TA/Prabhupada 0749 – கிருஷ்ணர் கவலையுறுகிறார் – ஆகவே கிருஷ்ணப் பிரக்ஞைக்குள் வாருங்கள்

Revision as of 07:23, 19 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.7.7 -- Vrndavana, April 24, 1975

பிரபுபாதா: மக்கள் பக்தி இல்லாமல் இருப்பதால் துன்பப்படுகிறார்கள். ஆகவே, கடவுள் யார், கிருஷ்ணர் யார், என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது, அவர் தனது பக்தி இல்லாத செயலை முடிக்காவிட்டால்.

ஏஷாம் த்வந்த - கதம் பாபம்
ஜனானாம் புண்ய - கர்மணாம்
தே தவந்தவ- மோஹ - நிர்முக்தா
பஜந்தே மாம் திரத- வ்ரதாஹ்
(ப கீ 7.28)

இதுதான் கொள்கை, மனிதர்களை அவர்களின் பக்தியற்ற செயல்களில் நீங்கள் வைத்திருக்க முடியாது, அதே நேரத்தில் அவர் மதவாதி, அல்லது கடவுள் உணர்வுள்ளவர். அது சாத்தியமில்லை. அது சாத்தியமில்லை. எனவே சைதன்ய மஹாபிரபு பக்தியுள்ளவர்களாக மாற மிகவும் எளிதான முறையை பரிந்துரைத்துள்ளார். அதுதான் ஹரே கிருஷ்ணா மகா- மந்திரத்தின் கோஷம். சேதோ- தர்பண- மார்ஜனம் (சை.ச அந்த்ய 20.12). உண்மையான நோய் நம் இதயத்திற்குள் இருக்கிறது. ஹரித-ரோக-காம. ஹரித-ரோக-காம (சை ச அந்த்ய 5.45- 46) நமக்கு ஒரு நோய், இதய நோய் வந்துவிட்டது. அது என்ன ? காம, காம ஆசைகள். அது "ஹ்ரித்-ரோக-காம" என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த இதய நோயை நாம் குணப்படுத்த வேண்டும், ஹ்ரித்-ரோக-காம. அது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமும் கேட்பதன் மூலமும் செய்யப்படும். சேதோ- தர்பண- மார்ஜனம். இதயம் சரியாக இருக்கிறது ஆனால் அது பொருள் அழுக்கு விஷயங்களால் மூடப்பட்டுள்ளது, அதாவது மூன்று குணங்கள்: சத்வ-, ரஜ, தமோ-குண. ஆனால் ஸ்ரீமத்-பாகவதத்தை வெறுமனே கேட்பதன் மூலம், ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், நீங்கள் சுத்திகரிக்கப்படுவீர்கள். நித்யம்-பாகவத-சேவையா. நஷ்ட ப்ராயேஷு அபத்ரேஷு நித்யம் பாகவத- சேவையா (ஸ்ரீ பா 1 .12 .18) நித்யம் பாகவத... இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தினால் ... இந்த வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் மையங்களைத் திறக்கிறோம், நித்யம் பாகவத - சேவயா. அனர்த்த உபாசமம் சாக்ஷாத் பக்தி-யோகம் (ஸ்ரீ பா 1.7.6) பின்னர், கிருஷ்ணரைப் பற்றி கேட்டு இதயத்தை சுத்தப்படுத்தியவுடன் ... சைதன்யா-மஹாபிரபு பரிந்துரைக்கிறார்: யாரே தேகா, தாரே கஹா கிருஷ்ணா- உபதேச (சை சரி மத்திய 7.128). இந்த ஸ்ரீமத்-பாகவதமும் ஒரு கிருஷ்ண-உபதேசம், ஏனெனில் ஸ்ரீமத்- பாகவதத்தைக் கேட்பதன் மூலம் நீங்கள் கிருஷ்ணர் மீது ஆர்வம் காட்டுவீர்கள். கிருஷ்ணாவைப் பற்றி உபதேசம், அதுவும் கிருஷ்ணா - உபதேஷா,

கிருஷ்ணரால் வழங்கப்பட்ட உபதேசம், அறிவுறுத்தல், அதுவும் கிருஷ்ண உபதேஷா. எனவே ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நோக்கம் இதுதான், நீங்கள் சென்று பிரசங்கித்து, கிருஷ்ண உபதேஷத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யுங்கள். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். கிருஷ்ண-உபதேசத்தை எவ்வாறு பரப்புவது, கிருஷ்ண பக்தியை எவ்வாறு பரப்புவது என்பதை நம் எல்லா எல்லோருக்கும் கற்பிக்கிறோம். பின்னர் அனர்த்த உபசமம் சாக்ஷாத். பின்னர் அவர் மாசுபடுத்திய தேவையற்ற விஷயங்கள் அனைத்தும் முடிந்துவிடும். பின்னர் தூய பக்தி... தூய பக்தி என்பது கிருஷ்ண பக்தி. தூய பக்தி என்பது, "நான் கிருஷ்ணருடன் ஒரு பகுதியாகவும், சிறு துளியாகவும் மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கிறேன்" என்பதைப் புரிந்துகொள்வதாகும். என் விரல் என் உடலுடன் மிகவும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதைப் போல. நெருக்கமான ... விரலில் சிறிதளவு வலி இருந்தால், நான் மிகவும் கலக்கமடைகிறேன். ஏனெனில் இந்த விரலுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு கிடைத்துள்ளது. இதேபோல், கிருஷ்ணருடன் நமக்கு நெருங்கிய தொடர்பு கிடைத்துள்ளது, நாம் வீழ்ந்துவிட்டோம். எனவே கிருஷ்ணரும் சிறிய வலியை உணர்கிறார், எனவே அவர் கீழே வருகிறார்:

பரித்ராணாய சாதூனாம்
வினாஷாய ச தூஷிக்கிறதாம்
தர்ம- ஸம்ஸ்தாபநார்த்தாய
சம்பவாமி யுகே யுகே
(ப கீ 4.8)

கிருஷ்ணர் வலியை உணர்கிறார். எனவே நீங்கள் கிருஷ்ண பக்தி நிலையை அடைந்தால், பின்னர் கிருஷ்ணர் மகிழ்ச்சியை உணருவார். அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்.

மிக்க நன்றி.

பக்தர்கள்: ஜெய பிரபுபாதா.