TA/Prabhupada 0779 - துக்கத்திற்கான இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியை பெறமுடியாது

Revision as of 11:35, 18 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0779 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.19 -- Denver, July 2, 1975

எனவே இது கிருஷ்ணா பக்தி உள்ளவர் பெறும் இலாபம். கிருஷ்ணா மிகவும் கவர்ச்சியானவர் யாராவது இருந்தால் யாரேனும் ஒருவர், ஒரு முறை மட்டுமே கிருஷ்ணரை நினைத்து சரணடைவதில் தனது மனதை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், பின்னர் அவர் இந்த பௌதிக வாழ்க்கையின் அனைத்து மோசமான நிலையிலிருந்தும் உடனடியாக காப்பாற்றப்படுகிறார். ஆகவே அதுவே நம்முடைய வாழ்க்கையின் முழுமை, எப்படியோ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் நாம் சரணடைகிறோம். எனவே இங்கே அது வலியுறுத்தப்படுகிறது, ஸக்ருத். ஸக்ருத் என்றால் "ஒரே ஒரு முறை" என்று பொருள். எனவே, ஒரு முறை கிருஷ்ணரை நினைத்துப் பார்பதினால் இவ்வளவு இலாபம் இருந்தால், நாம் கற்பனை செய்து பார்க்கலாம், எப்போதும் ஈடுபாடு கொண்டவர்கள் ஹரே ஹரே கிருஷ்ணா மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கிருஷ்ணரை நினைப்பவர்கள் - அவர்களின் நிலை என்னவாயிருக்கும்.

அவர்கள் மிகவும் பாதுகாப்புடன் இருப்பவர்கள், இவ்வளவு சொல்லப்படுகிறது, ந தே யமம் பாஷ-ப்ருதஷ் ச தத்-படான் ஸ்வப்னே 'பி பஷ்யந்தி (ஸ்ரீ.பா 6.1.19) ஸ்வப்னா என்றால் கனவு காண்பது. கனவு என்பது பொய். யமதூதர்களைப் பார்க்க, மரணத்தை கொடுக்கும் யமராஜாவின் உத்தரவை செயல்படுத்துபவர்கள்... நேருக்கு நேர் பார்க்க ... இறக்கும் நேரத்தில், மிகவும் பாவங்கள் செய்த ஒருவர் இறந்து கொண்டிருக்கும்போது, அவர் யமராஜா அல்லது யமரஜாவின் உத்தரவை செயல்படுத்துபவர்களைப் பார்க்கிறார். அவர்கள் மிகவும் உக்கிரமானவர்கள். சில நேரங்களில் மரணக் கட்டிலில் இருக்கும் மனிதன் மிகவும் பயந்து, "என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று" என்று அழுகிறான். இது அஜாமிலாவிற்கும் நடந்தது. அதுதான் நாம் பின்னர் விவரிக்க வேண்டிய கதை. ஆனால் அவர் காப்பாற்றப்பட்டார். கிருஷ்ண பக்தியில் அவரது கடந்தகால செயல்களுக்காக, அவர் காப்பாற்றப்பட்டார். அந்தக் கதையை நாம் பின்னர் பெறுவோம்.

எனவே இது பாதுகாப்பான நிலை. இல்லையெனில், இந்த பௌதிக உலகம் ஆபத்து நிறைந்தது. இது ஆபத்தான இடம். இது பகவத்-கீதையில், து:காலயம் என்று கூறப்படுகிறது. அது துன்பங்களின் இடம். துன்பங்களுக்குரிய ஒரு இடத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புருஷோத்தமராகிய கிருஷ்ணர் கூறுகிறார், அந்த து:காலயம் அஷாஷ்வதம் (ப.கீ 8.15) இந்த பௌதிக உலகம் பரிதாபகரமான இடமாகும். அதுவும் அஷாஷ்வதம். நிரந்தரமானது அல்ல. நீங்கள் தங்க முடியாது. நீங்கள் ஒரு சமரசம் செய்தாலும் "பரவாயில்லை அது துன்பத்தின் இடமாக இருந்தாலும் நான் என்னை தயார் செய்து கொண்டு, நான் இங்கேயே இருப்பேன் ... "

என்று சொல்ல முடியாது. இந்த பௌதிக உலகில் மக்கள் மிகவும் பந்தம் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நடைமுறை உதாரணம், அனுபவம் கிடைத்துள்ளது. 1958 அல்லது '57லில், நான் முதன்முதலில் இந்த, '​​மற்ற கிரகத்திற்கு எளிதான பயணம்' எனும் புத்தகத்தை வெளியிட்டபோது, நான் ஒரு மனிதனை சந்தித்தேன். அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார், "எனவே நாம் வேறு கிரகத்திற்கு செல்லலாமா? இதுபோன்ற தகவல்களை நீங்கள் தருகிறீர்களா?" "ஆம்." "சென்றால், நீங்கள் திரும்பி வர மாட்டீர்கள்." "இல்லை, இல்லை, பிறகு நான் செல்ல விரும்பவில்லை." (சிரிப்பு) அவர் சொன்னார் முழு யோசனையும் நாம் மற்றொரு கிரகத்திற்கு செல்வோம், அவர்கள் வேடிக்கை பார்ப்பது போல: அவர்கள் சந்திரன் கிரகத்திற்கு செல்கிறார்கள். ஆனால் அவர்களால் அங்கே தங்க முடியவில்லை. அவர்கள் திரும்பி வருகிறார்கள். அது அறிவியல் முன்னேற்றம். நீங்கள் அங்கு சென்றால், நீங்கள் ஏன் அங்கே தங்கக்கூடாது? செய்தித்தாளில் படித்தேன் ரஷ்ய ஏரோநாட்டிக்ஸ் சென்றபோது, அவர்கள் கீழே பார்க்கிறார்கள், "மாஸ்கோ எங்கே?" (சிரிப்பு)