TA/Prabhupada 0823 - தன்னிச்சையாய் கிருஷ்ண உணர்வு கொள்வது இந்திய தேசத்தில் பிறப்புரிமையாய் உள்ளது

Revision as of 04:59, 19 July 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0823 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 3.28.20 -- Nairobi, October 30, 1975

ஹரிகேஷா: மொழிபெயர்ப்பு: "பகவானுடைய அழிவற்ற ரூபத்தில் தன் மனதை நிலைநிறுத்தும், யோகி, பகவானுடைய அங்கங்களை ஒட்டுமொத்தமாக பார்ப்பதை விடுத்து, ஒவ்வொரு அங்கத்திலும் தன் மனதை நிறுத்த வேண்டும்."

பிரபுபாதர்:

தஸ்மில் லப்த-பதம் சித்தம்
ஸர்வாவயவ-ஸம்ஸ்திதம்
விலக்ஷ்யைகத்ர ஸம்யுஜ்யாத்
அண்கே பகவதோ முனி:
(ஸ்ரீ.பா. 3.28.02).

இதனை நாம் பலமுறை விளக்கி உள்ளோம், அர்ச்ச மூர்த்தி... அயோக்கியத்தனமான மனிதர்களால் அர்ச்ச மூர்த்தியைப் புரிந்துகொள்ள முடியாது. "இவர்கள் சிலையை வழிபடுகின்றனர்" என்றே அவர்கள் நினைப்பர். இந்துக்களில் கூட வேதங்களை பின்பற்றுவோர் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், "விக்ரகங்களை கோவில்களில் வழிபடுவதன் அவசியம் என்ன?" என்று கேட்பதுண்டு. இந்தியாவில் கோவில் வழிபாட்டினை நிறுத்துவதற்கு அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்தனர். சிலகாலம் அதற்கு ஆதாரம் இருந்தாலும் இப்போது அது முடிந்து விட்டது. அதாவது... கோவில்களில் விக்ரகங்களை வழிபடுவது வேண்டாம் என்ற அயோக்கியத்தனமான பிரச்சாரம் முடிந்துவிட்டது. அதனைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார், கோவிலைத் தவிர என்று அவர்கள் எண்ணுகின்றனர். அது அவர்களுடைய பார்வை. எல்லா இடங்களிலும் இருக்கும் கடவுள் கோவிலில் ஏன் இருக்கக்கூடாது? இல்லை அது அவர்களுடைய அறியாமை. அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடவுள் எங்கும் இருக்கிறார், ஆனால் கோவிலில் இல்லை. இதுவே அவர்களுடைய அறிவு, அயோக்கியர்கள். எனவே நாம் ஆசாரியரை பின்பற்ற வேண்டும். ஆசார்யவான் புருஷோ வேத (சாந்தோக்ய உபனிஷத் 6.14.2): ஆச்சாரியனை ஏற்றுக் கொண்டவன்... சாஸ்திரங்களை அறிந்தவர், சாஸ்திரங்களில் விதிமுறைகளின்படி வாழ்வார், அவரே ஆச்சாரியார். அசிநோதி ஷாஸ்த்ரார்த:.

எனவே அனைத்து ஆச்சாரியர்களும்... இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. மிக பிரம்மாண்டமான கோவில்கள், முக்கியமாக தென்னிந்தியாவில் உள்ளன. சிலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒவ்வொரு கோவிலும் மாபெரும் கோட்டை போல இருக்கும். இந்தக் கோவில்கள் அனைத்தையும் நிறுவியது ஆச்சாரியர்கள், தன் இஷ்டம் போல மக்கள் நிறுவியது அல்ல. இவற்றில் மிக முக்கியமாக ஒரு கோவில் உள்ளது அதுதான் பாலாஜி கோவில், திருப்பதி, திருமலை. மக்கள் அதிகம் செல்கின்றனர், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக அங்கு பணம் சேருகிறது. கோவிலுக்கு செல்வதை எதிர்த்து தீவிரப் பிரச்சாரம் நடந்த போதிலும் மக்கள்... அதுவே இந்தியாவில் உள்ள பிறப்புரிமை. இயல்பாகவே மக்கள் கிருஷ்ண உணர்வுடன் உள்ளனர். இயல்பாகவே. எனவே அனைத்து தேவர்களும் இந்தியாவில் பிறவி எடுக்க விரும்புகின்றனர். இயல்பாகவே.

கோவில் வழிபாடு முக்கியமானது. கோவில் வழிபாட்டுக்கும் விக்ரக வழிபாட்டுக்கும் எதிராக உள்ளவர்கள், புத்திசாலிகள் அல்ல - மூடர்கள். மூடா.. மறுபடியும் அதே சொல்.

ந மாம் துஷ்க்ருதினோ மூடா:
ப்ரபத்யந்தே நராதமா:
மாயயாபஹ்ருத-ஜ்ஞானா
ஆஸுரி பாவம் ஆஷ்ரிதா:
(ப.கீ. 7.15).

மாயயாபஹ்ருத ஜ்ஞானா: "கடவுள் எங்கும் இருக்கிறார்" என்று பெரிய பெரிய வார்த்தைகளை அவர்கள் பேசுகின்றனர், ஆனால் அவர்கள் கோவில் வழிபாட்டை மறுக்கின்றனர். அபஹ்ருத-ஜ்ஞானா இந்த ஞானம் பூரணம் அற்றது. ஒரு சாதாரண மனிதன் கூட, "கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால், கோவிலில் ஏன் இருக்க மாட்டார்?" என்று சொல்லிவிட முடியும்.