TA/Prabhupada 0748 - கடவுள் பக்தர்களை திருப்திபடுத்த விரும்புகிறார்

Revision as of 13:44, 17 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0748 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.8.29 -- Los Angeles, April 21, 1973

ஆகவே பகவத்-கீதையில் இறைவன் கூறுகிறார்: பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (ப.கீ 4.8) எனவே இரண்டு நோக்கங்கள். கடவுள் அவதரிக்கும்போது, ​​இரண்டு பணிகளுக்காக அவதரிக்கிறார். ஒரு பணி பரித்ராணாய ஸாதூனாம், வினாஷாய ச துஷ்க்ருதாம் ஒரு பணி உண்மையுள்ள பக்தர்களை விடுவிப்பது சாது என்றால் புனித நபர்கள் என்று பொருள்.

சாது ... நான் பல முறை விளக்கியுள்ளேன். சாது என்றால் பக்தன் என்று பொருள். சாது என்பது உலக நேர்மை அல்லது நேர்மையின்மை, அறநெறி அல்லது ஒழுக்கக்கேடு என்று அர்த்தமல்ல. பௌதீக நடவடிக்கைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வெறுமனே ஆன்மீகம், சாது ஆனால் சில நேரங்களில் ஒரு நபரின் பொருள், ஒழுக்கநெறி, ஆகியவற்றை "சாது" என்று நாம் கொள்கிறோம் ஆனால் உண்மையில் "சாது" என்பது ஆழ்நிலை பக்தி சேவையில் ஈடுபடுபவர்கள். ஸ குணான் ஸமதீத்யைதான் (ப.கீ 14.26) சாது என்பது பொருள் குணங்களுக்கு அப்பாற்பட்டது. பரித்ராணாய ஸாதூனாம் (BG 4.8). பரித்ராணாய என்றால் விடுவிப்பது என்று பொருள்

ஒரு சாது ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தால், அவர் ஆழ்நிலையில் இருக்கிறார், பின்னர் அவரை விடுவிக்க வேண்டிய அவசியம் எங்கே? இது கேள்வி. எனவே இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, விடம்பனம். இது திகைப்பூட்டுகிறது. இது முரணானது. இது முரண்பட்டது போலத் தோன்றுகிறது. ஒரு சாது ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தால் ஆழ்நிலை நிலை என்றால் அவர் இனி எந்த பந்தத்திலும் இல்லை இயற்கையின் மூன்று பௌதீக முறைகளில், சாத்வீக குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஏனெனில் இது பகவத்-கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: ஸ குணான் ஸமதீத்யைதான் (ப.கீ 14.26) அவர் பௌதீக குணங்களை கடந்தவர் ஒரு சாது, பக்தர். விடுவிப்பது பற்றிய கேள்வி எங்கே? விடுவித்தல் ... அவருக்கு விடுதலை தேவையில்லை, ஒரு சாது, ஆனால் அவர் புருஷோத்தமனாகிய முழுமுதற் கடவுளை கண்ணுக்கெதிரே பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதால், அதுவே அவரது உள் மனதில் உள்ள ஆசை, எனவே கிருஷ்ணர் வருகிறார். விடுதலைக்காக அல்ல. அவர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர். அவர் ஏற்கனவே பௌதீக பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டவர். ஆனால் அவரை திருப்திப்படுத்த, கிருஷ்ணர் எப்போதும் ...

ஒரு பக்தர் எல்லா வகையிலும் இறைவனை திருப்திப்படுத்த விரும்புவது போல, இதேபோல் பக்தரை விட, இறைவன் பக்தரை திருப்திப்படுத்த விரும்புகிறார். இது அன்பின் பரிமாற்றம். உங்கள், நம் இயல்பான நடவடிக்கைகளை போலவே, நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவரை அல்லது அவளை திருப்திப்படுத்த விரும்புகிறீர்கள். இதேபோல், அவளும் (அவனும்) பரஸ்பரம் செய்ய விரும்புகிறாள். (விரும்புகிறான்) ஆகவே, இந்த பௌதீக உலகில் அன்பின் பரிமாற்றம் இருந்தால், ஆன்மீக உலகில் அது எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும்? எனவே "சாது என் இதயம், நானும் சாதுவின் இதயம்." என்று ஒரு கூற்று உள்ளது சாது எப்போதுமே கிருஷ்ணரை நினைத்துக்கொண்டே இருப்பார், மேலும் கிருஷ்ணர் எப்போதும் தனது பக்தரான சாதுவை நினைத்துக்கொண்டே இருப்பார்.