TA/Prabhupada 0700 – சேவையென்பது மூன்று விசயங்களைக் கொண்டது: சேவகர், சேவை செலுத்தப்பட்டவர், சேவை: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0700 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0699 - A Devotee in Love, Wants to Love Krsna in His Original Form|0699|Prabhupada 0701 - If you’ve Got Affection for the Spiritual Master, Finish Your Business in This Life|0701}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0699 – ஒரு பக்தன், கிருஷ்ணரின் உண்மை உருவின்மீதே அன்புசெலுத்த விரும்புவான்|0699|TA/Prabhupada 0701 – குருவின்மேல் பாசம் கொண்டிருந்தால் போதும் – இந்த ஜென்மத்தின் எல்லா கடமைகளும் தீர்ந்த|0701}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:53, 28 June 2021



Lecture on BG 6.46-47 -- Los Angeles, February 21, 1969

பிரபுபாதா: சரியா?

பக்தர்: மீண்டும், பிரபுபாதா, இன்று காலை வாசிப்பில் ...

பிரபுபாதா: இல்லை, காலை பற்றிய கேள்வி இல்லை. சரி, நீங்கள் கேட்கலாம், ஆனால் கேள்வி மற்றும் பதில்கள் வாசிப்பு விஷயத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் எல்லா விஷயங்களையும் கொண்டு வந்தால், இங்கே கேள்வி பதில்களுக்கு முடிவில்லை. பாருங்கள். எப்படியிருந்தாலும், நீங்கள் அதை முடியுங்கள். சரி., ஏதாவது கேள்வி இருக்கிறதா?.

பக்தர்: கோபர்கள் - கிருஷ்ணரின் நண்பர்கள் அவருடன் விளையாடுகிறார்கள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் அவர்கள் முற்பிறவியில் மிகவும் புனிதமான செயல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. ... அவர்கள் நித்யசூரிகள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் ...

பிரபுபாதா: இல்லை, நித்யசூரிகள்… அவர்களில் சிலர் நித்யசூரிகள்; அவர்களில் சிலர் அந்த நித்திய சங்கத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள் நீங்கள் சென்று கிரிஷ்ணருடன் விளையாட்டில் நண்பராக, ஒரு கூட்டாளராக மாறினால் போதும் எனவே உங்கள் நிலையும் இப்போது நித்தியமாகிறது கிருஷ்ணரின் நித்யசூரிகள் அவருடன் விளையாட முடியும் என்றால், மற்றவர்களுடன் அல்ல, நீங்கள் கிருஷ்ணா பக்தியுடன் இருப்பதன் அர்த்தம் என்ன? நீங்களும் ஆகலாம். எப்படி? பல, பல பிறவிகளில் புனிதமான செயல்களால். நீங்கள் அந்த பதவிக்கு உயர்த்தப்படலாம். க்ருத-புண்ய-புஞ்ஜா: (ஸ்ரீ.பா 10.12.11) உண்மையில் இந்த பொருள் உலகில் பௌம வ்ரிந்தாவனத்தில் , வ்ரிந்தாவன, பெரும்பாலும் கிருஷ்ணரின் கூட்டாளிகள் இந்த நிபந்தனைக்குட்பட்ட உயிர்கள் அந்த கிருஷ்ண பக்தியின் பரிபூரண நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் அவர்கள் முதலில் கிருஷ்ணரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் கிருஷ்ணரின் பொழுது போக்குகள் நடக்கும் கிரகத்தில். பின்னர் அவர்கள் எல்லாம் கடந்து சென்றடையும் விருந்தாவனத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள் எனவே இது பாகவதத்தில் கூறப்படுகிறது: க்ருத-புண்ய-புஞ்ஜா: அவர்கள் அனைவரும் பதவி உயர்வு பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் பதவி உயர்வு பெற்றாலும், அவர்கள் இப்போது நித்திய கூட்டாளிகள். இது தெளிவாக இருக்கிறதா? ஹரே கிருஷ்ணா. வேறு ஏதாவது கேள்வி?

