TA/Prabhupada 0771 - பக்தனுக்கு பௌதீக இன்பத்திலும் தெய்வீக இன்பத்திலும் சமமான ஆர்வம் இருக்கவே முடியாது

Revision as of 18:06, 13 June 2018 by Vanibot (talk | contribs) (Vanibot #0019: LinkReviser - Revised links and redirected them to the de facto address when redirect exists)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.5.12-13 -- New Vrindaban, June 11, 1969

இப்பொழுது வ்யாஸதேவர் பல வகையான இலக்கியங்களை விவாதிக்கிறார். அவர் விளக்கியிருக்கிறார், எந்த இலக்கியமும் - வாக்கு வன்மைப்படியோ, காவிய அழகின்படியோ, இலக்கணப்படியோ, எவ்வளவு சிறப்பாகத் தயார் செய்திருந்தாலும் - அதில் பூரண உண்மையைப் பற்றிய தகவல் இல்லாவிட்டால், அத்தகைய இலக்கியங்கள் வீணானவை, மற்றும் எந்த சாதுவும் இத்தகைய இலக்கியங்களில் துளிக் கூட ஆர்வம் செலுத்த மாட்டார். அவர் அவற்றைக் கைவிடுவார். எப்படி அன்னப் பறவைகள், காக்கைகள் சுகம் காணும் இடங்களில் மகிழ்வு அடைவதில்லையோ அப்படித் தான். எப்படி அன்னப் பறவைகளுக்கும் காக்கைகளுக்கும் வித்யாசம் இருக்கிறதோ, பறவைகள் உலகில் ஆகட்டும், மிருகங்கள் உலகில் ஆகட்டும், எப்பொழுதும் நீங்கள் காணலாம். வெவ்வேரு வகையான பறவைகளும் மிருகங்களும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றன. அது போலவே, க்ருஷ்ண உணர்வு பெற்ற பக்தர்கள், அவர் சுவை காணும் விஷயங்கள் , காக்கைப்போல் ஆர்வங்கள் இருக்கும் நபர்களைவிட மாறுபட்டதாக இருக்கும். காக்கைகள் ஆர்வம் செலுத்தும் விஷயங்கள்... சரவித-சரவநானாம் (பாகவதம் 7.5.30). ப்ரகலாத மகாராஜர் கூறுகிறார், " மென்றதையே மெல்லுவதுபோல்." அது ஏற்கனவே மென்று முடித்தது, மேலும் யாராவது அதை சுவைத்து பார்க்க முயன்றால், " பார்ப்போமே, அதில் என்ன தான் சுவை இருக்கிறது ?" அது வீண் சிரமம் தான். இவ்வாறு மென்றதைய மெல்லும் வழியில் இந்த பௌதிக உலகம் போய்க் கொண்டிருக்கிறது. நல்ல வியாபாரம் செய்து, நிறைய பணம் சேர்த்த ஒருவனைப் போல், அவன் நிறைய புலனுகர்ச்சி செய்திருப்பான். ஆனாலும் அவன் த்ருப்தி அடைவதில்லை. அப்படி இருந்தாலும், அவன் தன் மகன்களையும் பேரன்களையும் அதே வியாபாரத்தில் ஈடுபடுத்துகிறான். "இவ்வாறு வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானது அல்ல." என்று அவன் அநுபவத்தில் உணர்கிறான். நானே த்ருப்தி அடையவில்லை, பின்னர் எதற்காக நான் என் மகன்களையும்... பேரன்களையும், அதே வியாபாரத்தில், மென்றதயே மெல்லுவதுப் போல் ஈடுப்படுத்த வேண்டும் ? ஏனெனில் அவர்களிடம் அதற்கு மேம்பட்ட தகவல் எதுவும் இல்லை.. ந தே விது: ஸ்வார்த கதீம் ஹி விஷ்ணும் துராஷய யே பஹிர் அர்த்த மானின: (பாகவதம் 7.5.31). ப்ரகலாத மகாராஜர் தன் நாத்திகனான தந்தைக்கு அறிவுறுத்தினார். அவர் சொன்னார்... அவர் தந்தை கேட்டார், "என் அன்பு மகனே, உனக்கு எங்கிருந்து இத்தகையான சிந்தனைகள் வந்தன ? அவரோ சிறந்த பக்தர், ஆனால் அவர் தந்தை சுத்தமான நாத்திகர். அவர் சொன்னார், "ஒரு சுத்தமான பக்தரின் தயவு இல்லாமல் இந்நிலையை அடைய முடியாது." நைஷாம் மதிஸ் தாவத் உருகமாங்க்ரீம் (பாகவதம் 7.5.32). உருகமாங்க்ரீம், ஆங்க்ரி. ஆங்க்ரி என்றால் தாமரைப் பாதங்கள். யாவரும் பரம புருஷரான கடவுளின் பொற்பாதங்களின்மேல் ஆர்வமுடன் இருப்பது அறிதானது. ஏனென்றால் பரம புருஷரான கடவுளின் பொற்பாதங்களின்மேல் ஆர்வம் உடையவர் ஆவதற்கு அர்த்தம், முக்தி பெற்றவர் ஆவது. அநர்த்த அபாகம: யத் அர்த்த: (பாகவதம் 7.5.32). அநர்த்த. அநர்த்த என்றால் தேவை