TA/Prabhupada 0766 - ஸ்ரீமத் பாகவதத்தை படிப்பதாலையே நீங்கள் சன்தோஷமாக இருப்பீற்கள்.

Revision as of 17:06, 25 June 2015 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0766 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 1.13.12 -- Geneva, June 3, 1974

ப்ரபுபாதர் : ( படித்து ) " மஹாராஜர் யுதிஷ்டிரர் நிலையில் , தனது பெரியப்பாவுக்கு தகுந்த சன்மானத்துடன் ஆதாரம் தருவது முறையானது, ஆனால் இதை போன்ற தயாள குணம் கொண்ட உபசரணையை த்ருதராஷ்ட்றரால் ஏற்றுக்கொள்வது, விரும்பத்தகாதது. வேரு வழியே இல்லை என்று தொன்றியதால் அவர் அதை ஒப்புக்கொண்டார். விதுரர் த்ருதராஷ்ட்றரை தெளிவு படுத்த மற்றும் ஆன்மீக ஆற்றலின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அங்கே வந்தார். வீழ்ச்சி அடைந்தோரை கறை எத்துவது, முதிற்ச்சி அடைந்தவர்களின் கடமை. ஆனால் ஆன்மீக அரிவாற்றல் உள்ள பேச்சுகள் புத்துணர்ச்சி நிரைன்தவை என்பதால் த்ருதறாஷ்ட்ரரை பொதிக்கும்போது, விதுரர் குடும்பத்திநர் அனைத்தோரின் மநங்களை கவர்ந்தார், மற்றும் எல்லோரும் அவர் சொல்லை நிதானமாக கேட்டு மகிழ்ச்சி கொண்டனர். ஆன்மீகத்தில் தெளிவு அளிக்கும் வழி இது தான். பொதனையை கவநமாக கேட்க வேண்டும், ம்ற்றும் போதிப்பவர் ஆன்மீக உணர்வை அடைன்தவராக இருன்தால், இது சுயமறதியில் இருக்கும் ஆன்மாவின் உறங்கும் இதயத்தில் சயல் படும் . மற்றும் தொடர்ந்து செவி கொடுப்பதால், ஒருவரால் சுய உணற்ச்சியின் பூரணமான நிலையை அடைய முடியும் ." ஆகவே ஷ்ரவணம் அத்தியாவசியம். ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம் (பாகவதம் 7.5.23) இப்படிக்கு நம் எல்லா மையங்களிலும் இந்த செயல்முறையை பின்பற்றவேண்டும். எம்மிடம் இப்போது ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இப் புத்தகங்களை படித்தாலே போதும்... நம்முடைய யோகேஷ்வர ப்ரபு புத்திகங்களை படிப்பதில் மிகு ஆர்வமாக இருக்கிறார். அப்போ எல்லோரும் புத்திகங்களை படிக்கவேண்டும் மற்றும் மற்றவர்கள் கேட்க வேண்டும். அது அத்தியாவசியம், ஷ்ரவணம் . இன்னுங்கூடுதலாக நீங்கள் கேட்க... நம்மிடம் இவ்வளவு புத்திகங்கள் இருக்கின்றன. எது ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கிறதோ... எப்படி நாம் தினமும் ஒரு வரியை விவரிக்கிறோம். அப்போ குறைந்தது... ஏற்கனவே ஏராளமான வரிகளின் சேகரிப்பு இருக்கிறது, நீங்கள் ஐம்பது ஆண்டுகள் இவையை பேசிக்கொண்டே இருக்கலாம். ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த புத்திகங்களை வைத்து நீங்கள் தொடர்ந்து செல்லாம். மேலும் சேகரிப்பிற்க்கு அவசியமே இருக்காது. அப்போ இந்த அநுஷ்டானத்தை பின்பற்ற வேண்டும். காலத்தை வீண் ஆக்காதேற்கள். எவ்வளவு முடியுமோ, லௌகீகத்திற்க்கு அப்பால் பட்ட இந்த திவ்யமான விஷயங்களை கேழுங்கள், பாகவதம். யத் வைஷ்ணவானாம் ப்ரியம் ( பாகவதம் 12.13.18). இதனில் கூறப்பட்டிருக்கிறது இந்த ஸ்ரீமத் பாகவதம் வைஷணவர்களின், பக்தற்களின் உயிர். வ்ருந்தாவனத்தில் நீங்கள் பார்க்கலாம், அவர்கள் எப்பொழுதும் ஸ்ரீமத் பாகவதத்தை படித்து கொண்டிருப்பாற்கள். அது அவர்களின் உயிர். இப்போ நம்மிடம் ஆறு பாகங்கள் இருக்கிறது, மேலும்... எத்தனை ? எட்டு பாகங்கள் வெளியிட தயாரா ? அப்போ உங்களிடம் நிறைன்த சேகரிப்பு இருக்கும். அப்போ நீங்கள் படிக்கவேண்டும். ஷ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ( பாகவதம் 7.5.23 ). அது தான் மிக முக்கியமான கடமை. அது தான் சுத்த பக்தி ( தாண்டு ). நம்மால் இருபத்தி நான்கு மணி நேரமும் சேவி கொடுக்கவோ ஜபிக்கவோ முடியாது; அதனால் நாம் நம்முடைய சயல்முறைகளை விரிவாக்கம் செய்திரிக்கிறோம். இல்லையெனில் ஸ்ரீமத் பாகவதம் அருமையானது, நீங்கள் இவ்வாரு எவ்விடத்திலியும் பழக்கம் கோண்டால், என்த நிலையிலும், வெரும் ஸ்ரீமத் பாகவதத்தை படித்தால், நீங்கள் சன்தோஷமாக இருப்பீற்கள். அப்போ இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள் மற்றும் உங்கள் ஆன்மீக வாழ்கையை மேலும் மேலும் பூரணம் ஆக்குங்கள். மிக்க நன்றி.

பக்தர்கள் : ஜய ஸ்ரீல ப்ரபுபாதா.