TA/Prabhupada 0789 - செயல்படுத்தப்படும் இடம், இடத்தின் உரிமையாளர் மற்றும் இடத்தின் கண்காணிப்பாளர்

Revision as of 02:18, 19 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0789 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 13.4 -- Paris, August 12, 1973

பக்தர்: மொழிபெயர்ப்பு, "இப்போது இந்த செயல்களுக்கான களம் பற்றிய எனது சுருக்கமான விளக்கத்தைக் கேளுங்கள், அது எவ்வாறு அமைக்கப்படுகிறது, அதன் மாற்றங்கள் என்ன, அது எங்கிருந்து உருவாக்கப்படுகிறது, செயல்களுக்கான களம் அறிந்தவர் யார், அவருடைய தாக்கங்கள் என்ன."

பிரபுபாதர்: தத் க்ஷேத்ரம் (ப.கீ 13.4). இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்யபிதீயதே (ப.கீ 13.2). எனவே கிருஷ்ணர் ஏற்கனவே விளக்கியுள்ளார், க்ஷேத்ர என்றால் இதம் ஷரீரம். ஷரீரம் இந்த உடல் என்று பொருள். தத் க்ஷேத்ரம். முதலாவதாக, நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இந்த உடல் அல்லது எந்தவொரு செயல் துறையும், எங்கும், மூன்று விஷயங்கள் உள்ளன: செயல்களுக்கான களம், களத்தின் உரிமையாளர் மற்றும் களத்தின் மேற்பார்வையாளர். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சரிபார்க்கலாம். எனவே கிருஷ்ணர் கூறுகிறார் க்ஷேத்ரா-ஜனம் காபி மாம் விட்தி. இரண்டு க்ஷேத்ரஜ்ஞ: மற்றும் ஒரு க்ஷேத்ர உள்ளன. ஒன்று செயல்களுக்கான களம் மற்றும் இரண்டு ஆளுமைகள், க்ஷேத்ரஜ்ஞ:. ஒருவர் ஆக்ரமித்திருப்பவராகவும் மற்றொருவர் உரிமையாளராகவும் இருக்க வேண்டும்.

இந்த வீட்டைப் போலவே நாம் ஆக்ரமித்திருப்பவராகவும் இருக்கிறோம். வீடு , க்ஷேத்ர - செயல்களுக்கான களம். நிலத்தின் சொந்தக்காரர் உரிமையாளர் ஆவார், நாம் ஆக்ரமித்திருப்பவர்கள். இரண்டு க்ஷேத்ரஜ்ஞ: இந்த சொத்தின் மீது இரண்டு நபர்கள் விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஆக்ரமித்திருப்பவர், மற்றவர் உரிமையாளர். இதேபோல், எங்கும், உலகின் எந்தப் பகுதியிலும், நீங்கள் எங்கு சென்றாலும், இந்த மூன்று விஷயங்களைக் காண்பீர்கள். ஒன்று, செயல்களுக்கான களம் மற்றும் மற்ற இருவர் - ஒரு ஆக்கிரமித்திருப்பவர் மற்றும் ஒரு உரிமையாளர் என்று பொருள். ஒருவர் இந்த மூன்று விஷயங்களைப் புரிந்து கொண்டால், இந்த மூன்று விஷயங்களையும் அவர் எல்லா இடங்களிலும் கவனிக்க முடியும், க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞயோர் யத் ஜ்ஞானம். இந்த அறிவு, செயல்பாட்டு களம் உள்ளது என்பதை எல்லா இடங்களிலும் புரிந்து கொள்ள இரண்டு நபர்கள் அந்த செயல்பாட்டு களத்தில் ஆர்வமாக உள்ளனர்... ஒருவர் உரிமையாளர், இன்னொருவர் ஆக்கிரமித்திருப்பவர். இந்த மூன்று விஷயங்களை மட்டுமே நீங்கள் கவனித்தால், பின்: தஜ்-ஜ்ஞானம் ஜ்ஞானம். அது அறிவு. இல்லையெனில் அனைத்து மோசடிகளும் முட்டாள்களும், அவ்வளவுதான். மதம் மம.

இது ஜ்ஞானம். ஆனால் தற்போதைய தருணத்தில் யாரிடமும் கேளுங்கள், யார் உரிமையாளர், யார் ஆக்கிரமித்திருப்பவர் மற்றும் செயல்பாட்டு களம் எது. நீங்கள் மூன்று விஷயங்களைக் கேட்டால், யாரும் பதிலளிக்க முடியாது. அதாவது தற்போது அனைவரும் மோசமானவர்கள். அல்லது அவர்களுக்குத் தெரியாது. க்ஷேத்ர-க்ஷேத்ரஜ்ஞயோர் யஜ்-ஜ்ஞானம், கிருஷ்ணர் சொல்கிறார், "செயல் களத்திற்கும் உரிமையாளருக்கும் இடையிலான இந்த உறவு."

விவசாயத்தைப் போலவே. நிலம் அரசு அல்லது ராஜாவுக்கு சொந்தமானது. அதை வாடகைக்கு அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது யாரோ ஒருவரால். மேலும் நிலம் செயல்பாட்டு களமாகும். எனவே கிருஷ்ணர் வழிநடத்துகிறார். கிருஷ்ணர் வழிநடத்துகிறார், மற்றும் வாழும் உயிரினம் உள்ளது. அவர் அந்த திசையின்படி செயல்படுகிறார்.

எனவே கிருஷ்ணர் மற்றும் வாழும் உயிரினம் இரண்டும் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றனர். அது உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. ஒன்று மரத்தின் பழத்தை சாப்பிடுகிறது, மற்றொன்று வெறுமனே பார்த்து கொண்டிருக்கிறது - சாட்சியாக. சாட்சி பறவை தான் கிருஷ்ணர். மேலும் மரத்தின் பழங்களை உண்ணும் பறவை - அவரே உயிரினம். மாயாவாதி தத்துவவாதிகள், அவர்கள் ஜீவ ஆன்மா, ஜீவாத்மா மற்றும் பரமாத்மா ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அவர்கள் அதை அறிவார்கள், ஆனால் அவர்கள் அத்வைதிகள் என்பதால், அவர்களின் கோட்பாட்டை நிலைநாட்ட, அவர்கள் இரண்டில்லை, ஒன்று தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இல்லை கிருஷ்ணர் இரண்டு உள்ளது என்று சொல்கிறார். ஒரு க்ஷேத்ரஜ்ஞ:, ஜீவாத்மா, மற்றொரு க்ஷேத்ரஜ்ஞ: அவர், கிருஷ்ணர். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், தனிப்பட்ட உயிரினத்திற்கு தனது க்ஷேத்ர அதாவது உடலைப் பற்றி மட்டுமே தெரியும், ஆனால் மற்ற உயிரினமான, நித்தியமான உயிரினம், அவர் எல்லா உடல்களையும் அறிவார்.