பக்தர்: பிரபுபாதா? ஒருவர் பக்தி-யோகாவில் ஈடுபடுவது சாத்தியமா? கிருஷ்ணருக்கு சேவை செய்யாமல்? உதாரணத்திற்கு என்று...

பிரபுபாதா: கிருஷ்ணர் இல்லாமல், பக்தி எங்கே?

பக்தர்: சரி, யாரோ ஒருவர் புத்தரை அல்லது கர்த்தராகிய இயேசுவை வணங்குகிறார் ...

பிரபுபாதா: அது பக்தி-யோகா அல்ல பக்தி-யோகா வெறுமனே க்ரிஷ்ணருடன் தொடர்புடையது பக்தி-யோகா யாருக்கும், வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது புத்த தத்துவத்தை பக்தி-யோகா மூலம் எவ்வாறு பயன்படுத்தலாம்? பக்தி-யோகா என்றால் கடவுளைப் புரிந்துகொள்வது. பக்த்யா மாம் அபிஜாநாதி (ப.கீ 18.55) பகவத்-கீதா, பதினெட்டாம் அத்தியாயத்தில் நீங்கள் காணலாம் பக்தி-யோகா மூலம் நீங்கள் இறைவனை, முழுமுதற் கடவுளைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் புத்த தத்துவத்தில் கடவுள் இல்லை. உங்களுக்குத் தெரியுமா? எனவே பக்தி-யோகா எங்கே?

பக்தர்: கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் சிலர் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறார்கள்.

பிரபுபாதா: அது பக்தி-யோகா. ஏனென்றால் அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்கிறார்கள் நீங்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பக்தி-யோகா பற்றிய கேள்வி இல்லை எனவே கிறிஸ்தவ மதமும் வைணவம், ஏனென்றால் அவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்கிறார்கள் ஒரு சில கட்டத்தில், இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். கடவுள் உணர்தலின் வெவ்வேறு கட்டங்களும் உள்ளன. கிறிஸ்தவ மதம் "கடவுள் பெரியவர்" என்று கூறுகிறது. ஏற்றுக்கொள்! அது மிக நன்றாக உள்ளது. ஆனால் கடவுள் எவ்வளவு பெரியவர், பகவத்-கீதா மற்றும் ஸ்ரீமத்-பாகவதம் ஆகியவற்றிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கடவுள் பெரியவர் என்பதை ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனவே, அது பக்தியின் ஆரம்பம் நீங்கள் அங்கு பொருத்தி பார்க்கலாம், பக்தி. முகமதிய மதம் கூட. அதுவும் பக்தி-யோகா. கடவுள் இலக்காக இருக்கும் எந்த மதத்தையும் - அதாவது பக்தியில் பயன்படுத்தலாம். ஆனால் கடவுள் இல்லாதபோது, அல்லது தானே கடவுள் எனும் போது , ​​பக்தி-யோகா பற்றிய கேள்வி இல்லை. பக்தி-யோகா என்றால் பஜ தது க்தி, பஜ-ஸேவயா. சேவை. சேவை என்பது மூன்று விஷயங்கள்: சேவகர், சேவை பெறுபவர் மற்றும் சேவை. சேவையை ஏற்றுக்கொள்வோர் ஒருவர் இருக்க வேண்டும். சேவையை செய்ய ஒருவர் இருக்க வேண்டும் பின்னர் ஊடகம் வழியாக, சேவை செயல்முறை. எனவே பக்தி-யோகா என்றால் சேவை செய்வது ஆகும் சேவையை ஏற்க யாரும் இல்லை என்றால், பக்தி-யோகா எங்கே? ஆகவே, கடவுளை ஏற்றுக்கொள்ளாத எந்த தத்துவமும் அல்லது மதக் கொள்கையும் பக்தி ஈடுபாடு கொண்டது ஆகாது