இல்லாதது. நாம் வாழ்க்கையில் அவசியமல்லாத தேவைகளை உருவாக்கி கொண்டு சிக்கிக் கொள்கிறோம். இது தான் பௌதீக வாழ்கை. ஆனால் ஒருவன் க்ருஷ்ண உணர்வை அடைந்தால், க்ருஷ்ணரில் ஆர்வம் கொண்டால், அப்பொழுது அவனுக்கு வெறுப்பாகிவிடும்: "என்ன ப்ரயோஜனம் ?" நம் ப்ரம்மச்சாரிகளும், நம் பக்தர்களும், வெறும் தரையின் மேலேயே படுத்து விடுவார்கள், அது போல் தான். அவர்களுக்கு ஆடம்பரமான படுக்கையோ மெத்தையோ தேவை இல்லை. ஏனெனில் அவர்கள் வாழ்கை இது போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது, அவர் நினைப்பது என்னவென்றால், " சரி, இப்பொழுது நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும். இப்படியா, அப்படியா, அதற்கு நான் ஏன் கவலைப் படவேண்டும் ? ஆம். இது தான் க்ருஷ்ண உணர்வில் முன்னேற்றத்திற்கான அறிகுறி. க்ருஷ்ண உணர்வு என்றால் பக்தி: பரேஷாநுபாவோ விரக்திர் அந்யத்ர ஸ்யாத் (பாகவதம் 11.2.42). க்ருஷ்ண உணர்வில் சுவையே காணாதவர்கள் எல்லாம் சந்தோஷத்தை அடைவதற்கான முயற்ச்சியில்... தேவை இல்லாத பௌதீகத் தேவைகளை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள், எனென்றால் அவர்களுக்கு வேறு எந்த அறிவும் இல்லை. ஆனால் க்ருஷ்ணரின் பக்திமய சேவையில் ஈடுபட்ட உடனேயே, பரேஷானுபூதி, அவனால் ஓரளவு திவ்யமான இன்பத்தை உணர முடிகிறது, பிறகு அதனால், இந்த அறிவற்ற இன்பங்கள் சிறியதாக தோற்றம் அளிக்கின்றன. அது தான் சோதனை. பக்தன் என்றால் பௌதீக இன்பத்திலும் தெய்வீக இன்பத்திலும் சரிசமமான ஆர்வத்துடன் இருப்பது கிடையாது. இல்லவே இல்லை. விரக்தி. பகவத் கீதையும் இதை தான் கூறுகிறது, பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே (பகவத் கீதை 2.59). எப்படி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு சில ஆகாரங்களுக்கான தடை விதிக்கப் படுகிறதோ, அப்படித் தான். அவனுக்கு ஆசை இருக்கிறது. அத்தகு ஆகாரங்களை சாப்பிட ஆசை இருக்கிறது. ஒரு டைபாய்டு நோயாளி போல் தான். மருத்துவர் சொல்வார் "எந்த விதமான திட உணவும் சாப்பிட கூடாது. கொஞ்சம் திரவமான உணவை மட்டும் குடிக்கலாம்." ஆனால் அவனுக்கோ நல்ல சோறு சாப்பிட ஆசை இருக்கிறது. "ஓ மருத்துவர் இந்த சோறை சாப்பிடாதே என்று சொல்லிருக்கிறாரே. சரி தான் போ, என்னால் என்ன தான் செய்ய முடியும் ?" ஆனால் அவனுக்கு ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு பக்தனுக்கு வலியுறுத்தத் தேவை இல்லை - எப்படி என்றால், மருத்துவர் ,"இப்படிச் செய்யாதே."என்று சொன்ன உடன் அவன் தன்னிச்சையாக அவர் சொன்னபடி செய்கிறான். ஏன் ? பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே: அவன் மேம்பட்டது எதையோ கண்டிருக்கிறான் அல்லது சுவைத்திருக்கிறான் அதனால் அவனுக்கு இந்த அருவருப்பான சுவை வெறுத்தே போய் விடுகிறது. அது தான் பக்தி: பரேஷானு... என்றால் நாம் இத்தகு அருவருப்பிற்குரிய விஷயங்களுக்காக வெறுத்து விடுவோம். அதிலிருந்து நாம் க்ருஷ்ண உணர்வில் முன்னேறுவதை உணரலாம். அதற்கான சோதனை உங்களிடமே இருக்கிறது. யாரையும் கேட்கத் தேவை இல்லை. "நான் க்ருஷ்ண பக்தியில் முன்னேறுகிறேனா ?" என்று. உங்களாலேயே அதைப் புரிந்துக் கொள்ள முடியும். உதாரணமாக: பசியில் சாப்பிடும் பொழுது, எவ்வளவு பசி மிச்சம், எவ்வளவு வலிமை கிடைத்து, எவ்வளவு திருப்தி அடைந்தீர்கள் என்பதை உங்களால் உணரமுடிகிறது. யாரையும் கேட்கத் தேவை இல்லை. அது போலவே, ஒருவரின் க்ருஷ்ண உணர்வு அதிகரிக்கும் பொழுது, பௌதீக சுகங்களில் ஆசை குறைவை வைத்து சோதித்துப் பார்க்கலாம். அது தான் சோதனை.