TA/Prabhupada 0809 - அரக்கரின் பைத்தியக்காரத்தன குறுக்குவழியே ஜனநாயகம்

Revision as of 14:39, 3 August 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0809 - in all Languages Category:TA-Quotes - 1974 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


740928 - Lecture SB 01.08.18 - Mayapur

எனவே குந்தி கிருஷ்ணரின் அத்தை, பிசிமா. வசுதேவரின் சகோதரி, குந்தி. குருக்ஷேத்ர போரை முடித்தபின், கிருஷ்ணர் மீண்டும் துவாரகைக்குச் செல்லும்போது, மஹாராஜா யுதிஷ்டிரரை அரியணையில் அமர்த்தியபின்... அவரது பணி... துரியோதனனை வெளியேற்ற வேண்டும் என்பதே அவரது நோக்கம், மேலும் யுதிஷ்டிரர் அரியணையில் அமர வேண்டும். தர்மா, தர்மராஜா.

அதுதான் கிருஷ்ணர் அல்லது கடவுளின் விருப்பம், நாட்டை நிர்வகிக்கும் தலைவர் மஹாராஜா யுதிஷ்டிரரைப் போலப் பக்தியுள்ளவராக இருக்க வேண்டும். அதுதான் திட்டம். துரதிஷ்டவசமாக, மக்கள் அதை விரும்பவில்லை. அவர்கள் இப்போது இந்த ஜனநாயகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஜனநாயகம் - 'அரக்கன்-ஆட்சி'. 'அரக்கன்-ஆட்சி' அதனின் சுருக்கமே 'ஜனநாயகம்.' எல்லா அரக்கர்களும் கொள்ளையர்களும் ஒன்றுகூடி, எப்படியோ வாக்குகள் பெற்று, இடத்தைப் பிடித்து, மேலும் அவர்களின் வேலை கொள்ளையடிப்பது தான். அவர்களின் வேலை கொள்ளையடிப்பது. இதைப் பற்றி நாம் அதிகம் பேசினால், அது மிகவும் சாதகமாக இருக்காது, ஆனால் சாஸ்திரத்தின் படி ... நாம் சாஸ்திரத்தின் படி பேசுகிறோம். ஜனநாயகம் என்பது திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் கூட்டமாகும். அதுதான் ஸ்ரீமத்-பாகவதத்தில் உள்ள அறிக்கை. தஸ்யு-தர்மபி (SB 12.2.8): அரசாங்கத்தினர் அனைவரும் தஸ்யுவாக இருப்பார்கள். தஸ்யு என்றால் கொள்ளையடிப்பவர் என்று பொருள். ஜேப்படி திருடர் அல்ல. ஜேப்படி திருட்டு, உங்களுக்குப் புரியவில்லை என்றால், உங்கள் சட்டைப் பையிலிருந்து எதையாவது எடுப்பது. மற்றும் கொள்ளையடிப்பவர் அல்லது தஸ்யு, அவர் உங்களைப் பலவந்தமாகப் பிடிக்கிறார், "உன் பணத்தை நீ கொடுக்காவிட்டால், நான் உன்னைக் கொன்றுவிடுவேன்." அவர்கள் தஸ்யு என்று அழைக்கப்படுகின்றனர்.

எனவே, கலியுகத்தில், அரசாங்கத்தினர் தஸ்யுவாக இருப்பார்கள். இது ஸ்ரீமத்-பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. தஸ்யு-தர்மபி (SB 12.2.8). உங்களால் புரிந்து கொள்ள முடியும், நாம் நடைமுறையில் பார்க்கலாம். உங்கள் பணத்தை உங்களால் வைத்திருக்க முடியாது. நீங்கள் கடின உழைப்பால் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் தங்கத்தை வைத்திருக்க முடியாது, நீங்கள் நகைகளை வைத்திருக்க முடியாது, பணத்தை வைத்திருக்க முடியாது. அவர்கள் அதைச் சட்டங்களால் எடுத்துச் செல்வார்கள். எனவேதான் அவர்களே சட்டத்தை உருவாக்குகிறார்கள்... யுதிஷ்டிர மஹாராஜா இதற்கு நேர்மாறாக இருந்தார். ஒவ்வொரு குடிமகனும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண விரும்பினார். எப்படியெனில் அதிக வெப்பம் மற்றும் அதிகப்படியான குளிரால் கூட அவர்கள் துன்பம் அடைய கூடாது. அதி-வியாதி. அவர்கள் எந்த நோயாலும் பாதிக்கப்படக் கூடாது. அவர்கள் அதிகப்படியான தட்ப வெப்பநிலையால் பாதிக்கப்ப்படக் கூடாது. மிகவும் நன்றாகச் சாப்பிட வேண்டும், மேலும் உயிர் மற்றும் உடைமையைப் பாதுகாப்பாக உணர வேண்டும். அதுதான் யுதிஷ்டிர மஹாராஜா. யுதிஷ்டிர மஹாராஜா மட்டுமல்ல. கிட்டத்தட்ட எல்லா மன்னர்களும், அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள்.

எனவே கிருஷ்ணர் தான் உண்மையான ராஜா. ஏனென்றால் அவர் இங்கே புருஷம் ஆத்யம் ஈஷ்வரம் என்று கூறப்படுகிறார் (SB 1.8.18). ஈஷ்வரம் என்றால் கட்டுப்படுத்துபவர் என்று பொருள். அவர்தான் உண்மையில் கட்டுப்பாட்டாளர். இது பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது. மயாத்யக்ஷேண. மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம் (பகவத் கீதை 9.10). இந்தப் பௌதிக இயற்கையில் கூட, அற்புதமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, அது கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் பகவத்-கீதை, ஸ்ரீமத்-பாகவதம் மற்றும் பிற வேத இலக்கியங்கைளை படிக்கிறோம். அதனின் நோக்கம் என்ன? நோக்கம் - வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யம் (பகவத் கீதை 15.15). கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம். நீங்கள் கிருஷ்ணரை புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் படிக்கும் பெயரளவிலாான வேதங்கள் வேதாந்தங்கள் உபநிஷத்கள், அவை பயனற்ற கால விரயமே. எனவே இங்குக் குந்தி நேரடியாகக் கூறுகிறார் "எனதன்பு கிருஷ்ணா, நீங்கள் ஆத்யம் புருஷம், ஆதி புருஷர். மற்றும் ஈஷ்வரம். நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. நீங்கள் தான் முழுமுதற் கட்டுப்பாட்டாளர்." இது தான் கிருஷ்ணரை பற்றிய புரிதல். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: (ப்₃ரஹ்ம ஸம்ஹித 5.1) எல்லோரும் கட்டுப்பாட்டாளர், ஆனால் கிருஷ்ணர் முழுமுதற் கட்டுப்பாட்டாளர்.