டுப்படுத்த முடியாது. கிருஷ்ண உணர்வினன், எவ்வித தனிப்பட்ட முயற்சியும் இன்றி யோகப் பயிற்சியின் பலனை எளிதாக அடைகிறான். ஆனால் யோகத்தை பயில்பவன் கிருஷ்ண உணர்வின்றி வெற்றி அடைவது என்பது இயலாததாகும்

பிரபுபாதா : பிறகு தொடர்ந்து படிக்கவும்..