TA/Prabhupada 0764 - ஏசுநாதர் அவற்றில் ஒருவனாக தான் இருப்பான் என்று உழைப்பாளிகள் நினைத்தார்கள்

Revision as of 16:25, 25 June 2015 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0764 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 2.3.14-15 -- Los Angeles, May 31, 1972

ஆகையால நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக செல்லுங்கள். க்ருஷ்ண உணர்வை பற்றி பிரசாரம் செய்யுங்கள். அவர்களில் உயிர் புகற்றுங்கள், அப்போ இந்த மனமுறிவு தீரும். சமுகத்தலைவர்கள், அரசியல்வாதீகள் எதை நோக்கி போகிறார்கள் என்பதில் கவனம் காட்ட வேண்டும். ஆகையால் சொல்லப்படுவது என்னவென்றால், கதா ஹரி கதோதர்கா: ஸதாம் ஸ்யூஹு ஸதஸி த்ருவம் ( பாகவதம் 2.3.14 ). ஆகையால் நாம் ஹரி கதாவைப்பற்றி விவாதித்தால்... நாம் ஸ்ரீமத்பாகவதத்தை பற்றி, ஹரி கதாவை பற்றி விவாதிக்கிறோம். அதாவது கதா ஹரி கதோதர்கா: ஸதாம் ஸ்யூஹு ஸதஸி த்ருவம் ( பாகவதம் 2.3.14 ). பக்தர்கள் மத்தியில் இதை ஆராய்ந்தால்தான், ஒருவரால் இதை புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீமத்பாகவதம் இப்புத்தகம் பக்தர்களுக்கு மதிப்புடையது. மற்றவர்கள் இப்புத்தகத்தை வாங்கலாம். அவர்கள் அதனை பார்த்து " என்ன இது ? ஏதோ ஸமஸ்க்ருத வரிகள் எழுதப்பட்டிருக்கிறது. காகித குப்பை. புரிகிறதா? நமக்கு இந்த செய்தி பத்திரிகை எப்படி வீண் காகிதமோ அப்படி. நாம் இதற்காக கவலைப் படுவதில்லை. ஆனால் அவர்கள் அதை வெகு கவனமாக மார்பில் வெய்த்துக் கொள்கிறார்கள். "ஆஹா, இது எவ்வளவு அருமையாக இருக்கு." ( சிரிப்பு ) மேற்கத்திய நாடுகளில் செய்தித்தாள்கள் மக்களால் விரும்பப்பட்டவை. ஒரு பெரியவர் ஒரு நிகழ்வை என்னிடம் சொன்னார், ஒரு கிரிஸ்துவ பாதரியார் கிரிஸ்துவ மதத்தை போதிக்க ஷெப்ஃபீள்டுக்கு சென்றார். ஷெப்ஃபீள்டு, அது எங்கே உள்ளது ? இங்கிலாந்திலா ? அவர், தொழிலாளர்கள் மத்தியில் உபதேசம் செய்து கொண்டிருந்தார், " ஏசுநாதர் உங்களை காப்பாற்றுவார். நீங்கள் ஏசுநாதரிடம் சரணடையாவிட்டால், நரகத்திற்க்குப் போவீர்கள் ." ஆக முதல் கேள்வி, "யார் அது ஏசுநாதர் ? அவனுடைய நம்பர் என்ன ? " அப்படியென்றால் அவர்கள் நினைத்தார்கள், " ஏசுநாதர் உழைப்பாளிகளில் ஒருவனாக இருப்பான், மேலும் ஒவ்வொரு உழைப்பாளிக்கும் ஒரு எண் இருந்தது, ( சிறிப்பு ) அப்போ அவன் எண் என்ன ? " பதிலுக்கு " இல்லை, ஏசுநாதர், அவர் கடவுளின் மகன். அவருக்கு எண் எல்லாம் கிடையாது. அவர் உழைப்பாளி இல்லை. " பிறகு, " நரகம் என்றால் என்ன ? அதற்க்கு அவர் விவரித்தார், " நரகம் மிகவும் ஈரமான, இருட்டான இடம், " இத்யாதி. இதற்க்கு அவர்கள் மௌனமாக இருந்தார்கள். ஏன் என்றால் அவர்கள் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள். அங்கு எப்போதுமே இருட்டாகவும் ஈரமாகவும் இருக்கும். ( சிரிப்பு ) அப்போ நரகத்திற்கும் சுரங்கத்திற்கும் என்ன வித்யாசம் ? அவர்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. ஆனால் எப்போ பாதரி, " அங்கு செய்திப் பத்திரிகை கிடையாது, " என்று சொன்னாரோ, " அய்யோ பயங்கரம் ! " செய்தி பத்திரிகையே கிடையாதாம். ( ப்ரபுபாதர் சிரிக்கிறார் ) ஆகையால் உங்கள் நாட்டில், இவ்வளவு பெரிய பெரிய, என்ன சொல்கிறேன் என்றால், கொத்து கொத்தாக செய்தி பத்திரிகைகள் , விநியோகிக்கப் படுகின்றன.